Advertisment

2022 பட்ஜெட் கண்ணோட்டம்

கொள்கை உருவாக்கத்தில் குடிமக்களை முன்னணிக்கு கொண்டு வருவதற்கான மாற்றங்களை உருவாக்குவதற்கான பெரும் யோசனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசின் முயற்சிகளை இது வெளிப்படுத்துகிறது.

author-image
WebDesk
New Update
G Kishan Reddy, The vision in Budget 2022

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

G Kishan Reddy 

Advertisment

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்த 2022-23ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இந்தியாவின் மிகவும் மங்களகரமான தொடக்கத்துக்கான வரைபடம் என்றுஅழைப்பது பொருத்தமானதாக இருக்கும். 75 வது சுதந்திரதினத்தை இந்தியா கொண்டாடும் வேளையில், அடுத்த 25 ஆண்டுகளில் ஒரு உலகளாவிய சக்தியாக அதன் அந்தஸ்தை உருவாக்குவதைக் கருத்தில்கொண்டு, சர்வதேச மேலாதிக்கம் மற்றும் வளர்ச்சியை நோக்கி இந்தியாவின் பாதைக்கான வழிகாட்டும் கைவிளக்காக இந்த நிதிநிலை அறிக்கை பணியாற்றும்.

இதுவரை உள்ள செயல்முறையில் மாற்றத்தை உருவாக்குவதற்கான அசைக்கமுடியாத தேச பக்தராக பிரதமர் நரேந்திரமோடி திகழ்கிறார். கொள்கை உருவாக்கத்தில் குடிமக்களை முன்னணிக்கு கொண்டு வருவதற்கான ஆட்சிமுறைக்கு அவர் யோசனைகளை கொண்டு வருகிறார்.

அரசின் கொள்கைகள் மற்றும் செலவினங்களை வடிவமைக்கும்போது அவை மக்களுக்கு வசதியான மற்றும் புதிய யோசனைகளை கொண்டு வருகிறது. இந்த பாரம்பர்யத்தைத்தான் மத்திய நிதி நிலை அறிக்கை தொடர்ந்து பின்பற்றுகின்றது.

லட்சியமான, விரிவான தெளிவான சிறந்த நேரமாக மோடி அரசு இலக்கை நிர்ணயித்துள்ளது. முதலாவதாக வளர்ச்சி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நலனில் கவனம் செலுத்தப்படுகிறது. இரண்டாவதாக தொழில்நுட்பத்தோடு இணைந்த வளர்ச்சியாக இந்தியா பார்க்கப்பட வேண்டும் என்பதற்காக பருவநிலை மாற்றத்துக்கான செயல் திட்டங்களுடன் ஒரு விரிவான ஆற்றல் மாற்றத் திட்டத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது. . மூன்றாவதாக பொது மூலதன முதலீடாக திரட்ட ஒரு நல்லொழுக்க சுழற்சியாக தனியார் முதலீட்டை அரசு முன்னெடுக்கிறது.

புதுமையான நிதி முதலீடுகள் மற்றும் உற்பத்தி திறன் விரிவாக்கம் மற்றும் வளர்ச்சியை நோக்கிய துறைகளில் கவனம் செலுத்துதல், சமூகத்தின் கடைநிலையில் உள்ள மக்களுக்கும் வளர்ச்சி எனும் பலன் கிடைக்கும் வகையிலான அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி,பிரதமரின் பன்முக மாதிரி இணைப்புக்கான தேசிய (PM Gati Shakti plan)பெருந்திட்டம் ஆகிய இந்த குறிக்கோள்களை நான்கு முன்னுரிமைகள் வரையறுக்கின்றன. இந்த குறிக்கோள்கள் மற்றும் முன்னுரிமைகளைக் கொண்ட அரசின் தொலைநோக்குப் பார்வையை மிகவும் திறமையாகவும், திறம்படவும் நிதிநிலை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இந்த நிதிநிலை அறிக்கையானது. வலுவான கட்டமைப்பை கட்டமைப்பதற்கான வலுவான உந்துதலைக் கொடுக்கிறது. பிரதமரின் பன்முக மாதிரி இணைப்புக்கான தேசிய (PM Gati Shakti plan)பெருந்திட்டதின் கட்டமைப்பில், பட்ஜெட் மூலதன செலவு 35சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சாலைகள், ரயில்கள், துறைமுகங்கள், விமானநிலையங்கள், பெரும் போக்குவரத்து, நீர் வழிகள் மற்றும் போக்குவரத்து கட்டமைப்பு ஆகிய ஏழு துறைகள் ரூ.7.5 லட்சம் கோடி அரசு சொத்து கட்டமைப்பை உந்தித் தள்ளுவதாக இருக்கும்.

தொழிலக வளர்ச்சி நோக்கத்துடன் கூடியதாக இந்தியாவின் வளர்ச்சி இருக்க வேண்டும் என்ற மகத்தான பங்களிப்பை மற்றொரு விஷயம் வழங்கும அரசால் செயலாக்கப்படும் . உற்பத்தியோடு இணைந்த 14 ஊக்கத்தொகை திட்டங்கனின் பலனாக ரூ.30 லட்சம் கோடி அளவுக்கு கூடுதல் தொழிலக உற்பத்தி, 60 லட்சம் புதிய வேலைவாப்புகள் உருவாகும், சூரிய சக்தி தொழிலக உற்பத்தியோடு இணைந்த ஊக்கத்தொகை திட்டத்துக்கு ரூ.19,500 கோடி கூடுதல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தவிர இது, 2030ம் ஆண்டுக்குள் 280 ஜிகாவாட் சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பதற்கான கட்டமைப்புகள் அமைப்பதற்கு உதவும்.

இந்த நிதிநிலை அறிக்கையானது, பெரும் அளவிலான கட்டமைப்பு மற்றும் தொழிலக நோக்கத்துடன் கூடிய திட்டங்களை மட்டும் கொண்டிருக்கவில்லை. கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு மோசமான சூழல்களை சந்தித்த குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிலகங்களுக்கு உதவவும் இந்த அரசானது ஓய்வின்றி உழைத்து வருகிறது. விருந்தோம்பல் மற்றும்அது சார்ந்த துறைகளுக்கு அவசர கடன் வரி உத்தரவாதத் திட்டத்தின் கீழ் கூடுதலாக ரூ.50,000 கோடி தரப்பட்டது. பாதிக்கப்பட்ட துறைக்கு இது பயனளிக்கும். சுற்றுலாத்துறை மீள்வதற்கு வணிக செயல்பாடுகள் வலுவடைய உதவும்.

கிடைக்கக்கூடிய கணிப்புகள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு நிலவியலுக்கு ஏற்ற குறிப்பிட்ட இலக்குடன் கூடிய வளர்ச்சி திட்டங்களை உருவாக்குவதும் நிதிநிலை அறிக்கையின் இன்னொரு வியப்பான அம்சமாகும். புதிய திட்டத்தின் படி, வடகிழக்கு கவுன்சில் வாயிலாக வடகிழக்கு மாநிலங்களுக்கான பிரதமரின் அபிவிருத்தி முயற்சி என்ற திட்டத்தை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பிரதமரின் பன்முக மாதிரி இணைப்புக்கான தேசிய (PM Gati Shakti plan)பெருந்திட்டதின் கொள்கையின்படி இந்த திட்டத்துக்கு உள்ளூர் கட்டமைப்புக்கு நிதி உதவி அளிக்கப்படும்.

எனினும், மாநிலங்களே முன்னுரிமை திட்டங்களை தேர்வு செய்யும் பணியிலும், ஈடுபடலாம். ரூ.1500 கோடி அடிப்படையிலான இந்த திட்டத்தை தீர்மானித்து செயல்படுத்தும் தொடக்கம் முதல் முடிவு வரை அனைத்தும் பரவலாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டமானது உள்ளூர் அணுகல் தன்மையை நல்ல முறையில் உருவாக்குவதுடன், அந்த பிராந்தியத்தில் வேலைவாய்ப்பையும் கொண்டு வரும். உண்மையான அதிகாரப் பகிர்வு மற்றும் உள்ளூர் அரசாங்கங்களுக்கு அதிகாரமளித்தலையும் இது வெளிப்படுத்துகிறது.

மாநிலங்களுக்கான உற்பத்தி பொருளாதார முதலீடுகளுக்கான ரூ.1.05 லட்சம் கோடி நிதி ஆதரவானது, மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பின் உண்மையான உணர்வை எதிரொலிக்கிறது. மாநில அரசின் கடனுக்கு அப்பாற்பட்டதாக 50 ஆண்டுகளுக்கு வட்டி இல்லாத கடனாக இது இருக்கும். உண்மையான மைய ஆட்சியினை வெளிப்படுத்துவதாகவும் எந்த வித‍ அரசியல் சிந்தனையும் இல்லாததாக இருக்கும். நகர்ப்புற திட்டங்களில் மத்திய அரசின் ஆதரவு மாநிலங்களுக்கு பலன் தருவதாக இருக்கும். வாழ்க்கை வசதியை மேம்படுத்துவதற்கான திறவுகோலாக.அது அடையாளம் காணப்படும்.

அடல் பிஹாரி வாஜ்பாய் அரசால் முன் வைக்கப்பட்ட நதிகளை இணைத்தல் திட்டமானது ஒரு உருமாற்றத்துக்கான யோசனையாகும். அது இப்போது மோடி அரசால் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. தமங்கங்கா-பிஞ்சல், பர்-தபி-நர்மதா, கோதாவரி-கிருஷ்ணா, கிருஷ்ணா-பெண்ணார் மற்றும் பெண்ணார்-காவேரி என்ற பெயரிலான ஐந்து ஆறுகளை இணைப்பதற்கான வரைவு திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் தென் இந்திய மாநிலங்களுக்கு தொடர்ந்து பயனளிப்பதாக இருக்கும்.

டிஜிட்டல் இந்தியா, ஆனால் இது டிஜிட்டல் முதல் இந்தியாவாக, அது வங்கியாக, கல்வி, விவசாயம், உடல் நலம் அல்லது திறன் மேம்பாடு ஆகியவையாக இருந்தாலும் , இந்தியாவின் சமூக பொருளாதார மாற்றத்தின் முதுகெலும்பாக டிஜிட்டல் இருக்கும். ஒவ்வொரு துறைக்காகவும், எப்படி முக்கியமான துறைகளில் எல்லாம் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த முடியும் என்பதை குறிப்பிட்ட இடையீடுகள் மற்றும் ஒரு எதிர்கால கண்ணோட்டத்தை நிதிநிலை அறிக்கை வழங்குகிறது.

வரிவிதிப்பு முன்மொழிவுகள் ஆபத்தான தொற்றுநோய் நிலைமையை சமநிலைப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் பார்வை மற்றும் விளிம்புகளில் நிலையான முன்னேற்றங்களின் அவசியத்தை பிரதிபலிக்கின்றன. 15 சதவிகிதமாக மூலதன ஆதாயம் கட்டுப்படுத்தப்படுவது இந்திய ஸ்டார்ட் அப்-களுக்கான ஏஞ்சல் முதலீடுகளின் அலையில் பாய்ச்சலை ஏற்படுத்த உதவும். வளர்ந்து வரும் தொழில்களில் முதலீடு செய்ய கூடியவர்களுக்கு, ஒரு புதிய சொத்து வகையினை முன்னெடுக்க இது உதவும்.

பயணம், சுற்றுலா செயல்பாடுகள் அதிகரிக்கும்பட்சத்தில் சேவை பொருளாதாரம் மேலும் செயல்பாட்டுக்கு வரும். ஜிஎஸ்டி வரி வசூல் தொடர்ந்து ஒரு வலுவான அடித்தளத்தை உருவாக்கும். மத்திய நிதி அமைச்சர், தற்போதைய சூழலில் யதார்த்தமான நிதி பற்றாக்குறை இலக்கு முன்மொழிவை கொடுத்திருக்கிறார். இது உண்மையிலேயே பாராட்டத்தக்க சாதனை.

நிதி நிலை அறிக்கையானது கணக்கு வழக்கு ஆவணமாக மட்டும் இருக்க வேண்டியதில்லை என்பதை மோடி அரசு வெளிப்படுத்தியிருக்கிறது. தேசத்தைக் கட்டமைக்கும் பொறியியல் வரைபடமாகவும் அவை இருக்கலாம்.

இந்த பத்தி முதலில் 4ம் தேதியிட்ட அச்சு இதழில் ‘Ideas in the numbers’. என்ற த லைப்பில் வெளியானது. இந்த கட்டுரையின் எழுத்தாளர் மத்திய அரசின் வடகிழக்கு பிராந்தியத்துக்கான கலாசாரம், சுற்றுலா வளர்ச்சித்துறை அமைச்சர் ஆவார்.

தமிழில்; ரமணி

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment