Advertisment

Tahir Mahmood Writes: எனது நண்பர் ராம் ஜெத்மலானி

Tribute to Ram Jethmalani: எனது பால்ய நண்பர் ராம் ஜெத்மலானி மறுமை வாழ்க்கைக்குள் சென்றுவிட்டார். நாங்கள் ஒருவரை ஒருவர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக அறிந்திருந்தோம். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல விஷயங்களில் மிகவும் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருந்தோம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tribute to Ram Jethmalani, Ram Jethmalani passed, Ram Jethmalain no more,ராம் ஜெத்மலானிக்கு அஞ்சலி, ராம் ஜெத்மலானி மறைவு, Senior Lawyer Ram Jethmalani, Tahir Mahmood writes tribute to Ram Jethmalani, Tahir Mahmood writes My Friend Ram

Tribute to Ram Jethmalani, Ram Jethmalani passed, Ram Jethmalain no more,ராம் ஜெத்மலானிக்கு அஞ்சலி, ராம் ஜெத்மலானி மறைவு, Senior Lawyer Ram Jethmalani, Tahir Mahmood writes tribute to Ram Jethmalani, Tahir Mahmood writes My Friend Ram

தஹிர் மஹ்மூத், எழுத்தாளர்,

Advertisment

தேசிய சிறுபாண்மை ஆணையத்தின் முன்னாள் தலைவர்,

இந்திய சட்ட ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர்

Tribute to Ram Jethmalani: எனது பால்ய நண்பர் ராம் ஜெத்மலானி மறுமை வாழ்க்கைக்குள் சென்றுவிட்டார். நாங்கள் ஒருவரை ஒருவர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக அறிந்திருந்தோம். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல விஷயங்களில் மிகவும் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருந்தோம். கல்வி கருத்தரங்குகள், கூட்டங்கள் மற்றும் பட்டறைகளில் நாங்கள் வேறுபட்டோம். அவை எப்போதும் மிகவும் உயர்ந்த நாகரிகமான முறையில் இருந்தது. அவை சட்ட சிக்கல்கள், நுணுக்கங்கள் குறிப்பாக அரசியல் தொனியிலானவை. இந்த உரையாடல்கள் பொதுவாக உடன்படாத ஒப்பந்தத்துடன் முடிவடைந்தன.

1977 ஆம் ஆண்டில் நான் கலந்துகொண்ட ஒரு குடும்ப சட்டம் பற்றிய மாநாட்டில் ராமுடன் எனது முதல் கல்வி சந்திப்பு நடந்தது. பொது சிவில் சட்டம் தொடர்பான அரசியலமைப்பு விதிகளை அமல்படுத்துவதற்கான கோரிக்கையை ஆர்வத்துடன் ஆதரித்த அவர், சிறுபாண்மையினர் இந்த நாட்டில் வாழ்வதற்கான விலையாக அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற வாதத்துடன் தனது உரையை முடித்தார். அடுத்த பேச்சாளரை அழைப்பதர்கு முன்பு நான் அவரை எதிர்கொண்டு, சிறுபாண்மையினர் இந்த நாட்டில் வாழ்வது மட்டுமல்ல, அவர்கள் அதன் சமமான குடிமக்கள், அவர்களுக்கு அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள அனைத்து அடிப்படை உரிமைகளுக்கும் உரிமை உண்டு என்று கூறினேன். தனது பொருத்தமற்ற கருத்தை உணர்ந்த ராம் மேடைக்கு திரும்பச் சென்று, அரசியலமைப்பு கொள்கைகளை மதிக்க வேண்டும் என்ற கடமையின் ஒரு பகுதியாக சிறுபாண்மையினர் பொது சிவில் சட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தான் சொல்ல விரும்புவதாக விளக்கினார். ஏழு ஆண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அக்டோபர் 1985-இல் அவரும் நானும் தி இந்தியன் எக்ஸ்பிரஸின் பத்தியில் பொது சிவில் சட்டம் பற்றிய பிரச்னையில் ஒரு உரையாடலை மேற்கொண்டோம்.

1999 ஆம் ஆண்டில், நான் தேசிய சிறுபாண்மையினர் ஆணையத்தின் தலைவராக இருந்தபோது, பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவரை சட்ட அமைச்சராக நியமித்தார். ராம் விரைவிலேயே தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்துடன் கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்தினார். அவர் லக்னோவில் எனது வகுப்பு மாணவரும் பழைய நண்பரும் ஆவார். இதில் ராம் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த பிரச்னையில் நான் யாரை ஆதரிப்பது என்று தீர்மானிக்க முடியாமல் அமைதியாக இருந்தேன்.

ராம் தனது வழக்கறிஞர் பணி பயிற்சியை கராச்சி நகரின் முன்னணி வழக்கறிஞர் அல்லாஹ் பக்‌ஷ் பிரோஹியுடன் தொடங்கினார். அவரைப் போலவே அவர் அவரது நாட்டின் சட்ட அமைச்சராக இருந்தார். ராம் இந்தியாவுக்குச் சென்ற பிறகு, பம்பாய் கல்லூரியில் சட்டம் கற்பித்தார். பின்னர், அவர் டெல்லிக்கு சென்று நான்கு முறை இந்திய பார் கவுன்சிலின் தலைவராக பணியாற்றினார். எமர்ஜென்ஸியின் இருண்ட நாட்களில் ராம் அன்றைய வலிமைமிக்க பிரதமரை விமர்சித்ததற்காக புகழ் பெற்றார். பிறகு அவர் விரைவில் அரசியலில் நுழைந்தார். 2004 ஆம் ஆண்டில், நாடாளுமன்றத் தேர்தலில் ராம் பிரதமர் வாஜ்பாயை எதிர்ப்பதற்கு லக்னோவில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

வழக்கறிஞர் தொழிலில் ராம், அரசியல்வாதிகள், ஊழல்வாதிகள், குற்றம்சட்டப்பட்டவர்கள் மற்றும் பலர் என எல்லா வகையான மக்களையும் பாதுகாப்பதில் அவர் புகழ்பெற்றார். அவருடைய வாடிக்கையாளர்களில் கடற்படை கம்மாண்டர் கே.எம்.நானாவதி, பாஜக தலைவர் எல்.கே.அத்வானி, யோகா குரு பாபா ராம்தேவ், ஆந்திரப் பிரதேசத்தின் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி, பீகாரின் லாலுபிரசாத் யாதவ், பங்குசந்தை தரகர் ஹர்ஷத் மேத்தா, கேத்தன் பரேக், மாஃபியா தலைவர் ஹாஜி மஸ்தான், காஷ்மீர் பிரிவினைவாதி அப்சல் குரு, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகள் ஆகியோர் அடங்குவர். ராம் ஒரு முறை கூறினார்: “யாரை பாதுகாக்க வேண்டும் என்பதை என் மனசாட்சிக்கு ஏற்ப நான் தீர்மானிக்கிறேன். ஒரு நபரை குற்றவாளி என்று மக்கள் நம்புகிறார்கள் என்ற அடிப்படையில் அவரை பாதுகாக்க மறுக்கும் ஒரு வழக்கறிஞர், தொழில் முறையில் தவறாக நடந்துகொள்ளும் குற்றவாளியாகிறார்.”

எனது வழிகாட்டுதலின் கீழ் பி.எச்.டி ஆய்வில் சேர விரும்பும் மாணவர்களுக்கு அவரது வழக்கு சுருக்கங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்ய நான் அடிக்கடி அறிவுறுத்தினேன். ஆனால், அவர்கள் அவரது சட்ட புத்திசாலித்தனம் மற்றும் அவர் கையாண்ட வழக்குகளின் தன்மை ஆகிய இரண்டையும் மிகைப்படுத்தினர்.

2013 ஆம் ஆண்டு அமிட்டி பல்கலைக்கழகம் ராமுக்கு சட்டத்தில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

பல்கலைக்கழகத்தின் நிறுவனர்-தலைவர் அசோக் சவுகான் “அவர் இன்னும் நூறு ஆண்டுகள் வாழ வேண்டுமென்று நாங்கள் பிரார்த்திக்கிறோம்” என்ற வார்த்தைகளுடன் தனது உரையை முடித்தார். உடனடியாக ராம் “கடவுள் நியாயமான ஜெபங்களை மட்டுமே கேட்கிறார்” என்று பதிலளித்தார்.

ராமின் வெற்றிகள் மற்றும் தோல்விகளின் கதையை சொல்ல கேட்க ஆர்வமுள்ளவர்களுக்கு, அவர் இரண்டு புத்தகங்களை விட்டுச் சென்றுள்ளார். அவை ஓரளவு வரலாற்று நிகழ்வுகளைக் குறிப்பிடும் சுயசரிதை தன்மையைக் கொண்டுள்ளன. அவற்றில் முதலாவது ஆர்வத்தை தூண்டும்விதமாக ஒரு கலகக்காரனின் மனசாட்சி (Conscience of a Maverick) என்ற தலைப்பில் 2007 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, விமர்சனங்களை எதிர்கொள்ள அவர், மாறாத, கவலைப்படாத கலகக்காரன் (Maverick Unchanged, Unrepentant) என்ற மற்றொரு புத்தகத்தை எழுதினார்.

அந்த புத்தக அட்டையின் குறிப்பில், ஆசிரியரின் ஆளுமை பற்றி மறுக்க முடியாத உண்மையைப் பேசியது: ராம் ஜெத்மலானி அரசியல் விஷயங்களில் அவருடைய நேர்மைக்காக மரியாதையும் அச்சமும் உள்ளது. பலருக்கு அவர் ஒரு புதிராகவே இருக்கிறார். சர்ச்சை அவரை விட்டுவிலகுவதுமில்லை மிரட்டுவதும் இல்லை.” ராம் உண்மையில் தனது வாழ்க்கையின் கடைசி மூச்சு வரை புதிராகவே இருந்தார்.

 

அவரது ஆத்மா அமைதி அடையட்டும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment