Faizan Mustafa
இந்த கட்டுரையின் ஆசிரியர், ஐதராபாத்தில் உள்ள நல்சார் சட்ட பல்கலைகழகத்தின் துணைவேந்தர் ஆவார்.
Triple Talak Bill 2019: அதிகம் பேசப்பட்ட முத்தலாக் தடை மசோதா நாடாளமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப் பட்டுள்ளது . இந்தியா வின் சட்டத் துறை அமைச்சர் இந்த மசோதா விவாதத்தின் போது மூன்று முக்கியக் காரணங்களை தெரிவித்தார்.அதில் முதலாவதாக, இந்த மசோதா பாலினச் சமனிலைக்கு கிடைத்த நீதி . இரண்டாவதாக , கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் 473 முத்தலாக் விவாகரத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மூன்றாவதாக, அநேக இஸ்லாமிய நாடுகளிலும் முத்தலாக் குற்றமாகத்தான் உள்ளது.
இந்த மூன்று வாதங்களிலும் அழுத்தம் இல்லை என்பது ரொம்பத் தெளிவாகவே தெரிகிறது . முத்தலாக் விவாகரத்தையும் ,பாலினச் சமனிலைக்கும் ஒன்றுபடுத்தவது நாம் செய்த மிகப் பெரிய அரசியல் பிழையாகும். மேலும், இரண்டு வருடங்களில் வெறும் 473 வழக்குதான் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதிலிருந்தே இந்த மசோதா பெரிய பிரச்சனையைக் கையாளப்போவதில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
இந்திய அமைச்சர் ஒருவர் இஸ்லாமிய நாடுகளை ஓர் எடுத்துக் காட்டாய் எடுத்திருப்பது முற்றிலும் வேடிக்கையான விஷயமாகத்தான் இருக்கிறது. ஏனெனில் அநேக இஸ்லாமிய நாடுகளின் சட்டம் பாலினச் சமனிலைக்கு எதிர்மறையாகவே உள்ளன. உதாரணமாக, எண்ணற்ற இஸ்லாமியா நாடுகளில் ஒரு இஸ்லாமிய பெண் யூதர்களையோ,கிருத்துவர்களையோ திருமணம் செய்யக் கூடாது . சிலவற்றில் , இஸ்லாமிய பெண் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு கணவர்களின் அனுமதி தேவை என்கிற சட்டங்கள் கூட உள்ளன. நீதி மன்றங்களில் பெண்களின் சாட்சியின் அளவு ஆண்களின் பாதி அளவாய் உள்ளன. இன்னும் சில நாடுகளில், கற்பழித்த பெண்ணை திருமணம் செய்ய ஒப்புக் கொண்டால் அவனுக்கு தண்டனைக் கூட கிடையாது .குழந்தைகளின் காவல் மற்றும் பராமரிப்பு விஷயங்களில் கூட , இஸ்லாம் நாட்டின் சட்டங்கள் பிற்போக்குத்தனமாக இருக்கின்றன. உதாரணமாக , அங்குள்ள தாய்மார்கள் தார்மீக பொறுப்பாளராக ஒரு மகனுக்கு 10 வயதை எட்டும் வரை,ஒரு மகளுக்கு 12 வயதை அடையும் வரை மட்டுமே இருக்க முடியும். அவள் மறுமணம் செய்தால் குழைந்தைக்கான தார்மீக பொறுப்பை அவள் அன்றே இழந்துவிடுவாள். அங்கே சமய எதிர்ப்பும்,தகாத உறவையும் மரணத்தால் தண்டிக்கிறார்கள்.
முழுமையான தேவை இல்லாதபோது சட்டத்தால் உருவாக்கக்கூடிய எல்லா தண்டனைகளையும் கொடுங்கோல் தன்மை என்கிறது மான்டெஸ்கியூ வின் அறிவியல் சித்தாந்தங்கள். உண்மையில், குற்றவியல் சட்டம் ஒரு "கடைசி முயற்சியாக" , "மிகவும் கண்டிக்கத்தக்க தவறுகளுக்கு" மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். இந்த வகையில் முத்தலாக் தடை மசோதா கொடுங்கோல் தன்மையின் ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும்.
இன்றைய காலங்களில் குற்றவியல் நீதி சம்மந்தமான நம்மில் இருக்கும் மூன்று விவாதங்களை மட்டும் நன்கு கவனியுங்கள் . முதலாவதாக, நாம் திருமண வாழ்க்கையின் நம்பிக்கைக்கு சம்மந்தப்பட்ட தகாத உறவை நாம் குற்றவியல் பட்டியலில் இருந்து தூக்கிவிட்டோம். இரண்டாவதாக, பல நூற்றாண்டுகளாய் சட்டத்திலும்,சமயத்தாலும் தண்டித்த ஓரினச் சேர்க்கையை நாம் குற்றவியல் பட்டியலிலிருந்து தூக்கிவிட்டோம். மூன்றாவதாக, மனைவியின் சம்மதமின்றி அவளை உடலுறவுக்கு கட்டாயப்படுத்தும் marital rape-ஐ நாம் இன்னும் கிரிமினல் குற்றமாக்காமல் உள்ளோம்.
ஒரு நாகரிக சட்ட அமைப்பு மத ஒழுக்கத்தை செயல்படுத்தக்கூடாது.பாவ செயல்களை போக்குவதற்காக நமது சட்டங்கள் இல்லை. இங்கிலாந்தில் உள்ள வொல்ஃபெண்டன் கமிட்டி அறிக்கை (1957) இவ்வாறு தெளிவாகக் கூறுகிறது : “ஒரு சமூகம் இயல்பாக குற்றங்களையும் பாவங்களையும் ஒன்றினைக்காத வரையில் எந்த ஒரு தனி நபரின் அறநெறி மற்றும் ஒழுக்கக்கேடுகளை வரையறுப்பது சட்டத்தின் கையில் இல்லை ”என்கிறது.
இஸ்லாமிய விதிகளின் படி முத்தலாக் ஒரு பாவச் செயல் என்பதை நமது பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கமே ஒப்புக் கொண்டுள்ளதை ஷயாரா பானோ வழக்கில் வாக்குமூலம் கொடுத்துள்ளது.
இருந்தாலும் முத்தலாக்கை கிரிமினல் சட்டத்தின் மூலம் இந்த அரசு அந்த செயலைத் தண்டிக்கிறது.
இந்த செயல் மத ராஜ்யத்திற்க்கு வழி வகுக்கிறதா? ஏனெனில் மத ராஜ்யத்தில் தான் பாவத்திற்க்கான தண்டனை வழங்கப்படும்.
இன்னொரு கோணங்களில் பார்த்தால் , முத்தலாக் ஒரு விசித்திரமான வழக்கு . தனது மத பிரிவு அர்தத்தின் படி, தனது திருமணம் முடிவுக்கு வந்துவிட்டது என்று அந்த இஸ்லாம் பெண் நினைத்தாலும், இந்த சட்டத்தால் அவளின் திருமண உறவுகளைத் தொடரக் கட்டாயப்படுத்தப்படுகிறது. இது கொடுங்கோன்மையைத் தவிர வேறொன்றுமில்லை. இது தனிப்பட்ட பெண்ணிற்கானத் தேர்வு மற்றும் சுயாட்சியை தீவிரமாக குறைக்கிறது. சமூகத்தில் பெருகி வரும் 'லவ் ஜிகாத்'திற்கான பதில் நம்மிடம் இல்லை. இதை 'லவ் ஜிகாத்' தால் இஸ்லாமிய பெண்கள் முத்தலாக் கொடுத்த அந்த கணவனோடு தான் வாழ வேண்டும். தனக்கான புது வாழ்வை அமைக்க இந்த சமுகத்தில் வேறு வழியில்லை . சபரிமலை விஷயத்தை நாம் சமய நெறி பிரச்சனையாய் பார்ப்பதும் முத்தலாக் விவகாரங்களை நாம் பாலின நீதியாய் பார்ப்பதும் எவ்ளவு பெரிய பாசாங்குத்தனம் . இன்னும் , அடிப்படையில் சொல்ல வேண்டும் என்றால் பெண்ணின் விருப்பத்தால் கொடுக்கப்பட்ட எந்த முத்தலாக்கும் குற்றங்களாக முடியாது.
குற்றவியல் சட்டங்கள் ஒரு அரசாங்கத்தின் கொள்கைகளிருந்து பிறப்பதால் அது நீதியின் வெளிப்பாடாய் இல்லாமல் அதிகாரத்தின் வெளிப்பாடாய் தான் இருக்கும் . Unlawful activities prevention act-ன் சமீபத்திய சட்டத் திருத்தத்தில் இதை நம் கண்கூடாக பார்த்திருப்போம். அரசு தனது தேர்தல் தேவைகளுக்காக போற போக்கில் யாரை வேண்டுமானாலும் குற்றவாளியாய் ,நிரபராதியாய் உருவகப்படுத்த முடியும் என்பதற்கான சான்று.
கேள்வியாக்கப்பட்ட செயலைக் கட்டுப்படுத்துவதில் நமக்கு தெளிவு இருக்கும் வரையில் குற்றவியல் சட்டத்தை பயன்படுத்தப்படக்கூடாது . உதாரணமாக , தம்பதியரைத் தவிர வேறு யாரும் இல்லாதபோது கணவர்களால் வழங்கப்பட்ட வாய்வழி முத்தலாக் வழக்குகளில், ஆதாரத்தை திரட்டுவது கடினமாக இருக்கும். சிறையில் அடைக்கப் பட்ட கணவன் திரும்பி வந்தவுடன் கண்டிப்பாய் புகார் கொடுத்த மனைவியை ஏற்க மாட்டான். இது மேலும் விவாகரத்து மற்றும் பிரிவினையை அதிகரிக்கும். இந்த விளைவுகளை யோசிக்கும் ஒரு பெண் முதலில் முத்தலாக் தடை சட்டத்தை பயன்படுத்துவாள் என்பதே மிகப் பெரிய கேள்விக் குறி. இதனால் , முத்தலாக் விவாகரத்துகளைச் சமாளிப்பதற்கான தீர்வு நோயை விட மோசமானது .
இந்த வகையில் யோசித்து பாருங்கள் , எல்லா திருமண ஒப்பந்தமும் ஒரு கணவன் மனைவியின் சம்மதத்துடன் மட்டுமே விவாகரத்து கொடுக்க முடியும் என்றும், ஒரே நேரத்தில் அந்த கணவன் முத்தலாக் விவாகரத்துகளை வழங்கினால், மனைவிக்கு வழங்கப்படும் சன்மானம் ஐந்து மடங்காக அதிகரிக்கப்படும். பணம் செலுத்தாவிட்டால், சிவில் சட்டத்தின் கீழ் அவருக்கு சிறைத் தண்டனை கிடைக்கப் பெரும்.
இந்த வகையான சிவில் சட்டத்தின் கீழ் முத்தலாக்கை நாம் யோசித்திருக்கலாம். ஆனால் முத்தலாக் தடை கிரிமினல் சட்டம் தேவைக்கு அதிகமான தண்டனையை முன்வைக்கிறது . இந்த மசோதாவால் இந்தியாவில் சகித்துக் கூடிய சின்ன குற்றங்கள் மற்றும் சகிக்கமுடியாத பெரிய குற்றங்களுக்கான வேறுபாடு கலையப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.