இந்திய – அமெரிக்க பாதுகாப்பு நல்லுறவு இன்னும் பரவலாக வேண்டும்…

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவத்தை திரும்ப பெறுவது மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்காவின் கண்காணிப்பை குறைப்பது, இந்தியாவின் நிலம் மற்றும் கடல் இரண்டிலும், வடமேற்கு எல்லையில் முக்கியமான காலத்தின் முடிவை குறிக்கிறது.

By: Published: February 25, 2020, 1:26:02 PM

C. Raja Mohan

வளைகுடா நாடுகள் மற்றும் அதைத்தாண்டியும், பிராந்தியங்களில் பாதுகாப்பு வழங்குவதன் ஒரு பகுதியாக டெல்லி ஏற்கனவே தனது கடல்சார் செயல்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் மற்ற கூட்டாளிகளுடன் சேர்ந்தால், அதன் சக்தி பன்மடங்கு பெருகும் என்பது டெல்லிக்கு தெரியும். அதுபோன்றதொரு ஒத்துழைப்பிற்கு மோடியும், டிரம்பும் அரசியல் அடித்தளம் அமைக்கட்டும்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையின்போது, பிரதமர் மோடி, அமெரிக்க அதிபரிடமிருந்து, ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் பிராந்தியம் மற்றும் வளைகுடா நாடுகள் குறித்த அவரது திட்டங்களை முதலில் பெறுவதற்கு ஆவலாக உள்ளார். ஏனெனில் இந்தியாவின் பொருளாதார, அரசியல் மற்றும் ராணுவ பாதுகாப்புக்கு இவ்விரு பிராந்தியங்களும் முக்கியம். ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவத்தை திரும்ப பெறுவது மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்காவின் கண்காணிப்பை குறைப்பது, இந்தியாவின் நிலம் மற்றும் கடல் இரண்டிலும், வடமேற்கு எல்லையில் முக்கியமான காலத்தின் முடிவை குறிக்கிறது.

இந்தியாவின் வடக்கு பிராந்தியத்தில் இரு தலைநகரங்களும் ஒன்றாக இணைந்து வேலை செய்வதில், முன்பு காட்டிய தயக்கத்தில் இருந்து மோடி மற்றும் டிரம்ப் ஆகிய இருவருமே கடந்து வந்தார்களா என்பதுதான் கேள்வி. அதன்படி, டிரம்ப் ஆட்சியின் கீழ் அந்த பிராந்தியங்களில், அமெரிக்காவும் சிறிது இறங்கி வருவதும், இந்தியாவும் வளைகுடா பிராந்தியங்களிலும், இந்தியப்பெருங்கடல் பகுதிகளிலும் பெரும்பங்கு வகிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உள்ளதும் இருவரும் இணைந்து வேலை செய்ய உதவும்.
டிரம்ப் ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக டெல்லிக்கும், வாஷிங்டனுக்கும் இடையே இந்திய – பசிபிக் எல்லையை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து நல்ல புரிதல் ஏற்பட்டுள்ளது. அது ஹாலிவுட்டிலிருந்து பாலிவுட் வரையான நீட்சி என்று வரையறுக்கப்படுகிறது. இந்த பொதுவான பார்வை, வட இந்திய பெருங்கடல் பகுதிகளுக்கு பொருந்தாது என்று டெல்லி அதிகாரிகள் அடிக்கடி கூறிவருகிறார்கள். கடந்த வாரத்தில் அமெரிக்காவின் மூத்த அதிகாரிகள், இந்திய – பசிபிக் எல்லை , பாலிவுட்டில் இருந்து கிழக்கு ஆப்ரிக்க கடற்கரை வரை விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்கள். ஆனால், இது புவியியல் சார்ந்த வரையறை தொடர்பான கேள்வியல்ல, இருதரப்பும் இணைந்து பொதுவான இடத்தை பாதுகாக்க சாத்தியமான வழிகளை கண்டுபிடிப்பதேயாகும்.

இந்த பிராந்தியத்தில் அமெரிக்காவின் நீண்டகாலத்திற்கு நிற்கும் வகையிலான கொள்கையை உடைக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டார். 1970களில் பிரிட்டன், கிழக்கு சுவிசில் தனது பாதுகாப்பு நடவடிக்கைகளை நிறுத்திக்கொண்டது. மேலும், வளைகுடா மறறும் இந்தியப்பெருங்கடலில் அதன் காலனி நாடுகளுக்கு சுதந்திரம் கொடுத்தது. கிழக்கில் பிரிட்டிஷ் பேரரசு வெளியேறிய பின்னர் அமெரிக்கா உள்ளே நுழைந்தது. இந்திய பெருங்கடலில் எச்சரியாகத்தான் நுழைந்தது, ஆனால் 1970களின் இறுதியில் ராணுவ ஆதிக்கம் நிறைந்ததாக அது சித்தரிக்கப்பட்டது.

எண்ணெய் விலை உயர்வு, இரானில் முஸ்லிம்கள் புரட்சி மற்றும் அரபிக் நாடுகளுக்கு, எண்ணெய் ஏற்றுமதியில், அதன் அச்சுறுத்தல் மற்றும் ஆப்கானிஸ்தானில் சோவியத்தின் ஆக்கிரமிப்பு, தென்மேற்கு ஆசியாவின் வளர்ச்சி ஆகியவை அமெரிக்காவின் பாதுகாப்பில் உச்சம் பெற்றன. 1990-91ல் நடந்த முதல் வளைகுடா போரில், அமெரிக்கா தலையிட்டு குவைத்தில் ஒற்றுமையை நிலைநாட்டியது. இல்லாவிட்டால், இராக்கின் சதாம் உசேன் அதை குலைத்திருப்பார். 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி அன்று நடந்த தீவிரவாத தாக்குதல் ஒரு மூர்க்கமான பதிலடிக்கு வழிவகுத்தது. அது ஆப்கானில் தாலிபன்கள் ஆட்சியை வெளியேற்றியது.

இந்த முறை சதாம் உசேனின் ஆட்சியை கவிழ்ப்பதற்காக 2003ல் அமெரிக்கா ஈராக்குக்குள் நுழைந்தது. ஆப்கானிஸ்தானிலும், இராக்கிலும் முதலில் ஏற்பட்ட வெற்றி நிலைக்கவில்லை. இவ்விரு ஆக்கிரமிப்பு பகுதிகளிலும் வளர்ந்து வந்த ஒற்றுமையால், அமெரிக்காவிற்கு இது விலையுர்ந்த தோல்வியாகவே ஆனது. இந்த போர்களை முன்னெடுத்த ரிப்பப்ளிக்கன் முன்னோடிகளை முட்டாள் என்று வெள்ளை மாளிகையில் கூறிய முதல் அரசியல் தலைவர் டிரம்ப் ஆவார். மத்திய கிழக்கு பிராந்தியங்களில் நடந்து வரும் முடிவில்லாத போர்களை முடிவுக்கு கொண்டுவருவதாவும், அங்குள்ள ராணுவ வீரர்களை திரும்ப அழைத்து வருதாகவும் வாக்கு கொடுத்திருந்தார். இது டெமாக்ரட் கட்சியினரிடையே கணிசமான அதிர்வை ஏற்படுத்தியது. பாதுகாப்பை விடுவதை விரும்பவில்லையெனும்போது, முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இதுபோன்ற சிறிய போர்களாலேயே ஆக்கிரமிக்கப்பட்டதை விடுத்து, ரஷ்யா, சீனா போன்ற சக்தி வாய்ந்த போட்டிகளின் மீது கவனம் செலுத்திவருகிறது. வளைகுடா நாடுகளையே எரிபொருட்களுக்காக அமெரிக்கா சார்ந்திருக்கிறது. அதுவும் இந்த சரிவிற்கு காரணமாகும்.

டிரம்ப், மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் ராணுவ நடவடிக்கைகளை குறைத்துக்கொள்கிறார். அவரின் அலுவலர்கள், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேறுவது குறித்த தாலிபான்களுடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். கடல் மார்க்கத்தை பொறுத்தவரையில், வளைகுடா நாடுகளில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் தேசங்களை, அப்பகுதியின் கடல் பாதுகாப்பிற்கு உதவுமாறு அழைத்துள்ளார்.

டெல்லியில் உள்ளவர்கள், கடைசி அமெரிக்கர் உள்ள வரை, அமெரிக்கா ஆப்கானிஸ்தானுடன் போரிடுவதை பார்க்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அமெரிக்க கொள்ளையில் உள்ள இந்த உறுதியான திருப்பம், இந்திய கொள்கை வகுப்பவர்களுக்கு சவாலாக உள்ளது. இது துணைக்கண்டத்தின் மேற்குப்பகுதிகளில், இந்தியாவின் சொந்த பங்கை விரிவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை பறிப்பதாக உள்ளது. அங்கு செல்வதற்கு டெல்லி அதன் சிந்தனையில் சில முக்கிய மாற்றங்களை செய்துகொள்ள வேண்டும்.
ஒன்று, அமெரிக்க – பாகிஸ்தான் உறவு மாறாமல் உள்ளது என்ற அதீத நம்பிக்கையில் இருந்து அது வெளியேற வேண்டும். கடந்த இருபது ஆண்டுகளாக பாகிஸ்தானிலிருந்து விலகி, இந்தியாவை நோக்கி அமெரிக்காவின் கொள்கைகள் சாய்ந்துள்ளன. கிளிண்டனின் தலைமையின்போது, 1999ம் ஆண்டு கோடையில் கார்கிலைவிட்டு வெளியேறுமாறு பாகிஸ்தானுக்கு கொடுத்த அழுத்தம், புஷ் தலைமையின்போது இந்தியாவுக்கு பிரத்யேக அணு விலக்கு, ஒபாமா காலத்தில் பாகிஸ்தானின் எல்லை தாண்டிய தீவிரவாதத்திற்கு கடிவாளம் போட்டது என்று இந்தியாவுக்கு சாதமாகவே இருந்துள்ளது.

ஒரு படி மேல்போய், டிரம்ப், ஆப்கானிஸ்தான் பிரச்னைக்கு பாகிஸ்தானும் ஒரு காரணம் என்பதை உணர்ந்து, பாகிஸ்தானின் தீவிரவாத ஆதரவை எதிர்த்தார். ஜநா பாதுகாப்பு கவுன்சிலில் மசூத் ஆசாரை வெளியில் கொண்டுவர இந்தியா எடுத்த முயற்சிகளுக்கு ஆதரவளித்தார். பாகிஸ்தானை பொருளாதார ரீதியில் தனிமைப்படுத்துவதில் இந்தியாவிற்கு உதவினார். ஜநா பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் குறித்து பேசுவதை தடுத்தார்.

ஆனாலும், அமெரிக்காவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே குறிப்பிட்ட அளவு கூட்டு உள்ளது என்பதையும் டெல்லி உணரவேண்டும். இந்தியாவின் வடக்கில் பிரச்னைக்குரிய இடங்களில், அதன் பாதுகாப்பை விரிவாக்க அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுவதில் கவனம் செலுத்த வேண்டும். வரலாற்று ரீதியாக, தென்மேற்கு ஆசியாவில் ஆங்கில அமெரிக்க ஆதிக்கத்திற்கு பாகிஸ்தான் ஒரு முக்கிய கூட்டாளியாகும். ஆனால் பாகிஸ்தானின் எண்ணம், ஆப்கானிஸ்தான் மற்றும் வளைகுடா நாடுகளில் அமெரிக்காவின் இருப்பை குறைக்க வேண்டும் என்பதாகும். இரண்டாவதாக டெல்லி, ஆப்கானிஸ்தான் பாதுகாப்பில் பெரியளவில் பங்களிப்பதற்கு தன்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். ஆப்கானிஸ்தானுக்கு அடுத்த நாடாக உள்ள இந்தியா, ஆப்கானின் கூடுதல் பாதுகாப்புக்கு உதவ வேண்டாமா என்று டிரம்ப் கேட்டால், இந்தியா என்ன பதில் கூறும்? இந்திய அரசு காபூலுக்கான பாதுகாப்பு உதவிகளை முடுக்கிவிடுகிறது. ஆப்கானிஸ்தான் ஒரு கொந்தளிப்பான கட்டத்தை எட்டினால், பிராந்திய மற்றும் பிற ஆதிக்கங்களில் அமெரிக்காவால் விடப்பட்ட வெற்றிடத்தை நிரப்ப வேண்டும். டெல்லியால் அப்போது அமைதி காக்க முடியாது. இந்திய ராணுவத்தை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்புவது மற்றும் ஒன்றும் செய்யாமல் இருப்பதற்கு இடையே நிறைய வழிகள் உள்ளன. இதுகுறித்து டெல்லியும், வாஷிங்டன்னும் பேசி முடிவெடுக்க வேண்டும்.

வளைகுடா நாடுகள் மற்றும் அதைத்தாண்டியும், பிராந்தியங்களில் பாதுகாப்பு வழங்குவதன் ஒரு பகுதியாக டெல்லி ஏற்கனவே தனது கடல்சார் செயல்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் மற்ற கூட்டாளிகளுடன் சேர்ந்தால், அதன் சக்தி பன்மடங்கு பெருகும் என்பது டெல்லிக்கு தெரியும். அதுபோன்றதொரு ஒத்துழைப்பிற்கு மோடியும், டிரம்பும் அரசியல் அடித்தளம் அமைக்கட்டும். டிரம்ப் ஆட்சி துவங்கியபோது, இந்தியப்பெருங்கடல் மற்றும் பசிபிக்கடல் பகுதிகளில் இந்திய – அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பை தள்ளுபடி செய்தது. ஆனால், அந்த ஒத்துழைப்பு மேற்கு இந்திய பெருகடல் பகுதிக்கும் கட்டாயம் நீட்டிக்கப்பட வேண்டும்.

இக்கட்டுரையை எழுதியவர் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆசிய ஆய்வுகள் மைய இயக்குனர்.

தமிழில்: R.பிரியதர்சினி.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Trump india visit modi trump trade talks modi trump meeting

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X