Advertisment

உண்மை மற்றும் நீதியைப் பின்பற்றி...

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
உண்மை மற்றும் நீதியைப் பின்பற்றி...

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்

Advertisment

குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த்; பல்வேறு சவால்களையும், பிரச்னைகளையும் பத்திரிகைதுறை எதிர் கொள்கிறது. ஆனால், அதன் தரத்துக்கான தேடல் என்பது முடிவற்றது.

ராம்நாத் கோயங்கா இதழியல் சிறப்பு விருதுகள் விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சியாக உணர்கின்றேன். மறைந்த (ராம்நாத்)கோயங்கா அவர்களின் பிறந்தநாள் நூற்றாண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இது போன்ற விருதுகள் வழங்கப்படும் நிகழ்வு தொடங்கியதாக அறிந்தேன். அச்சு, ஒலி, ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் உயர்ந்தபட்ச தொழில் முறையைப் பேணுபவர்களுக்கு, தொடர்ச்சியான சவால்களுக்கு இடையே, மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில், ஊடகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை வளர்த்தெடுக்கும் வகையில் பணியாற்றும் பத்திரிகையாளர்களை கவுரவிப்பதற்காக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இதர வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால், உண்மைக்காக பேனாவைப் பிடித்திருப்பவர்களை வாழ்த்துவதே இந்த விருதின் உண்மையான பொருளாகும். விருதுகள் வென்ற அனைவரையும் நான் வாழ்த்துகின்றேன். அவர்கள் ஒருபோதும் உண்மைக்கான நோக்கத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது என்றும் வலியுறுத்துகின்றேன். ஏனெனில், நல்ல இதழியலுக்கு அதுமட்டுமே வழிகாட்டியாக இருக்கும்.

குழும தலைவர் விவேக் கோயங்கா, என்னை சந்தித்து, அழைப்பு விடுத்தபோது, என்னுடைய பெயரின் முதல் பாதியும், கோயங்காவின் பெயரின் முதல் பாதியிலும் உள்ள ஒற்றுமையை நினைவுப்படுத்தினார். அதற்கு நான், ஆமாம். இது ஒரு இனிமையான தற்செயல் நிகழ்வு என்றேன். அதே நேரத்தில் உறுதியாக உங்களிடம் ஒன்றைச் சொல்ல முடியும். பெயர் ஒற்றுமை தவிர, எனக்கு இதில் வேறு எந்த பங்கும் இல்லை. இதை நீங்களும் ஏற்றுக் கொள்வீர்கள்.

பெரும்பலம் வாய்ந்த ராம்நாத் என்ற பெயரிலான ஒரு நிகழ்வில் எளிமையான ராம்நாத் பங்கேற்பது உண்மையிலேயே இது ஒரு உயர்ந்த அனுபவம். அடக்குமுறைக்கு எதிரான அவரது போராட்டம், சத்தியத்துக்கான அவரது விடாமுயற்சி என்ற அவருடைய வாழ்க்கை கதைகள்தான் அந்த புகழ்மிக்க மனிதரின் உள்ளடக்கமாகும். ஆகவே, நான் மட்டுமின்றி நாம் எல்லோரும் கோயங்காவின் வலுவான நம்பிக்கையான தேசியவாதத்தை அவசியம் பகிர்ந்து கொள்வோம். அவரது கனவான வலுவான, வளமான இந்தியா எனும் கனவை நான் ஊக்கத்துடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

ஆர்.என்.ஜி என்று அன்போடு அழைக்கப்படும் அவர், யாரோடும் ஒப்பிடமுடியாத ஊடக பிரபலமாக, நாட்டின் சுதந்திரத்துக்கு முன்னும், பின்னும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். ஒரு கட்டுமானத்துறை சாம்ராஜ்யத்தை கட்டமைத்த விரைவாக சிந்திக்கும் திறன் கொண்ட ஒரு தொழிலதிபராக அவர் இருந்தார். அவர் தமது சொத்தினை பொதுச்சேவையான இதழியலுக்கு உபயோகித்தார். சமரசத்துக்கு இடமில்லாத இதழியல் என்பதே அவரது தனிச்சிறப்பான பண்பு. அச்சமற்ற அல்லது யாருக்கும் சாதகமற்ற ஒரு இதழியல்; எல்லாவற்றுக்கும் மேலான உண்மை என்ற கடமையை அதன் அடிப்படையாகக் கொண்டிருக்கும். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது தமது பத்திரிகையை தற்காலிகமாக நிறுத்தியபோது, அவரது தலையங்கம், பணப்பையைப் பற்றிப் பேசவில்லை இதயத்துடிப்பைப் பற்றி பேசியது.

பல ஆண்டுகளாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம், இதழியலின் நன் மதிப்பீடுகள், பாரம்பர்யத்தை உள்ளடக்கிய அமைப்பாக உண்மையிலேயே உருவாகி உள்ளது. இது அதிகாரத்தை நோக்கிய ஒரு கலசாராத்தை வளர்த்துள்ளது. அதிகாரத்துக்காக உண்மை பேசுதல் இதழியலின் நடைமுறையாக்க முயன்றது. அவரது செய்தியை பரம்பரைச் சொத்தாக முன்னெடுத்துச் செல்லும் திறன் மிக்க கைகளை அவரது வாரிசுகளாக கோயங்கா விட்டுச் சென்றிருக்கிறார்.

இதழியலுக்கான உயர்ந்தபட்ச தரத்தை கொண்டிருந்த நகரான கான்பூரில் நான் பிறந்து வளர்ந்தேன். தனிச்சிறப்பு வாய்ந்த பத்திரிகையாளர் கணேஷ் சங்கர் வித்யார்த்தியை நாம் இப்போது நினைவு கூர்வோம். கான்பூரில் நடைபெற்ற வகுப்புவாத வன்முறையின் போது, வெறுப்பு எனும் தீப்பிழம்புகளை அணைப்பதில் தம்மையே தியாகம் செய்து விட்டார். ஒரு பத்திரிகையாளராக அவர் எழுதிய எழுதிய வார்த்தைகள் தீர்க்கதரிசனம் மட்டுமல்ல, சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்காகவும், ஆழ்ந்த அக்கறை காட்டினார். பிரதாப் (Pratap) என்ற நாளிதழைத் தொடங்கி புரட்சிகரமாக அதில் எழுதி வந்தார். ஒவ்வொரு பத்திரிகையாளருக்கும் எது கடமையாக இருக்க வேண்டும் என்ற செயல்திட்டத்தை வகுத்திருக்கிறார். வித்யார்த்தியின் வார்த்தைகளிலேயே அதை நான் இங்கே குறிப்பிடுகின்றேன்; யார் ஒருவரின் வாழ்த்து அல்லது விமர்சனம், சந்தோஷம் அல்லது அதிருப்தி, கண்டனம் அல்லது அச்சுறுத்தல் ஆகியவை நியாயமான நமது போக்கில் இருந்து திசை திருப்பாது.

மேலும் அவர் கூறியிருக்கிறார்; “உண்மை, நீதி ஆகியவை நம் மனசாட்சியாக இருக்க வேண்டும். மத வன்முறை, தனிப்பட்ட மோதல் ஆகியவை குறித்து எப்போதுமே பிரதாப் நாளிதழ் தெளிவாக வெளிப்படுத்தும். எந்த ஒரு குழுவின், அமைப்பின், நபரின் அல்லது கருத்தை எதிர்க்கவோ அல்லது பாதுகாக்கவோ அல்லது ஊக்கப்படுத்தவோ இது பிறக்கவில்லை. சுதந்திர சிந்தனையே இதன் நம்பிக்கை. உண்மையே இதன் மதம். நீதியின்போது அரசனையும் அவரது பொருளடக்கத்தையும் ஆதரிப்போம். நீதியற்ற தன்மையின்போது யார் ஒருவரின் பின்னாலும் இருக்கமாட்டோம். நாட்டின் பல்வேறு சாதிகள், சமூகங்கள் மற்றும் பிரிவுகள் இடையே நாட்டின் நல்லிணக்கம் வளரவேண்டும் என்பதுதான் எங்களின் ஆழ்ந்த விருப்பம்.”

வித்யார்த்தியின் மதிநுட்பம் வாய்ந்த எழுத்துகள் ஒருபோதும், மனிதர்கள் உருவாக்கிய குறுகியமனப்பான்மையோடு நின்று விடுவதில்லை. அதுதான் அவரது இதழியல். மகாத்மா காந்தியின் உண்மையான சீடர் போல வலுவான, ஒற்றுமையுள்ள இந்தியா எனும் கனவை நோக்கி, அமைதி மற்றும் வன்முறையற்ற சமூகத்துக்காக தம் வாழ்க்கையை தியாகம் செய்தார்.

பொதுமக்கள் தொடர்பு என்பது ஆரம்ப கட்டத்தில் இருந்ததைப் பற்றி நான் நினைவு கூறுகின்றேன் என்பது எனக்குத் தெரியும். இப்போது நமது செய்திகளை சில வாரத்தைகளில் சுருக்கமாக கூறுகின்றோம். அதனை காட்டுத் தீயை விட வேகமாகப் பரப்புகின்றோம். இப்போதைய காலத்தில் இருந்து நாம் அப்போது நீண்டதூரம் பின்தங்கி இருந்தோம். உண்மையில், தொழில்நுட்பமானது இதழியலின் இயல்பில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

பழையகாலத்தவர்கள் இந்த அடிப்படை தொடர்பானவற்றை நினைவு கொள்ள முடியும், டபிள்யூ-கள் மற்றும் எச்(என்ன, எப்போது, ஏன், எங்கே, யார், மற்றும் எப்படி) என்ற ஐந்து ஆங்கில எழுத்துக்களில் தொடங்கும் கேள்விகளுக்கான பதில்கள் ஒரு செய்தி கட்டுரையின் தரத்துக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. பிரேக்கிங் நியூஸ் என்ற சிண்ட்ரோம் கூச்சலில், ஊடகம்இப்போது நுகரப்படுகிறது. கட்டுப்பாடு,பொறுப்புடைமை என்ற அடிப்படை கொள்கைகளுக்கு கணிசமான பங்கம் ஏற்பட்டுள்ளது. போலி செய்திகள் புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன. இப்படிப்பட்டவர்கள்தான் தங்களை இதழியலாளர்கள் என்று தங்களைத் தாங்களே அறிவித்துக் கொள்கின்றனர். இந்த உன்னதத் தொழிலை களங்கப்படுத்துகின்றனர்.

தொழில்நுட்பமானது, இதழியல் ஒருபுதிய இனமாக உருவாக வழி செய்துள்ளது. பாரம்பர்ய இதழியலுக்கு முரணாகவும் உள்ளது. உண்மைகள் மற்றும் கருத்துகளின் நிலையைப் பற்றிய, நம்பகத்தன்மை மற்றும் ஆதாரத்தன்மை ஆகியவை பற்றிய பழைய விவாதங்களை இந்த முன்னேற்றம் புதுப்பித்துள்ளது, புறநிலையாக இருப்பதன் விருப்பம், உண்மையை நோக்கி இதழியலாளரை மனம் திறக்க அனுமதிக்கிறது. ஒரு காட்சியின் அனைத்து பக்கங்களின் முன்பும் நிறுத்துகிறது. உண்மையின் மீது நம்பிக்கை, உண்மையை வெளிக்கொணர்தல், பார்வையை தூய்மையாகவும், நுண்ணியதாகவும் வைத்துக்கொள்ளுதல் கட்டாயமாகும்.

தங்கள் கடமையின்போது, இதழியலாளர்கள் பல்வேறு தொப்பிகளை அணிய வேண்டி இருக்கிறது என்பதை நான் உணர்கின்றேன். இது போன்ற நாட்களில், ஒரு புலனாய்வாளராக, ஒரு வழக்கறிஞராக, ஒரு நீதிபதியாக என ஒருவரே அனைத்து பாத்திரங்களையும்கொண்டு செயலாற்ற வேண்டி இருக்கிறது. உண்மையை வெளிக்கொணர ஒரே நேரத்தில் பல பாத்திரங்களில் பங்கேற்று பணியாற்ற இதழியலாளர்களுக்கு வியத்தகு ஆர்வம், வலுவான உள்ளுணர்வு என்ற பெரிய புரிதல் தேவைபடுகிறது. பல திறன்களைக் கொண்ட அவர்களின் செயல்பாடு விலைமதிப்பற்றது. இது போன்ற அசரவைக்கும் செயல்பாடு கொண்ட அதிகாரம் உண்மையான பொறுப்புடைமையுடன் தொடர்புடையதாக இருக்கிறதா என்று என்னைக்கேட்கத் தூண்டுகிறது.

போலி செய்தி அல்லது பணம் பெற்றுக்கொண்டு செய்தி வெளியிட்டது என்பது போன்ற நம்பகத்தன்மை குறித்த பிரச்னை வந்திருந்து அதை சந்தித்திருந்தால் கோயங்கா என்ன செய்திருப்பார் என்று ஒரு கணம் ஆழ்ந்து சிந்திப்போம். அவர் ஒருபோதும், சூழல் நிலைதடுமாறிச் செல்வதை அனுமதிக்கமாட்டார். ஒட்டுமொத்த ஊடக சகோதரர்களுமான திருத்த த்துக்கான நடவடிக்கைகளை அவர் முயற்சி செய்திருப்பார். அந்த இதழியல், ஒரு சிக்கலான கட்டத்தை கடந்துவிட்டது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

உண்மைக்கான தேடல் இருக்கிறது, சொல்வது எளிது எனினும் செயல்படுவது என்பது சிக்கலானது. ஆனால், இதனை பின்பற்ற வேண்டும். நம்மைப் போன்ற ஜனநாயக நாட்டில், உண்மைகளை வெளிக்கொண்டு வருதலின் மீதும், அதன் மீது விவாதம் நடத்துவதற்கு தயாராக இருப்பதற்கும் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். குடிமக்கள் தகவல்களை நன்கு தெரிந்து கொள்வதில்தான் ஜனநாயகம் அர்த்தமுள்ளதாக இருக்கும். இந்த உணர்வில், இதழியலின் உயர்வு என்பது ஜனநாயகத்துக்கு முழுமையான அர்த்தம் அளிக்கக் கூடியதாக இருக்கும்.

இதழியல் தொடர்ந்து மக்களுக்கு ஏற்றதாக இருந்தால், அதன் உணர்வு எனும் பணியை கைகொண்டிருக்க வேண்டும். அதன் மதிப்பீடுகள், கவுரவம், நேர்மையை மீட்டெடுக்க வேண்டும். 24 மணி நேரமும் பொதுமக்களுடனான நெருக்கத்தை வலுப்படுத்துங்கள்; யாருக்காகவும் வளைந்து கொடுக்கக் கூடாது. எந்தவித விளைவுகள் ஏற்பட்டாலும் அதுகுறித்து கவலைப்படாமல் எப்போதும் உண்மைக்காகப் போராட வேண்டும். அச்சமின்றி அல்லது யார் ஒருவருக்கும் சாதகமாகவோ இல்லாமல் உண்மையைக் கண்டுபிடிக்கத் தொடர்ந்து கடமையாற்ற வேண்டும்.

இது போன்ற உயர்ந்த கொள்கைகளை விட்டுக் கொடுத்தால், நல்ல இதழியல் என்பது நீடித்திருப்பதும் தொடர்ந்து லாபகரமாக இயங்குவதும் சவாலானதாகும். செய்தி என்ற பெயரில் ஒருபிரிவு ஊடகத்தினர் பொழுதுபோக்கு என்ற உதவியை நாடி இருக்கின்றனர். சமூக, பொருளாதார சமத்துவம் இன்மையை வெளிப்படுத்தும் செய்திகள் புறக்கணிக்கப்படுகின்றன. அந்த இடைவெளியை துணுக்குச் செய்தி எடுத்துக் கொள்கிறது. அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுப்பதற்கு பதில், பார்ப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், ரேட்டிங் ஆகியவற்றுக்காக சில ஊடகங்கள் பகுத்தறிவு நடைமுறைகளுக்கு அப்பால் இயங்குகின்றன. ஆனால், தரமான இதழியல் என்பது நீண்டகாலத்துக்கு மேலோங்கி இருக்கும் என்று நான் நம்புகின்றேன். இது போன்ற இதழியலை கொண்டாடவே நாம் இங்கு கூடியிருக்கின்றோம்.

விருதுபெற்ற அனைவரையும், தவிர அவர்களின் பணிகள் வெளிச்சத்துக்கு வருவதற்கு உதவிய அவர்களது நிறுவனங்களையும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகின்றேன். தவிர, இந்த விருதுகள் மூலம் இதழியலின் சிறப்பை முன்னெடுக்கும் பணிக்காக எக்ஸ்பிரஸ் குழுமத்தையும், விருதுக்கான நடுவர்களையும் நான் வாழ்த்துகின்றேன். எதிர்காலத்திலும், இந்த மேடையில் இளம் இதழியலாளர்களின் பணிகள் கொண்டாடப்பட வேண்டும் என்ற என்னுடைய வாழ்த்துகளை வழங்குகின்றேன். அவர்களுக்கும், இதர இதழியலாளர்களுக்கும், அவர்களின் மிகப்பெரிய முன்னோடிகளில் ஒருவரான மகாத்மா காந்தியின் இந்த அறிவுரை ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்கும்.; “எப்போதும் உண்மையை வலியுறுத்துங்கள், பணிவு மற்றும் கருணையுடன் அதனை வலியுறுத்துங்கள். நீண்டகாலமாகவே நான் ஒரு இதழியலாளனாக இருக்கின்றேன். என்னுடைய சொந்த வழியில், என்னுடைய கலையை நான் நன்கு அறிந்திருப்பதாக கூறுகின்றேன். ஆகவே, உங்களைப் போன்றவர்களையும், பத்திரிகையாளர்களையும் நான் கேட்கின்றேன். விளம்பரதாரர்கள் உங்கள் நாக்கையும், பேனாவையும் கட்டுப்படுத்த உள்ளனர். சொற்களில் கடுமையான சிக்கனத்தைச் செயல்படுத்துங்கள். ஆனால், உண்மையில் அல்ல. உங்களை வெளிப்படுத்துவதில் கட்டுப்பாடு தேவை. ஆனால், உள்ளுணர்வில் அல்ல. அதிகரிக்கும் சுயகட்டுப்பாட்டால்தான் அது சுடர்விட்டு பிரகாசிக்கும்.”

இந்த தேசத்தின் தந்தையின், இந்த வரிகளுடன் உங்களிடம் இருந்து விடைபெறுகின்றேன். ஜெய் ஹிந்த்!

புதுடெல்லியில் கடந்த ஜனவரி 20-ம் தேதி நடைபெற்ற ராம்நாத் கோயங்கா இதழியல் சிறப்பு விருதுகள் விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோயங்கா ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம் இது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment