அபினவ் குமார், காஷ்மீர் பி.எஸ்.எஃப்-பில் ஐ.பி.எஸ். அதிகாரியாக உள்ளார்.
Uniformed forces in the Valley: பள்ளத்தாக்கில் ஆகஸ்ட் என்பது வட இந்தியாவில் நிலவும் வசந்தத்தை போன்றது. வெப்பநிலை லேசாகின்றன. பூக்கள் முழுவதும் பூக்கின்றன. பள்ளத்தாக்கில் புகழ்பெற்ற பழங்கள் மற்றும் உலர்பழங்களான ஆப்பிள், பிளம்ஸ், அக்ரூட் பருப்புகள், பாதாம் போன்றவை அறுவடைக்கு தயாராக இருக்கின்றன. மழைக்காலம் ஓய்ந்த பிறகு சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் வரத் தொடங்குகிறார்கள். வழக்கமாக, இது பள்ளத்தாக்கு முழுவதும் ஒரு பரபரப்பான மற்றும் சலசலப்பான நேரமாக இருக்கும். எவ்வாறாயினும், அரசியலமைப்பு பிரிவு 370 மற்றும் 35ஏ திருத்தப்பட்டு அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பது என்ற இந்திய அரசாங்கத்தின் முடிவுக்குப் பிறகு அங்கே ஒரு அமைதியற்ற அமைதி நிலவுகிறது.
பள்ளத்தாக்கில் அமைதியைக் காக்கும் பணியில் உள்ள அனைத்து சீருடை படைகளுக்கும், கடந்த ஐந்து வாரங்கள் அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் திறனுக்கான சிறந்த சோதனையாகும். ஜம்மு-காஷ்மீர் காவல்துறை, இந்திய ராணுவம், சி.ஆர்.பி.எஃப், பி.எஸ்.எஃப், ஐ.டி.பி.பி மற்றும் எஸ்.எஸ்.பி ஆகிய அனைத்தும் காஷ்மீர் பள்ளத்தாக்கிலுள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளன. 2008, 2010, 2016 ஆம் ஆண்டுகளில் நடந்த போராட்டத்தைக் கையாளுவதில் நாம் தவறு செய்திருக்கலாம். அவை மீண்டும் திரும்ப செய்யப்படவில்லை.
இந்த அடைப்பால் உருவாக்கப்பட்ட பல நிர்வாக சவால்களுக்கு சிவில் நிர்வாகத்தில் உள்ள சக ஊழியர்களும் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றியுள்ளனர். எங்கள் உடனடி குறிக்கோள், பெரிய அளவிலான கும்பல் வன்முறை, பொதுமக்கள் உயிரிழப்பு மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் தவிர்க்கப்படுவதை உறுதி செய்வதாகும். ஐந்து வாரங்கள் கடினமான முயற்சிகளுக்குப் பிறகு, தனிப்பட்ட முறையில் என்.எஸ்.ஏ மேற்பார்வையிட்டது. இதுவரை அடைந்தவற்றில் நாம் சில திருப்திகளை வெளிப்படுத்த முடியும். ஒப்பீட்டிற்காக, ஜூலை 2016 இல் புர்ஹான் வானி இறந்த முதல் ஐந்து வாரங்களில், பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 40-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர்.
இதுவரை, வன்முறையில் ஈடுபடுவதற்கு பெரிய அளவிலான கும்பல்கள் உருவாகாமல் தடுத்து நாங்கள் வெற்றிகரமாக நிர்வகித்துள்ளோம். முன்னெச்சரிக்கை தடுப்பு கைதுகள் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. பொதுமக்கள் உயிரிழப்புகளை நாங்கள் மிகவும் குறைந்தபட்சமாக வைத்திருக்கிறோம். அதில் சரியான எண்ணிக்கை பற்றி சில சர்ச்சைகள் இருக்கலாம். ஆனால், அது நிச்சயமாக ஒற்றை இலக்கத்தில்தான் இருக்கிறது. இதுவரை, ஜிஹாதி குழுக்களை ஒரு பெரிய பயங்கரவாத தாக்குதலை நடத்த நாங்கள் அனுமதிக்கவில்லை. பழ வியாபாரிகள் மற்றும் கடைக்காரர்களைத் தாக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டிருப்பது அவர்கள் விரக்தியடைந்துள்ளதற்கான அடையாளம். மொபைல் மற்றும் இணைய இணைப்பு தடைசெய்யப்பட்டிருந்தாலும் லேண்ட்லைன் சேவைகள் மீட்டமைக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் கடைகள் தங்கள் இயல்பான செயல்பாட்டை விரைவாக மீண்டும் தொடங்குவதில் அதிகாரிகள் ஆர்வமாக உள்ளனர். ஆனால், இப்போது அவர்கள் அவ்வாறு செய்யப்படுவதை ஜிஹாதி பிரிவினைவாதிகள் தடுக்கின்றனர்.
இருப்பினும், மனநிறைவுக்கு இடமில்லை. எங்கள் சவால்கள் மேலும் நீட்டிப்பை சந்தித்துள்ளன. ஆனால், அவை முன்னோக்கி செல்லும் பாதை நீண்டது மற்றும் கடினமானது. 70 ஆண்டுகளாக ஆசாதியின் தர்க்கத்தாலும், கடந்த 30 ஆண்டுகளாக ஜிகாத்தின் தர்க்கத்தாலும் வடிவமைக்கப்பட்ட ஒரு சமூகம் இந்த மாற்றங்களை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் ஏற்றுக் கொள்ளும் என்று நினைப்பவர்கள் நம்பத்தகாததாக இருக்கிறது. நாம் அனைவரும் நீண்ட பயணத்திற்குத் தயாராக இருக்கும்போது, பள்ளத்தாக்குக்கு வெளியே உள்ள கதைகள் சில கவலைகளுக்கு ஒரு காரணமாக இருக்கிறது.
தேசிய மற்றும் சர்வதேச ஊடக பிரிவுகள் காஷ்மீரைப் பற்றி அறிவிப்பில் சிறிய கள யதார்த்தங்களுடன் ஒரு நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டன. இந்த பார்வை நமது சீருடை அணிந்த படைகளை வெறித்தனமான சட்டவிரோத மனநோயாளிகளாகவும் அதிர்ஷ்டமில்லாத காஷ்மீர் குடிமக்கள் மீது சொல்லமுடியாத கொடுமைகளைச் செய்கிறது என்றும் முன்வைக்கிறது. ஐ.எஸ்.ஐ மற்றும் அதன் பிரதிநிதிகளால் உருவாக்கப்பட்ட பல சித்தரிப்புகள், பழைய படங்கள் மற்றும் வீடியோக்கள் இந்த கதைகளுக்கு ஆதரவாக சரிபார்க்காமல் பரப்பப்படுகின்றன. வேதனை அடைந்த குடிமக்களின் காட்டு குற்றச்சாட்டுகள் முக தோற்றத்துக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டு பத்திரிகையின் அடிப்படைக் கொள்கைகளை பின்பற்றாமல் சரிபார்க்காமல் அவர்கள் கூறுவதை அப்படியே அதே அவார்த்தைகளில் அறிவிக்கப்படுகின்றன. ராணுவ முகாம்கள் குழந்தைகளின் ரத்தத்தால் நிறைந்திருந்தது என்று ஒரு செய்தி கூறியது. போலீஸ் தடுப்பு மற்றும் தேடல் நடவடிக்கைகளின் போது பெரிய அளவில் பாலியல் துன்புறுத்தல் நடப்பதாக மற்றொரு செய்தி கூறியது. மற்றொருவர் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினர் அனைவருமே நிராயுதபாணிகளாக இருந்ததாக பொய்யாகக் கூறி, பாதுகாப்புப் படையினருக்கு இடையே பிளவை ஏற்படுத்த முயன்றார். கிட்டத்தட்ட, நாங்கள் காவல்பணி செய்கிற காஷ்மீரைப் போல ஒரு காஷ்மீர் இருக்கிறது என்று இரண்டு மாற்று யதார்த்தங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அல்ஜஸீரா போன்ற தளங்கள் மற்றும் மேற்கத்திய ஊடகங்களின் நடுநிலை குறைபாடுகளை ஒருவர் புரிந்துகொள்ள முடியும். 1989 முதல், அவர்கள் தொடர்ந்து காஷ்மீரில் போராளிகள் செய்த அட்டூழியங்களை புறக்கணித்து, நிலைமையை முதன்மையாக இந்திய அரசின் மனித உரிமை மீறல்களின் அடிப்படையில் சித்தரித்தனர். இந்த தொகுதியைப் பொறுத்தவரை, பயங்கரவாத நடவடிக்கைகள் மனித உரிமை மீறல் அல்ல. பார்கள் மற்றும் சினிமா அரங்குகளில் குண்டுவெடிப்புகள் மூலம் ஷரிய சட்டங்களை திணிக்க முயற்சிப்பது மனித உரிமை மீறல்கள் அல்ல. கல் வீசுதல் மற்றும் மறைந்திருந்து தாக்குதல் ஆகியவற்றுக்கு குழந்தைகளைப் பயன்படுத்துவது மனித உரிமை மீறல்கள் அல்ல. பண்டிதர்களின் இன அழிப்பு நிச்சயமாக மனித உரிமை மீறல் அல்ல. அனேகமாக அவர்களின் பாதுகாப்புக்காக தானாக இடம்பெயர்ந்துள்ளனர் என்று நாம் நம்ப வேண்டும்.
இந்த சார்புக்கு ஆழமான வரலாற்று மற்றும் கலாச்சார காரணங்கள் உள்ளன. 9/11 தாக்குதல்கள் காஷ்மீர் பற்றிய நமது கவலைகளுக்கு மேற்கு நாடுகளை சற்று அனுதாபப்படவைத்தன. ஆனால், அவை ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் அவர்களுடைய ரத்த தாகத்தை தீர்த்துக்கொண்ட நிலையில், மேற்கு நாடுகள் குறிப்பாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகள், ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவின் புவிசார் அரசியலை அடிப்படையாகக் கொண்ட உயர்தரமான கிரேட் கேம் வகைக்கு திரும்புவதாகத் தெரிகிறது. இந்த புதிய காலனித்துவ பார்வை பிரிவினை தர்க்கத்தை ஏற்றுக்கொள்கிறது. அது பாகிஸ்தானை ஒரு முக்கியமான நட்பு நாடாகக் கருதுகிறது. அதன் உலகளாவிய போதைப்பொருள் பயங்கரவாத வலைப்பின்னலில் உள்ள உடந்தையை தொடர்ச்சியாக மூடிமறைக்கிறது. உலக அரங்கில் இந்தியா லட்சியங்களுடன் பாவிக்கிறது. அது எப்போதாவது நகைச்சுவையாக இருக்க வேண்டும். ஆனால், அது ஒருபோதும் கவலையாக இருக்க இடமளிக்க கூடாது.
நமது செல்வாக்குமிக்க அறிவுஜீவிகள் பலர் பழைய இடது மற்றும் வலதுசாரி என்ற இரு எதிர்நிலைகளின் அடிப்படையிலும், மதச்சார்பற்ற மற்றும் வகுப்புவாதம் போன்ற நம்பிக்கைகளின் அடிப்படையில் கட்டுரைகளில் கிளிப்பிள்ளை போல தரநிலைகளைத் தொடர்கின்றனர். இனப்படுகொலை மற்றும் வதை முகாம் போன்ற சொற்கள் அவற்றின் வரலாற்று அர்த்தம் பள்ளத்தாக்கின் தற்போதைய நிலைமைக்கு பொருந்தக்கூடிய தன்மை பற்றிய சிறிய புரிதலுடன் வேகமாகவும் எளிதாகவும் பயன்படுத்தப்படுகின்றன. நமது அரசியலமைப்பின் பாதுகாவலர்கள் என்று பட்டம் சூட்டிக்கொண்ட குழுவிற்கு பிரிவு 370 இந்தியாவுடன் பள்ளத்தாக்கின் உறவுக்கு அடிக்கல் ஆகும். வரலாறும் பண்பாடும் பகிர்ந்துகொண்டது பல்லாயிரம் ஆண்டுகள் அல்ல. நிச்சயமாக, 370 வது பிரிவை திருத்தம் செய்வதற்கு ஒரு தெளிவான ஜனநாயக ஆணை உள்ளது என்பது ஒரு பொருட்டல்ல. பாகிஸ்தான் ஆதரவு ஜிஹாத்தின் மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு, போர் விதிகளை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்பது முக்கியமல்ல. இந்தியாவின் முதல் பிரிவினையில் கடுமையான காயம் ஏற்பட்டது. ஆனால், நாம் தப்பித்தோம். இந்தியாவின் இரண்டாவது பிரிவினை நிச்சயமாக உடனடி மரணமாக இருக்கும்.
காயமடைந்த காஷ்மீரி உணர்வைப் பற்றியும் அது வெடிக்க எப்படி காத்திருக்கிறது என்பதை பற்றியும் அதிகம் பேசப்படுகிறது. லடாக்கி உணர்வு அல்லது ஜம்மு உணர்வு பற்றி அத்தகைய பேச்சு எதுவும் இல்லை. கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்போது, உள்நாட்டு அமைதியின்மை மற்றும் கும்பல் வன்முறையைத் திட்டமிடுவதற்கான அவநம்பிக்கை முயற்சிகள் நிச்சயம் இருக்கும். அது நடந்தால், பொது ஒழுங்கை மீட்டெடுக்க தேவையான எந்த நடவடிக்கைகளையும் எடுப்போம். எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுக்கு அப்பால் பாகிஸ்தான் பிரதிநிதிகள் தாக்குதலுக்கு திட்டமிடுகின்றனர். அவர்களுக்கும்கூட நாங்கள் தயாராக இருக்கிறோம்.
தங்கள் அரசியலமைப்பு அந்தஸ்தில் ஏற்பட்ட மாற்றத்தை உடனடியாக ஏற்றுக்கொள்ளாத பலர் பள்ளத்தாக்கில் இருக்கக்கூடும். மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தங்கள் வாழ்க்கையை வரையறுத்துள்ள வன்முறை மற்றும் இடையூறுகளால் நோய்வாய்ப்பட்டவர்களால் அவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். அவர்களுடன் அன்பாக அனுகுவதும் அமைதி மற்றும் செழிப்புக்கான அவர்களின் விருப்பத்தை வெளிப்படுத்த அவர்களுக்கு ஒரு பாதுகாப்பான இடத்தை வழங்குவதும் இப்போது பள்ளத்தாக்கில் உள்ள எங்கள் முதன்மை பணியாகும். தடைகளைத் தளர்த்திய பின், அரசாங்கத்தின் முன்னுரிமைகள் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆக இருக்கும். ஜிஹாத் மற்றும் ஆசாதிக்கு கொஞ்சமும் இடம் இல்லை. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள ஆருடம் சொல்பவர்கள் நிச்சயமாக எங்கள் தோல்விக்காக பிரார்த்திப்பார்கள். ஆனால், எங்கள் குடிமக்களின் நம்பிக்கையின் ஆதரவுடன், அவர்கள் எண்னம் தவறானது என்பதை நிரூபிக்க உத்தேசித்துள்ளோம்.