Duvvuri Subbarao
பொருளாதாரத்தை ஊக்குவிக்கவேண்டும் என்பதற்காக வரவுசெலவுத் திட்டத்தில் நிதி ஊக்கத்தைக் கொண்டுவருமாறு நிதியமைச்சருக்கு பெரிய அளவில் அழுத்தம் தந்தனர். ஆனால், வளர்ச்சியின் வீழ்ச்சியிலிருந்து விடுபடுவதற்கான எந்தவொரு முயற்சியும் ஒரு பயனற்றதாக இருந்திருக்கும் என்பதால், அவர் இதற்கெல்லாம் இணங்கவில்லை என்பது ஆறுதலாக இருக்கிறது. இது கடுமையான சிக்கல்களைத் தோற்றுவித்திருந்தால், அது மிக மோசமானதாக இருக்கும்.
இந்தக் கட்டமைப்பிலேயே ஏற்கெனவே கணிசமான அளவுக்கு தூண்டல் இருப்பதை நிதி ஊக்க ஆர்வலர்கள் கவனிக்கவேண்டும். அரசாங்க ஆவணங்கள் காட்டுவதைவிட உண்மையான நிதிப் பற்றாக்குறை அதிகமாகவே இருக்கும் என்பது நீண்ட காலமாகத் தெரிந்ததுதான். நடப்பு நிதியாண்டுக்கும் அடுத்த நிதியாண்டுக்குமான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.8 சதவீத ஆஃப்-பேலன்ஸ் ஷீட் கடன்களை ஒப்புக்கொள்வதன் மூலம் நிதியமைச்சர் வெளிப்படைத் தன்மையை நோக்கி நகர்ந்திருக்கிறார்.
நிதிப் பற்றாக்குறையானது உண்மையில் அதிகமாக அதாவது நடப்பாண்டில் 4.6 சதவீதமாகவும் அடுத்த ஆண்டில் 4.3 ஆகவும் இருக்கும் என்பதை ஒப்புக் கொண்டுள்ளார். இது ஏற்கெனவே அதிகமாக உள்ளது. இத்துடன், வருவாய் அதிகரிப்பு, பங்குவிலக்கல் பற்றிய நம்பவியலாத கணிப்பானது, அடுத்த ஆண்டும் தொடரும். திறம்மிக்கதாக நீடிக்கமுடியாத நிதிநிலைமையே நமக்கு உள்ளது. பல காரணங்களுக்காக.இதற்குமேல் எந்தத் தூண்டுதலும் தேவையற்றதாக இருக்கும் என்பது தெளிவு.
இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க
நீண்டகால வட்டி விகிதங்களைக் குறைப்பதன் மூலம் முதலீட்டைப் புதுப்பிப்பதற்கான ரிசர்வ் வங்கியின் போராட்டத்தை நிதி அழுத்தங்கள் குறைத்து மதிப்பிடுகின்றன. இது இறையாண்மை மதிப்பீடுகளைக் குறைத்து அந்நிய மூலதனத்தை ஈர்ப்பதற்கான முயற்சிகளை பாதிக்கவைக்கும். பணவீக்கமானது ரிசர்வ் வங்கியின் இலக்குக்கு மேல் இருக்கும்போது, நம்மால் தாங்கமுடியாத அளவுக்கு, பணவீக்க அழுத்தத்தைத் தூண்டக்கூடும். முக்கியமாக, இது வெளிப்புறத்தில் அழுத்தங்களுக்கு வழிவகுக்கும். 1991 ஆம் ஆண்டின் செலுத்தல் நிலுவை நெருக்கடி மற்றும் 2013 ஆம் ஆண்டின் நெருக்கடி ஆகியவை, கடுமையான உத்திகளை அடுத்து அவற்றுக்கு மத்தியில் விரிவாக்கப்பட்ட நிதி இலாபத்தின் விளைவுகள் ஆகும்.
நிதித் தூண்டலின் ஆதரவாளர்கள் பல எதிர்வாதங்களை முன்வைப்பார்கள். சர்வதேச அளவில் நமது கடனுக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் இடையேயான விகிதம் குறைவாக உள்ளது என்று அவர்கள் கூறுவார்கள். விவரங்கள் இதற்கு ஏற்ப இருக்காது. இது எப்படியோ, கடன் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தின் சர்வதேச ஒப்பீடுகள், மற்ற அளவுருக்கள் இல்லாமல் இருந்தால் அவை தவறானவை என்பதே நம்முடைய அனுபவமும் ஆய்வுகளும் காட்டுவதாகும். நமது கடன் நிலுவையானது பெரும்பாலான வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதாரங்களைப் போலன்றி உள்நாட்டு பணத்தின்படி இருப்பதால், நாம் அதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை என்று அந்த ஆதரவாளர்கள் வாதிடுவார்கள்.
இது, முந்தைய நெருக்கடிகளிலிருந்து நம்மைப் பாதுகாத்திருக்கவில்லை. அடுத்து வரும் நெருக்கடியிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் என்று நம்புவதற்கும் உரிய முகாந்திரம் இல்லை. குறிப்பாக, நமது வெளிநாட்டுக் கடனானது முன்பைவிட அதிக வீதத்தில் இருக்கிறது, முக்கியமானது. நமது அந்நியச் செலாவணி இருப்பு வலுவானது; அதனால் செலுத்துகைச் சமநிலை நெருக்கடிக்கு வாய்ப்பே இல்லை என்றும் அவர்கள் வாதிடுவார்கள். இத்தகைய மனநிறைவு தவறானது. சாதகமான சமயங்களில் அந்நிய செலாவணி இருப்பு மிகப் பெரியதாகத் தெரிகிறது; ஆனால் மோசமான காலகட்டத்தில் எந்தவித இருப்பும் போதுமானதாக இருக்காது என்கிற பாடத்தையும் நாம் மறந்துவிடக் கூடாது.
நிதி பற்றாக்குறை அளவு அக்கறைக்குரிய ஒரு காரணியாக இருப்பதால், மறைந்துகிடக்கும் நிதித் திரட்சியின் அடிப்படைத் தரம் பெரிதாக இருக்கும். வருவாய்ப் பற்றாக்குறையானது குறைவதற்குப் பதிலாக மேலே போய்க்கொண்டே இருக்கும். இந்த ஆண்டு, அரசாங்கம் வாங்கிய கடனில் மூன்றில் இரண்டு பங்குக்கும் மேலான தொகையானது, சம்பளம், ஓய்வூதியம், வட்டி மற்றும் மானியங்கள் போன்ற நடப்பு செலவினங்களுக்குப் பயன்படுத்தப்படவுள்ளது. இந்த விகிதமானது அடுத்த ஆண்டின் மூன்று காலாண்டுகளில் இன்னும் அதிகரிக்கும். இது வெறுமனே நீடிக்கமுடியாதது, ஏனெனில் இது மூலதன செலவினங்களை அதிகரிப்பதை நோக்கித் தள்ளிவிடும்.
நிதித் திரட்சித் தரத்தின் இன்னொரு பரிமாணம் என்பது மாநிலங்களின் ஒருங்கிணைந்த நிதிநிலையே ஆகும். உண்மையில், இது ஒரு அறையில் உள்ள பெரிய யானையைப் போன்றதாகும். இத்துடன், மாநிலங்கள், மையத்தைவிட ஒன்றரை மடங்கு அதிகமாகச் செலவிடுகின்றன. மையத்தை ஒப்பிட மாநிலங்கள் தங்கள் நிதியை எவ்வளவு திறத்துடன் செலவிடுகின்றன என்பதை ஆய்வுகள் காட்டுகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”
மாநிலங்கள் நன்றாகச் செயல்பட்டிருக்கவில்லையும்கூட. மாநில நிதி தொடர்பான ரிசர்வ் வங்கியின் அண்மைய ஆண்டறிக்கையின்படி, மாநிலங்களின் நிதி விவகாரங்கள் குறித்து பல எச்சரிக்கைகளைத் தந்துள்ளது. அதாவது, மாநிலங்களின் சொந்த வருவாய் உற்பத்தியில் வலுக்குறைவு தொடர்வது, அவற்றின் நீடிக்கமுடியாத கடன்சுமைகள் மற்றும் ’விவசாயக் கடன், உதய் திட்டத்தின் கீழ் மிந்துறைக் கடன்கள் தள்ளுபடி, வருமான பரிமாற்ற திட்டங்களைச் செயல்படுத்துவது போன்ற நிதி அதிர்ச்சிகளுக்கு இடமளிக்கும்வகையில்’ மூலதனச் செலவுகளைக் குறைக்கும் போக்கு ஆகியவை. பொது நிதிகளைத் தவறாகக் கையாள்வதற்கு சந்தை அபராதம் விதிக்கும்; ஒரு நிலைக்கவியலாத நிதிநிலைமைக்கு பொறுப்பு யார், மைய அரசா மாநிலங்களா என்றெல்லாம் அது பார்க்காது.
இவை அனைத்துக்கும் மேல், நிதித் தூண்டுதலைப் பற்றிய மிகப் பெரிய அச்சம் என்னவென்றால், குறிப்பாக நம் நாட்டில் இருப்பதைப் போன்ற ஒரு தீவிரமான ஜனநாயக அமைப்பில், இது ஒரு செலவு என்று கூறி ஒரு செலவுத் திட்டத்தில் அமுக்கிவிட்டு, அழுத்தம் விலகும்போது அது திரும்பப்பெறப்படும் என்று தூண்டுவதாக இருக்கிறது. மீள்வது என்பது மிகவும் கடினம் என்பதையே அனுபவம் காட்டுகிறது. மில்டன் ப்ரீட்மேன் கூறியதைப்போல, ஒரு தற்காலிக அரசாங்கத் திட்டத்தைவிட நிரந்தரமானது எதுவுமில்லை.
ஒரு நிலையான திருப்பத்திற்கு பொருளாதாரத்துக்குத் தேவைப்படுவது தனியார் முதலீட்டை முடுக்கிவிடுவதுதான். முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ஊக்குவிப்பதற்கான அவசியமான நிபந்தனை என்பது கட்டமைப்பு மற்றும் நிர்வாகத்தில் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதாகும். இது ஒரு நீண்ட பயணமாக இருக்கும். ஆனால், சீனத் தலைவர் மாஓ -சே- துங் சொன்னதுபோல, முதல் அடியை எடுத்துவைப்பதற்கே ஆயிரம் மைல் பயணமாகவும் இருக்கும். அந்தப் பயணத்தை இந்த நிதிநிலை அறிக்கை தொடங்கவில்லை என்பது ஒரு பெரிய ஏமாற்றம். ஆனால், குறைந்த பட்சம், நிதி சாகசத்தை மேற்கொண்டு மோசமான சூழ்நிலையை மேலும் மோசமாக்கவில்லை. கெய்ன்ஸ் சொன்னதுபோல, துல்லியமாக தவறாக இருப்பதைவிட, தோராயமாக சரியாக இருப்பது நல்லது.
இந்தக் கட்டுரை, முன்னதாக, கடந்த 12-ம் தேதியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில், நிதிச் சாகசத்தைக் கலைப்போம் எனும் தலைப்பில் வெளியானது. கட்டுரையாளர், இந்திய ரிசர் வங்கியின் முன்னாள் ஆளுநர். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் தற்போது வருகைதரு பேராசிரியராக இருக்கிறார்.
இந்த கட்டுரையை தமிழில் எழுதியவர் ஆர். ஆர். தமிழ்க்கன்ல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.