ஈரான் விவகாரத்தில் இந்தியா ராஜதந்திரத்தை வெளிப்படுத்த வேண்டும் 

ஏமனின் குழப்பத்தில் இருந்து மீண்டு சவூதி அரேபியா தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படாமலாவது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

US-Iran tensions : ஈரான் விஷயத்தில் தலையிட முடியாது என்று இந்தியா ஒதுங்கிக் கொள்ளக் கூடாது. எண்ணைய் விநியோகம், வளைகுடா நாடுகளுக்கு புலம்பெயர்ந்த எண்ணற்ற இந்தியர்களின் பாதுகாப்பும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியாவில் கணிசமான வகையில் ஷியா பிரிவு முஸ்லீம்கள் இருப்பதும் ஈரானை இந்தியா அனுதாபத்துடன் அணுக வேண்டியதிருக்கிறது.

சுஜன் ஆர்.சின்னோய்

ஈரானில் கடந்த 3-ம் தேதி டிரோன் தாக்குதல் மூலம் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (ஐ.ஆர்.ஜி.சி) குட்ஸ் படையின் தலைவர் ஜெனரல் காசெம் சுலைமாணி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்கா-ஈரான் இடையே பதற்றம் அதிகரித்தது. ஆனால், இதற்கு பதிலடியாக ஈரான் தரப்பில், கடந்த 8-ம் தேதி அல் அசாத், இர்பில் ஆகிய இரண்டு அமெரிக்க தளங்களின் மீது பல்வேறு ஏவுகனைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், இப்போதைக்கு போர் மேகம் கலைந்திருக்கிறது. இது குறித்து அமெரிக்காவின் முப்படைகளின் தலைவர் ஜெனரல் மார்க் மில்லே, ஏவுகனைத்தாக்குதல்கள் கட்டமைப்புகள், வாகனங்கள், விமானம், ஆளை கொல்லுதல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டிருந்தது என்றார். 80 பேர் கொல்லப்பட்டனர் என்று ஈரான் தரப்பில் சொல்லப்பட்டாலும் கூட அமெரிக்க தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவேத் ஜரீப் தமது டிவிட் செய்தியில், சுயப்பாதுகாப்புக்காக இருநாடுகளுக்கு இடையேயான உறவுகள் பாதிக்காதவாறு நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” என்று கூறி உள்ளார். மேலும், “நாங்கள் பதற்றத்தை அதிகரிக்கவோ அல்லது போரை விரும்பவோ இல்லை” என்று கூறி உள்ளார். அதே நாளில் அதிபர் டிரம்ப் கூறுகையில், அமெரிக்க தரப்பில் எந்த உயிரிழப்பும் இல்லை. ராணுவ முகாம்கள் சிறிதளவு சேதம் அடைந்தன. ஈரான் தற்போது கொஞ்சம் கீழிறங்கி வந்திருக்கிறது. அனைத்துத் தரப்புக்கும் இது நல்லது. உலகத்துக்கும் இது நல்ல விஷயம்,” என்று கூறி உள்ளார்.

இதையெல்லாம் பார்க்கும்போது, இரண்டு தரப்பும், தங்கள் நிலையில் இருந்து பின்னால் அடி எடுத்து வைத்திருக்கின்றன. அமெரிக்கா முன்னெச்சரிக்கை செய்திருக்கிறது உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது என்றே தோன்றுகிறது. அதே நேரத்தில் ஈரான் தமது அமெரிக்க வெறுப்பில் இருந்து தணிவதற்கும் உதவியிருக்கிறது. சுலைமாணி எனும் தேசிய கதாநாயகரை கொன்றவர்களை பழிவாங்க வேண்டும் என்ற ஆழமான பொது உணர்வை சமாதானப்படுத்த வேண்டும் என்ற கடைமை இருப்பதாக ஈரான் தரப்பில் கூப்பட்டது. ஈரான் தமது பதிலடியை முடித்துக் கொண்டது, இதன் மூலம் அடையாளமான தாக்குதல்களுக்கு அப்பால் பதற்றத்தை அதிகரித்தல் என்ற நோக்கம் தெஹ்ரானுக்கு இல்லை என்பதை அது தெளிவுபடுத்தி இருக்கிறது.

ஈரான்-சவூதிக்கு இடையேயான நல்லிணக்கப் பேச்சுவார்த்தைகளில் சுலைமாணி ஈடுபட்டுவந்ததாக க் கூறப்படுகிறது. எனவே, வளைகுடா பகுதியில் நீண்டகாலமாகவே அமெரிக்காவை உறுத்தும் முள்ளாக அவர் இருந்திருக்கிறார் என்றும், அதன் காரணமாகவே அவர் திட்டமிட்டு கொல்லப்பட்டிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள். பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு காரணமாக அண்மைகாலமாக அமெரிக்காவில் ஈரான் அரசுக்கு எதிராக அதிகரித்து வரும் போராட்டங்களில் பலர் கொல்லப்பட்டிருக்கின்றனர். உள்ளூர் அதிருப்தி அதிகரித்திருப்பதன் காரணமாக அதை தமக்கு சாதகமாக ஆக்கிக் கொண்டது அமெரிக்கா என்பது நம்பக்கூடியதாக இல்லை. சுலைமாணி மரணம் காரணமாக அமெரிக்கா உடனான பதற்றம், ஈரான் அரசுக்கு ஆதரவாக அந்த நாட்டின் மக்கள் திரண்டிருப்பதை காணமுடிந்தது. எனினும், கடந்த 8-ம் தேதி உக்ரைன் விமானத்தை எந்தவித நோக்கமும் இன்றி தாக்கி வீழ்த்தியதை ஈரான் ஒப்புக் கொண்டது. இதன் காரணமாக அந்நாட்டுக்கு எதிராக போராட்டங்களும் வெடித்துள்ளன. இதனால், உள்நாட்டு நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருக்கிறது.

அதனை அகற்றுவதற்கு ஈரானுக்கு பல வகையான வாய்ப்புகள் உள்ளன. ஆனால், ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்களின் மீதான பதிலடி தாக்குதலை நிறுத்தி விட்டது. லெபனான், சிரியா மற்றும் ஏமனில் பிராந்திய பிரதிநிதித்துவத்தை உபயோகிப்பது அபாயமாக முடியலாம். பிரச்னையை அதிகரித்திருக்கக் கூடும். முழுவதுமாக கணிக்கமுடியாத சூழலுக்கு ஈரானை அது இட்டுச்சென்றிருக்கும்.

பதற்றத்தின் உச்சத்தில், ஈரானின் பதிலடி தாக்குதலில் அமெரிக்க தரப்புக்கு அதிக உயிர் சேதம் ஏற்பட்டிருந்தால், அமெரிக்க தரப்பில் இருந்து குறிப்பிட்ட சில இடங்களை, குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருக்கும். ஈரானில் உள்ள 52 இடங்களை குறிவைத்திருப்பதாக டிரம்ப் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தார். 1979-ம் ஆண்டு தெஹ்ரானில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்த 52 அமெரிக்கர்களை ஈரான் பிணைய கைதிகளாக வைத்திருந்தது. இதனை குறிக்கும் வகையிலேயே 52 இடங்களில் தாக்குதல் நடத்துவோம் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ஈரான் அணு ஆயுத த்திறனைக் கொண்டிருப்பதற்கு சாத்தியம் இல்லை என்பது பற்றி டிரம்ப் உறுதியாக இருந்தார். வெள்ளை மாளிகையில் நடந்த கூட்டத்தில் வாழ்த்துகள் பரிமாறிக்கொள்ளப்படுவதற்கு முன்பே, “நான் அமெரிக்க அதிபராக இருக்கும் வரை, ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களை உபயோகிக்க அனுமதிக்க மாட்டேன்” என்று அவர் உச்சரித்த முதல் வார்த்தைகள் இவைதான். இனி ஈரானின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்று போதுமான ஒரு தெளிவான எச்சரிக்கையானதாகும். இதனை ஈரான் நினைவில் கொண்டிருக்கிறது.  குறிப்பாக, சுலைமான் கொல்லப்பட்டதற்கு பின்பு, இணை ஒருங்கிணைந்த செயல் திட்டத்தில் இருந்து வெளியேறுவது என்று ஈரான் பொது வெளியில் அறிவித்தபோது கூட, என்.பி.டி, ஐ.ஏ.இ.ஏ கள ஆய்வுகளை சர்வதேச அமைப்புகள் தொடர்ந்து மேற்கொள்ளலாம் என்று உறுதி அளிப்பதில் கவனமாக இருந்தது.

ஈரான் தமது பிராந்தியத்தில் ஆதரவு கரம் நீட்டும் நாடுகளைக் கொண்டிருக்கும் அதே வேளையில், அமெரிக்காவும் இஸ்ரேலின் வலுவான ஆதரவைக் கொண்டிருக்கிறது. கூடுதலாக அந்த மண்டலத்தில் பல்வேறு தளங்கள், படைகளையும் கொண்டிருக்கிறது. இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் வெறுக்கத்தக்க போக்கைக் கொண்டிருக்கும் வேளையில், சுலைமான் கொலைக்குப் பின்னர் டிரம்பின் செயலை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, சந்தேக்கதுக்கு இடமின்றி பாராட்டினார். ஈரான் அமெரிக்க தளங்களில் பதிலடித்தாக்குதல் நடத்தியதற்கு பிறகு, இஸ்ரேல் பிரதமர் கூறுகையில், ஈரான் தங்களை தாக்கியிருந்தால் அந்த நாட்டினை அழித்து ஒழிக்கும் திறனை கொண்டிருக்கின்றோம் என்ற கருத்தை வலுவாக வெளியிட்டார். ஈரான், அமெரிக்கா இடையேயான எந்த ஒரு ராணுவ மோதலும் ஷியா-கள், சன்னி-கள், குர்தீஸ்கள் இடையே ஆழமான சிக்கலுக்கு வழிவகுக்கும். ஈராக் மேலும் பலவீனமாகும்.

ஈராக் மண்ணில் இருந்து அனைத்து வெளிநாட்டு படைகளும் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையுடன் கூடிய தீர்மானத்தை (வெளிநாடுகளைக் கட்டுப்படுத்தாத) ஈராக் பாராளுமன்றம் கொண்டு வந்தபோதும் அதுஎந்த ஒரு வித்தியாசத்தையும் ஏற்படுத்தவில்லை. இத்தகைய ஒரு சூழலில், இது அமரிக்கா மற்றும் அதன் கூட்டுப்படைகளின் நோக்கமட்டுமல்ல, தவிர ஈரானின் நோக்கமும் அதுதான் என்று முடிவுக்கு வர முடியும்.  போர் மேகங்கள் கலைந்தபோதிலும், எண்ணைய் சந்தையை இயக்கும் நரம்புகளில் ஏற்பட்ட பதற்றம் தணியவில்லை. ஒரு பேரல் கச்சா எண்ணையின் விலை ஒரு டாலர் என்று குறைந்த அளவில் ஏறினாலும் கூட இந்தியாவின் இறக்குமதி கச்சா எண்ணையின் செலவு 1.6 பில்லியன் டாலராக அதிகரிக்கும் என்று கேர் மதிப்பீடு குறிப்பிடுகிறது.

ஈராக் பிரதமர் அதில் அப்துல் மகாதி தமது பாராளுமன்ற உரையில் குறிப்பிடும்போது, பாக்தாத் வந்த சுலைமாணி தம்மை சந்தித்து ஈரான்-சவூதி அரேபியா இடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக கூறினார் என்றார். இஸ்லாமிய உலகின் தலைமைக்காக இரண்டு நாடுகளுக்கு இடையே வரலாறாகத்தொடரும் மோதலை முடிவுக்கு கொண்டு வரும் இந்த முயற்சி முதிர்ச்சி பெறவில்லை என்பதுபோல தோன்றலாம். அதே நேரத்தில் ஏமனுக்கு எதிராக ராணுவ வெற்றி பெற்றுவிட்டோம் என்ற பொய் தோற்றத்தை சவூதி அரபியா துரத்திக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மையாக இருக்கிறது.

செப்டம்பர் மாதம் குரியாஸ் மற்றும் அப்க்யாய்க் ஆகிய இடங்களில் உள்ள இரண்டு அராம்கோ எண்ணைய் வயல்கள் மீது யாருமே எதிர்பார்க்காத வகையில் நடந்த ட்ரோன் தாக்குதல், தவிர எதிர்பாராத வகையில் நடந்த சுலைமாணி படுகொலை ஆகிய நிகழ்வுகளுக்குப் பின்னர் ஈரானுடன் மறைமுகப் பேச்சுவார்த்தைகளை நடத்த சவூதி அரேபியா முன் வரலாம். ஏமனின் குழப்பத்தில் இருந்து மீண்டு சவூதி அரேபியா தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படாமலாவது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க 

சிரியா விவகாரத்தில் ஈரானின் கொள்கைகளுக்கு ரஷ்யா ஆதரவு தெரிவிக்கிறது. சுலைமாணி மீது நடந்த தாக்குதல் குறித்து அமெரிக்காவை அந்த நாடு கண்டித்துக் கூறுகையில் சர்வதேச விதிகளுக்கு மீறிய செயல் என்று தெரிவித்துள்ளது. எனினும், இந்த இரண்டு நாடுகளைத் தவிர சீனா கூடுதலாகவே கண்டித்துள்ளது. ஆபத்தான ராணுவ சாகசவாதம் என்று கூறி உள்ளது. சீனா, ஈரானின் பெரிய எண்ணை சந்தை மட்டுமின்றி ராணுவ ஆயுதங்கள் விற்பனை, முன்னணி வர்த்தக்க் கூட்டாளியும் கூட. இணை ஒருங்கிணைந்த செயல் திட்டத்தின் பாதுகாப்புக்கான சீனாவின் ஆதரவை ஈரான் மறுபடியும் உறுதி செய்துள்ளது.

இந்த விஷயத்தில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் கடந்த ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் நான்கு நாள் முத்தரப்பு கடற்படை பயிற்சியில் ஒருங்கிணைந்தன. ஏமன் வளைகுடாவில் முதன்முறையாக இது போல நடந்தது. இதன் மூலம் ஈரான் தனிமைப்படுத்தப்படவில்லை என்று அமெரிக்காவுக்கு வலுவான ஒரு செய்தியை அந்த நாடுகள் கூறின. 1950-களில் ஏற்பட்ட கம்யூனிஸ அலை, 1979-ம்ஆண்டில் ஆப்கானிஸ்தானில் சோவியத் ஆக்கிரமிப்பு போன்ற ஒவ்வொரு பிரச்னைகளின் போதும், அல்லது அண்மையில் நடந்த 9/11 தாக்குதலுக்குப் பின்னதான உலகளாவியதீவிரவாதம் எதுவாக இருந்தாலும் , பாகிஸ்தான் புதிய சிப் கொண்ட விளையாட்டுடன் திரும்பி வருகிறது. எனினும், பாகிஸ்தானுக்கான அனுமதியாக இதனை அமெரிக்கா எடுத்துக் கொள்ளாது.

இது சொந்த அழுத்தங்கள் மற்றும் ஒரு துரோக வரலாற்றின் வழியே இயக்கப்படுகிறது. சவூதி, ஏமனுக்கு ஆதரவாக ஒன்று சேர்வதில் பாகிஸ்தானின் ஆதரவை பெறாவிட்டால், ஈரானுக்கு எதிராக பாகிஸ்தானின் ஆதரவை அமெரிக்கா பெற்று விடும்பட்சத்தில் இது சந்தேகத்துக்கு உரியதாகிவிடும். ரஷ்யா, சீனா மற்றும் ஈரானுக்கு இடையே எந்த ஒரு வளர்ந்து வரும் கூட்டணியை நோக்கி பாகிஸ்தான் ஈர்க்கப்படும். எனவே இதில் தலையிட முடியாது என்று இந்தியா ஒதுங்கிக் கொள்ளக் கூடாது. எண்ணைய் விநியோகம், வளைகுடா நாடுகளுக்கு புலம்பெயர்ந்த எண்ணற்ற இந்தியர்களின் பாதுகாப்பும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியாவில் கணிசமான வகையில் ஷியா பிரிவு முஸ்லீம்கள் இருப்பதும் ஈரானை இந்தியா அனுதாபத்துடன் அணுகவேண்டியதிருக்கிறது.

ஈரானின் ஹார்முஸ் அமைதி முயற்சியில் இருந்து, அமெரிக்காவின் சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கட்டமைப்பு என பிராந்திய பாதுகாப்புக்கான திட்டங்கள் ஏராளமாக உள்ளன. பெர்சியன் வளைகுடாவில் ரஷ்யாவும் கூட்டுப்பாதுகாப்புத் திட்டங்களைக் கொண்டுள்ளது. நல்லெண்ணத்துடன் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய பெரிய நாடு என்ற வகையிலும், நீடிக்கப்பட்ட சுற்றுப்புற பிராந்திய நாடுகளைக் கொண்டிருக்கும் என்ற வகையிலும் நல்ல விளைவுகளின் பொருட்டு பிராந்திய ராஜதந்திரத்தை இந்தியாவின் நலனுக்காக கைகொள்ள வேண்டும்.

இந்த கட்டுரை முதலில் 2020 ஜனவரி 14-ம் தேதியிட்ட நாளிதழில் Reshaping the Gulf என்ற தலைப்பில் வெளியானது. கட்டுரையின் எழுத்தாளர் ஒரு முன்னாள் வெளிநாட்டு தூதுவர். தற்போது பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வு நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரலாக உள்ளார். கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அவரது தனிப்பட்ட கருத்துகளாகும்.

தமிழில் இந்த கட்டுரையை எழுதியவர் : பாலசுப்ரமணி கார்மேகம்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Opinion News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close