ப.சிதம்பரம்
அடல் பிஹாரி வாஜ்பாய் தன்னுடைய 93வது வயதில் உடல் நலக்குறைவாக் காலமானார். ஸ்வயம்சேவக் அமைப்பின் அங்கத்தினராக தன்னுடைய அரசியல் வாழ்வைத் தொடங்கினார். 1980ல் எல்.கே. அத்வானியுடன் இணைந்து பாஜக கட்சியை நிறுவிய காலத்தில் இருந்து தன்னுடைய இறுதி மூச்சு வரை பாஜகவிற்கு உண்மையான விசுவாசியாக வாழ்ந்து மறைந்தவர் அடல் பிஹாரி வாஜ்பாய்.
வாஜ்பாய் என்னும் கருணை குணம் கொண்ட தலைவர்
ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் அனைவருக்கும் அவர் சரியான கட்சியில் இருக்கும் மிகச் சரியான மனிதர். ஆனால் மற்ற கட்சியினர் அனைவருக்கும் தவறான கட்சியில் இருக்கும் சரியான மனிதர் தான் அவர் என்பது மற்றவர்களின் கருத்து.
1984ல் பாராளுமன்றத்துக்குள் நான் நுழையும் போது அங்கே இருந்த இரண்டு பாஜக உறுப்பினர்களில் வாஜ்பாய் அவர்களும் ஒருத்தர். அவருக்கு எதிரே, எதிரணியில் நான் அமர்ந்திருந்தேன். அவர் விபி சிங்கிற்கு ஆதரவுக் குரல் கொடுத்தார். நாங்களோ அவருக்கு எதிர்ப்பு குரல் கொடுத்தோம்.
அதனைத் தொடர்ந்த ஆறு வருடங்களில் காங்கிரஸ் கட்சி மிகவும் மோசமான பின்னடைவை சந்தித்தது. ஆனால் பாஜக தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதி பெற்று எல்.கே. அத்வானி மற்றும் வாஜ்பாயின் அடையாளத்தோடு பலம் பெற்றன.
முதல்முறையாக பிரதமர் பதவி வகித்த வாஜ்பாய் அப்பதவியில் 13 நாட்கள் மட்டுமே நீடித்தார். அதன் பின் 13 மாதங்கள் ஆட்சியில் மற்றொரும் ஒரு முறை பிரதமாரனார்.
அந்த 13 மாத ஆட்சி காலத்தில் பொக்ரான் அணு ஆயுத சோதனையை வெற்றி கரமாக நடத்தி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துவிட்டார். அதனால் தான் 1999ம் ஆண்டு தேர்தலில் 182 இடங்களில் வெற்றி பெற்று வாஜ்பாய் மீண்டும் பிரதமராக பதவி வகிக்கத் தொடங்கினார்.
எங்கும் நண்பர்கள் தான்… யாரும் எதிரிகள் இல்லை
அவர் ஒரு மிகச்சிறந்த மனிதர். அவருடைய கட்சியின் மீது இருந்த இறுக்கங்களை அவர் தான் தளர்த்தினார். அனைத்து கட்சியிலும் நல்ல மனிதர்களை சம்பாதித்தார். எதிர் கட்சியில் இருப்பவர்களே ரசிக்கும் படி அவரின் நடவடிக்கைகள் இருந்தன. நாட்டின் பொருளாதார வளர்ச்சிப் பற்றி அதிக அக்கறைக் கொண்டிருந்தார். மொத்தமாக அவர் ஆட்சி செய்த 6 ஆண்டு காலங்களில் அவருக்கு எதிரிகள் என்று யாருமே கிடையாது. 2004ல் கட்சிப் பொறுப்பில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டார். அவருடைய கருணையையும் அன்பையும் விவரிக்க வார்த்தைகள் போதாது.
வாஜ்பாயுடன் என்னுடைய நாட்கள்
நான் நிதித்துறை அமைச்சராக இருந்த காலத்தில் தனியார் நிறுவனங்களுக்கான காப்பீட்டுத் திட்டம் தொடர்பான ஒரு முக்கிய மசோதாவிற்காக வேலை பார்த்துக் கொண்டிருந்தோம். எதிர் கட்சியாக இருந்தது பாஜக. அவர்கள் பலத்த எதிர்ப்பினை தெரிவித்தனர். வெளிநாட்டு முதலீடு குறித்த கேள்விகளும் எழுப்பப்பட்டன. பின்பு வெளிநாட்டு முதலீட்டினை 20% என்ற நிலையில் நிறுத்திக் கொள்ளலாம் என்று கூறிய போது முதலில் வாஜ்பாய் அதனை ஏற்றுக் கொண்டா. ஆனால் பெரிய தடையாக இருந்தது முரளி மனோகர் ஜோஷி தான்.
பின்பு அந்த மசோதா மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது வாஜ்பாய் “எங்கள் கட்சி உங்களின் மசோதாவிற்கு ஆதரவு தரும்” என்று உறுதியாக கூறினார். ஆனால் முரளியின் பலத்த எதிர்ப்பு காரணமாக அம்மசோதா தோல்வி அடைந்தது. ஆனால் அதன் பின்னர் அவர் என்னை அழைத்து நடந்தவற்றிற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டார். ஆனால் அவர் ஆட்சி பொறுப்பிற்கு வந்த பின்பு அந்த மசோதாவை நிறைவேற்றினார்.
வாஜ்பாய் மிகச் சிறந்த தலைவர். நல்ல மனிதன். அவருடைய குணங்களுக்காக அவரை இந்த வரலாறு நினைவு கூறும்…