Advertisment

சாதிக்கு வாக்களிப்பது - பலன்களுக்காக வாக்களிப்பது இடையே போட்டி

நமன் புகாலியா: உறுதியான விஷயங்களைத் திறம்பட வழங்கும் பாஜக, நல்ல சுகாதாரம் மற்றும் கல்விக்கான ஆம் ஆத்மியின் வாக்குறுதி ஆகியவற்றால், அரசு சேவைகளுக்கான சாதி அடிப்படையிலான இடைத்தரகர்களின் கட்டமைப்பின் பங்கு குறைந்து வருகிறது.

author-image
WebDesk
New Update
Elections results, UP, Punjab, பாஜக, ஆம் ஆத்மி கட்சி, சாதிக்கு வாக்களிப்பது - பலன்களுக்காக வாக்களிப்பது இடையே போட்டி, Voting for caste versus voting for benefits, BJP, Aam Aadmi party, AAP

சாதி அடிப்படையிலான கருத்தாய்வுகளின் படி வாக்களிக்கும் நடைமுறை சிறிது சிறிதாக மாறி வருவது, ஒரு குறுகிய செயல்முறை மூலம் இந்து தேசியவாதத்தின் சேவையில் சாதியக் கூட்டணி என்ற வகையில் விவாதிக்கப்பட்டது.

Advertisment

சட்டமன்றத் தேர்தல் முடிவுகளானது வாக்காளர்களின் கருத்தில் ஏற்பட்ட உடனடி மாற்றம், வாக்களிக்கும் தேர்வுகளை நிர்ணயிப்பதில் சாதியின் பங்கு ஆகியவை, வாக்காளர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள், அதன் அடிப்படையில் வழங்கப்பட்ட பலன்களின் தன்மையுடன் அது எவ்வாறு உத்திரீதியாக பின்னிப்பிணைக்கப்பட்டது என்ற இரண்டு அம்சங்களின் அடிப்படையில் வாக்காளர்கள் கருத்தில் ஏற்பட்ட மாற்றங்களின் கீழ் விவாதிக்கப்படுகிறது.

சாதி அடிப்படையிலான கருத்தாய்வுகளின் படி வாக்களிக்கும் நடைமுறை சிறிது சிறிதாக மாறி வருவது, ஒரு குறுகிய செயல்முறை மூலம் இந்து தேசியவாதத்தின் சேவையில் சாதியக் கூட்டணி என்ற வகையில் விவாதிக்கப்பட்டது, இது வரையறுக்கப்பட்ட கண்ணோட்டம். மேலும், இது தேசியவாதத்தின் மேலோட்டமான கருப்பொருளை மிகவும் சிக்கலான சாதிக் கணக்கீடுகளுடன் திசைதிருப்புகிறது.

சாதி அடிப்படையிலான கட்சிகள் பலன்களைப் பெறுவதற்கு அவற்றின் இடைநிலை அவசியமாக இருந்த காலத்தில் செழித்து வளர்ந்தன. சகோதரத்துவம் என்ற கடினமான ஒன்றைச் செய்வதில் வெற்றி பெறுவதற்கு அப்பால், அரசாங்கத்திடம் இருந்து வேலையைப் பெறுவதற்காக ஒருவரின் சாதி வலையமைப்பை அணுகுவதுதான் சாதி அரசியலாக இருக்கிறது. இதன் பொருள் சாதியுடன் அடையாளப்படுத்துவதும், இந்த அடையாளத்தை பயன்பாட்டு நோக்கங்களுக்காக பயன்படுத்துவதும் ஒருசேர நடந்தது. டிஜிட்டல் விநியோக அழுத்தம் எழுச்சி இந்த சமன்பாட்டை கணிசமாக மாற்றியுள்ளது. JAM (ஜன் தன்-ஆதார்-மொபைல்) என்ற மூன்று அம்சங்கள் வழியாக இப்போது பல நன்மைகள் வழங்கப்படுகின்றன.

இந்த பொறிமுறையானது பலன்களைப் பெறுவதற்கு சாதித் தலைவர்களை தரகர்களாக நம்பியிருப்பதை நீக்குகிறது. ஜன் தன்-ஆதார்-மொபைல் முழுமையான வளர்ச்சி எனும் விமர்சனம் மற்றும் சாதி அடிப்படையிலான வாக்குப் பரிசீலனைகளின் ஒப்பீட்டளவிலான குறைவுகளும் ஒத்துப்போகின்றன. தொடர்ந்து பலன்களை வழங்கக்கூடிய பதவியில் இருப்பவர்களின் அரசியல் மேலாதிக்கமாக இது மாறியுள்ளது. லாபர்தி வர்க்கம் (பயனாளி பிரிவு) பல சாதிக் குழுவாகும், இது அரசின் உதவி எனும் கலாச்சாரத்தை அங்கீகரிப்பதாகக் கருதப்படுகிறது. மத அடையாளமானது வாக்களிக்கும் விருப்பங்களைத் தீர்மானிப்பதாக அல்ல, ஒரு ஊக்கியாகப் பார்க்கப்படுகிறது. சாதி அடிப்படையிலான ஆதரவளிக்கும் பொருளாதாரத்தின் இந்த தகர்ப்பு, வாக்களிக்கும் விருப்பத் தேர்வில் இருந்து சாதியின் பங்களிப்பை ஒரு சமூக அடையாளமாக மட்டுமே மாற்றுகிறது. உ.பி.யில் பகுஜன் சமாஜ் கட்சியின் செல்வாக்கு குறைந்து வருவதன் மூலம் இந்த மாற்றத்தின் விளைவுகள் மிகத் தெளிவாகத் தெரிகின்றன..

பாஜக சாதியைப் பயன்படுத்தாது என்பதல்ல. இந்துக்கள் பாதுகாப்பாக உணர்ந்தால், சாதி அரசியலின் தர்க்கம் அதன் பெரும் திட்டத்தில் தப்பிப்பிழைக்கும். இந்து அடையாளத்தின் உள்ளார்ந்த பகுதியாக சாதி அரசியலை கட்சி அங்கீகரிக்கிறது,

ஆனால் அவர்கள் தங்களை மதம் மற்றும் நலனின் பாதுகாவலராக சித்தரிப்பதன் மூலம் அனைத்து சாதியினரையும் ஈர்க்கிறார்கள், இது ராமராஜ்ஜியத்தின் யோசனையில் உச்சம் பெறுகிறது. பொதுமக்களின் நலன் சார்ந்த அரசு அவர்கள் உத்தியின் கருவாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது, இது JAM (ஜன் தன்-ஆதார்-மொபைல்)ஐ முக்கியமாக்குகிறது. வாக்குறுதியளிக்கப்பட்ட மற்றும் வழங்கப்படும் பலன்களின் இயல்பு தன்மையை சமமாக புரிந்துகொள்வது முக்கியமானதாகும். . "இரட்டை-இன்ஜின்" என்ற சொல்லாட்சி பாஜவின் கூற்றையும், எளிமையான (மற்றும் உறுதியான) நன்மைகளின் ஒரு வகுப்பின் ஆதரவாளராக அதன் செயல்திறனையும் உறுதிப்படுத்துகிறது.

ஓய்வூதியம், உதவித்தொகை, மானியங்கள், உணவு தானியங்கள், தடுப்பூசிகள் போன்ற அனைத்தும் இந்த வகையைச் சேர்ந்தவை. இந்த பலன்கள் வழங்குவதை விநியோகிக்க ஒருங்கிணைந்த மென்பொருள் கட்டமைப்பு (அடையாளம்காணுதல், பணம் செலுத்துதல் மற்றும் இணைப்பு) இப்போது நடைமுறைக்கு வந்திருக்கிறது.. ஆண்களை விட பெண்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கும் இடங்களிலெல்லாம் பாஜக சிறப்பாக செயல்படும் என்ற பிரதமரின் கூற்றையும் இந்தப் போக்கு விளக்குகிறது. குடும்பத்திற்கான நன்மைகளின் தாக்கங்களை பெண்கள் அதிகம் மதிக்கிறார்கள், எனவே அவற்றை வழங்கும் கட்சிக்கு ஒப்புதல் அளிக்கிறார்கள்.

எதையும் வாய்ப்பாக விட்டுவிடாது என்று அறியப்பட்ட பாஜக வெறுமனே செய்த பணிகளின் கணிதத்தை மட்டும் நம்பவில்லை, ஆனால் தேசியவாதம் மற்றும் கலாச்சாரத்தின் இரசாயனத்திற்கு இடையில் அதை இணைக்கிறது. இது மற்றொரு நோக்கத்திற்கு உதவுகிறது: வேலைவாய்ப்புகள், கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற சிக்கலான (மற்றும் அருவமான) பயனாளிகளின் எதிர்பார்ப்பை சமன்படுத்துவதற்கு அதிகமான அளவிலோ மற்றும் முறையான மாற்றமோ தேவைப்படுகிறது.

ஆம் ஆத்மி கட்சியானது சமூக (அருகாமை) கிளினிக்குகள் மற்றும் பள்ளிளை மேம்படுத்துதல் போன்ற சிக்கலான நன்மைகளை வழங்குவதற்கான இந்த இடத்தை ஆக்கிரமிக்க முயல்கிறது. அதன் பங்கிற்கு, அந்த கட்சியானது ஊனத்தை சாதகமான ஒன்றாக மாற்றியுள்ளது. ஏனெனில் டெல்லியின் வரம்புக்கு உட்பட்ட அரசாங்க மாதிரியின் தன்மையுடன், மையத்தின் இரட்டை-இயந்திர ஆதரவு இல்லாமல், ஏழைகளுக்கு பள்ளிகள் மற்றும் சுகாதார கட்டமைப்புகளை மறுசீரமைப்பதை விட அந்த கட்சியால் அதிகம் செய்ய முடியாது. பஞ்சாபில் அதன் அழகான வெற்றி, நீண்டகாலமாக தன்னம்பிக்கையுடன் பின்னணியில் மாற்றங்களைத் தேடும் வாக்காளர்களுக்கு ஒரு சாத்தியமான மாற்றாக ஆம் ஆத்மி இருப்பதைக் குறிக்கிறது.

இந்த மாதிரிகளுக்கு இடையே குறுகிய கால அரசியல் போட்டியானது எளிய நன்மைகள் மூலம் உடனடி மனநிறைவு, சிக்கலான நன்மைகள் மூலம் நீண்ட கால நன்மைகள் ஆகியவற்றுக்கு இடையே சூடுபிடிக்க வாய்ப்புள்ளது. இந்த இரண்டு முக்கிய மற்றும் வளர்ந்து வரும் அரசியல் சக்திகளும் வெவ்வேறு பகுதிகளில் தங்களுக்கான இடங்களை பெற்றுள்ளன.ஆம் ஆத்மியின் தேர்தல் உத்திகளை எதிர்கொள்ள உடல்நலக் காப்பீடு, வேலையில்லாதோருக்கு பலன்கள் மற்றும் பள்ளி வவுச்சர்கள் போன்ற இரட்டிப்பு வாக்குறுதிகளை பாஜக அள்ளி வீசுவதை பார்க்கலாம். இருப்பினும், இந்த தந்திரங்கள் இந்த தேர்தல் களங்களில் திறன்களை அதிகரிக்காது.

குறைந்தது மூன்று முக்கியமான கேள்விகளை இந்த போக்குகள் எழுப்புகின்றன. முதலாவதாக நிலப்பரப்பில் ஏற்படும் இந்த மாற்றம் இளம் வாக்காளர்களை எங்கே இட்டுச் செல்கிறது? செல்வாக்கில் இதயப்பகுதியாக விளங்கும் முக்கியமான மாநிலங்களில் அவர்களின் பங்களிப்பு (கடைசி சுற்றில் அவர்களின் வாக்குப்பதிவு விகிதத்தை விட) குறைந்து வருகிறது. இங்கே பயனாளிகள் பழைய வாக்காளர்களாக இருப்பதால் ஜனநாயக செயல்முறையின் நம்பிக்கையின்மையின் அடையாளத்தை இது குறிக்கிறது. இரண்டாவதாக, பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து வாக்கு சதவிகிதத்தில் பெருமளவு சரிவைச் சந்தித்து வரும் சாதி அடிப்படையிலான கட்சிகளை, இந்த ஆதாய-அடிப்படையிலான உத்திகள் விட்டுவைப்பதில்லை. சாதீய கட்டபைப்பு தலையிட வேண்டிய தேவை வேகமாகச் சுருங்கி விட்டது . பிஜேபியின் வாக்குறுதிகளை நிறைவேற்றும் உறுதி தன்மை, ஆம் ஆத்மியின் குறைந்த பட்சம் நல்ல மற்றும் அணுகக்கூடிய கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவதும் சாதி அரசியலின் முக்கியத்துவத்தை மேலும் சீர்குலைக்கக்கூடும். மூன்றாவதாக, வெற்றிகரமாக வாக்குறுதிகளை நிறைவேற்றினோம் என்று நிரூபிக்க முடியாத - பிராந்திய மற்றும் தேசிய - கட்சிகளின் நீண்ட வால் எங்கே போனது? பாஜவின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு விநியோக கட்டமைப்பால் காங்கிரஸின் நன்மைகளுக்கான அதன் உரிமைகள் அடிப்படையிலான கட்டமைப்பு இப்போது நெக்கடிக்கு உள்ளாக்கி இருக்கிறது. குறிப்பாக காங்கிரஸின் சரிவு வியப்பாக உள்ளது.

கற்பனையான பக்கவாட்டு சிந்தனை தேவைப்படுகிற வேலை உருவாக்கம் என்ற வடிவத்தில் எல்லாக் கட்சிகளுக்கும்,இன்னும் பரந்த மற்றும் முக்கியமான வாய்ப்பு உள்ளது, தற்போதுள்ள அரசியல் கட்சிகள் எதுவும் இதனை வெளிப்படுத்தவில்லை. இந்த வெளியில்தான் இளம் இந்தியர்களுக்கான ஜனநாயகப் போட்டி நடைபெறுகிறது. வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்ற உறுதியான கதைகளை காணக்கூடிய அரசியல் முகவர்கள் செழிக்க முடியும். விவசாயப் பொருளாதாரம் குறைவான முக்கியத்துவம் பெறுவதால், நகர்ப்புறம் மற்றும் நகர்ப்புற அபிலாஷைகள் பரவுவதால், வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்தால் தூண்டப்படும் புதுப்பிக்கப்பட்ட அரசியல் தொழில்முனைவுக்கான சிறப்பான தருணமாக இது இல்லை. இது ஒரு உன்னதமான நடவடிக்கை மட்டுமல்ல, நிலையான அரசியல் மேலாதிக்கத்திற்கான உறுதியான நடவடிக்கையாகும்.

இந்தக் கட்டுரை முதன்முதலில் 17ம் தேதியிட்ட அச்சுப் பதிப்பில் ‘How JAM cut the caste vote’ என்ற தலைப்பில் வெளிவந்தது. எழுத்தாளர் WalkIn அமைப்பின் நிறுவனர் ஆவார். அவர் இதற்கு முன்பு ஃபோர்த்லயன் டெக்னாலஜிஸ் என்ற அரசியல் பரப்புரை அமைப்பின் இணை நிறுவனர் ஆக இருந்தார்.

தமிழில்; ரமணி

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Bjp Punjab Congress Aam Aadmi Party
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment