Advertisment

வாசல் தேடி வரும் ஆரம்ப சிகிச்சை: இது ஏன் முக்கியம்?

ஆண்களின் சர்க்கரை நோயின் அளவு கடந்த 5 ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரித்துள்ளது. 2015-16ல் 6.77 ஆக இருந்தது 2019-21டல 12-14 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது. இவ்வளவு வேகமாக உயர்ந்துள்ளதால்..

author-image
WebDesk
New Update
blood sugar

வாசல் தேடி வரும் ஆரம்ப சிகிச்சை குறித்து பார்க்கலாம்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

-Nachiket Mor and Parvathi Raman (நாச்சிகெட் மோர் மற்றும் பார்வதி ராமன்)

Advertisment

தொன்று தொட்டு உடல்நல சேவை என்பது ஒரு மருத்துவமனையிலோ, மருத்துவ ஆலோசனை மையத்திலோ அல்லது பரிசோதனை மற்றும் சிகிச்சை மையத்திலோ பெற்றுக்கொள்வது என நம்பப்படுகிறது.

இருப்பினும் பல நூற்றாண்டுகளாக நாம் வாழ்ந்துவரும் சூழ்நிலைகளைக் கொண்டும் மனித குலம் வாழ்வதும் நம்முடைய உடல் நலமாக உள்ளதாக எண்ணுகிறோம்.

சில சமயம் நாம் சில உபாதைகள் உள்ளன என்ற நினைப்பையும், துன்பம் தராத சில நோய்களும் தாங்கொண்ணா உடவ்நல சுமையாக அமையும்.

இதன் நேரடி விளைவாக நல்ல சுகாதார அமைப்பு கொண்ட கேரளா மற்றும் தமிழ்நாட்டில் சிகிச்சை மேற்கொள்ளாததினால் ஆண்களின் சர்க்கரை நோயின் அளவு கடந்த 5 ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரித்துள்ளது.

2015-16ல் 6.77 ஆக இருந்தது 2019-21டல 12-14 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது. இவ்வளவு வேகமாக உயர்ந்துள்ளதால் திருவனந்தபுரம், பத்தனம்திட்டா நகரங்களில் 20 சதவீதம் ஆக அதிகரித்துள்ளது.

அவசரகால நடவடிக்கை எடுக்காவிட்டால் பார்வை இழப்பு, பக்கவாதம், கால்களை இழத்தல் போன்ற தீவிர பக்க விளைவுகள் அதிகரிக்கலாம்.

செழிப்பு குறைந்த பல வடமாநிலங்களில் பல வருட சிறந்த தொடர் முயற்சி இருந்தும் 60 சதவீதம் பெண்கள் மற்றும் குழந்தைகள் இரத்த சோகையில் உள்ளனர். பீகாரில் உள்ள ஜாமூ மாவட்டத்திலும், மேற்கு வங்காளத்தில் உள்ள தினஜ்பூர் மாவட்டத்திலும், குஜராத்தில் உள்ள சோட்டா உதய்பூர் மாவட்டத்திலும் இது 75 சதவீதத்துக்கும் மேலாக உள்ளது.

இந்த இடங்களில் அதன் விளைவாக அதிகமாக உடல் சோர்வு, உடல் எடை குறைவு மேலும் கவலை ஊட்டும் மனவளர்ச்சி குறைவு ஆகியவை குழந்தைகளிடமே காணப்படுகின்றன.

அதிருஷ்டவசமாக மருத்துவ வளர்ச்சி பற்றிய புரிதனினுள் அதிக சுமையுள்ள நோய்களான இரத்த சோகை, இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் தொற்று நோய்களை எளிதாக குணப்படுத்தவும் வசதிகள் உள்ளன. இந்த அதிக சுமையான நோய்களை குணப்படுத்த மிகவும் தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள் நேரில் சென்று, மருந்து அளிக்க வேண்டிய கட்டாயம் இல்லை.

இதுபோன்ற நோய்களை பெரும்பாலும் நன்கு தேர்ச்சி பெற்ற மருத்துவ பணியாளர்களே மருத்துவரின் தொலைபேசி ஆலேசனை மூலம் வரையறுக்கப்பட்ட நெறிமுறைகளை கடைப்பிடித்து வழங்கலாம்.

ஆனால் மக்கள் தங்கள் நோய்களை அங்கீகரிப்பதிலும், மருத்துவம் மேற்கொள்ள மறுப்பதினாலுமே நமக்கு கடக்க முடியாத தடைகற்கனாக உள்ளன.

இதற்கு தீர்வு காண ஈரான் மற்றும் கிராமப்புற மாநிலமான அமெரிக்காவில் உள்ள அலஸ்காவில் ஆரம்ப சுகாதாரத்தை கடந்த 50 ஆண்டுகளில் மாற்றி அமைத்து உள்ளனர்.

அதற்கு 80 சதவீத மருத்துவர் அல்லாதவர்கள் உரிய நெறிமுறைகளை கடைப்பிடித்தும், மருத்துவ உபகரணங்கள் துணையுடனும் நடத்துகின்றனர்.

இதற்கு மருத்துவர்களும் உறுதுணையாக உள்ளனர். ஒவ்வொரு சூழலில் உள்ள உறுப்பினரின் உடல் நலத்தின் பொறுப்பை அந்த மருத்துவ பணியாளர்களிடம் ஒப்படைத்து உள்ளனர்.

ஈரானில் இந்த மருத்துவ பணியாளர்களை பேஹ்வார்ஸ் என்று உள்ளூர் பணியாளர்கள் அழைப்பார்கள்.

பேஹ்- Good வார்ஸ் (Skill) என்று பொருள். இவர்களுக்கு 2 ஆண்டுகள் பயிற்சி அளித்து, அரசாங்கம் முழு நேர பணியாளர்களாக அமர்த்திக் கொள்வார்கள்.

இந்தப் பேஹ்வார்ஸ்களால் ஈரான் நாட்டில் பின்தங்கிய இடங்களில் கூட நோயின் தாக்கம் குறைந்து காணப்படுகிறது.

அலாஸ்காவில் இதே போன்ற மருத்துவ பணியாளர்களை கணடறிந்து 4 வாரங்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.

அவர்கள் புத்தகங்களில் வரையறுக்கப்பட்ட விதிமுறைகளை கடைப்பிடித்து மிகவும் பின்தங்கிய சமூகத்திலும் சிறந்த ஆரம்ப சுகாதார சேவையை அடைந்துள்ளனர்.

இந்த மருத்துவ பணியாளர்கள் தன் பொறுப்புகளை நிறைவேற்ற தனக்கு ஒதுக்கப்பட்ட குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரின் மருத்துவ சிகிச்சையின் தேவையையும் அவர்களின் வாழ்க்கை முறையினையும் அறிகின்றனர்.

பின்னர் அவர்களை தொடர்ந்து கண்காணித்து, கையாளவும் செய்கின்றனர். அதிக தாக்குதல் உள்ளவர்களை தொடர் கண்காணிப்பில் அணுகுகின்றனர்.

இதன்மூலம் பலவீனப்படுத்தும் நோயையும் வெற்றிகரமாக கையாள முடிகிறது. இந்தியாவிலும் சில நிறுவனங்கள் இந்தமுறையை கடைபிடித்து இரத்த அழுத்த நோயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. மஹாராஷ்டிரத்தில் உள்ள சத்தாரா மாவட்டத்தில் உள்ள சிறந்த பயிற்சியாளர்களை அறிந்து இந்த குழுக்களுடன் வேலை பார்க்க அனுமதிக்கின்றனர். 

இந்த மருத்துவ பணியாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட குடும்பங்களுக்கு அடிக்கடி நேரில் சென்று நோயின் தீவிரத்தை கண்காணிக்கின்றளர், ஒரு கூட்டு குடும்ப ஆய்வில் 3,900 மக்களில் 1400(35%) பேல் இரண்டாவது இரத்த அழுத்தத்துடனும் அதில் 100 பேர்(2.4%) உயர் இரத்த அழுத்தத்துடன் இருப்பது கண்டு அறியப்பட்டது. 

இந்த உயர் இரத்த அழுத்தம், மறத்து அவசர நிலையாக மாறி மாரடைப்பு, பக்கவாதம் முதலிய நோயை ஏற்படுத்தலாம். இந்த மருத்துவ பணியாளர்கள் வரையறுப்பட்ட நெறிமுறைகளை கடைபிடித்தும், மருத்துவர்களுடன் தொடர்ந்து பணிபுரிந்து இந்த ஆபத்து நிலையினை நான்கு மாதங்களில் இரண்டாவது நிலையில் உள்ளவர்களில் 70%.விற்கு 46%ஆக குறைத்துள்ளனர்.

புறநோயாளிகளை பார்க்கும் மருத்துவருடன் சேர்ந்து மாத்துவ மையம் ஒரு ஆரம்ப சுகாதார மையமாக கருதலாகாது. மாறாக ஒரு நல்ல சுகாதார உதவி என்பது தேர்ந்த பயிற்சியாளர்கள், சிறந்த மருத்துவ உபகரணங்களுடன், மருத்துவரின் வழிகாட்டுதலுடனும் தனக்கு ஒதுக்கப்பட்ட மக்களின் உடல் நலனை நன்கு பேணுவதே ஆகும். 

குமட்டல் காரணமாக இரும்பு சத்து மாத்திரைகளை மறுக்கும் இரந்த சோகையுள்ள இளம் பெண்களும் நாம் நன்றாக இருக்கிறோம் என்று சர்க்கரை நோய்மாத்திரையான மெட்டபோர்மினையும், நடையயிற்சியைம் மறுக்கும் நடுத்தரவயது ஆண்களுக்கும், மார்பக பரிசோதனைக்கு பயந்து மறுக்கும் 40 வயது கடந்த பெண்களுக்கும், மேற்கண்ட முறையை கையாள்வது நல்லது. மருத்துவம் பாப்பது எளிதான போதிலும் அதனை ஒவ்வொருவருக்கும் நிறைவேற்றுவதில் சிக்கல்கள் உள்ளன.

இந்தியாவில் டிப்ளமா படித்த இளம்பருவத்தினல் பலரும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மலைவாசி மக்களுக்கு சேவை புரிவதில் விருப்பமாய் உள்ளனர். 

உதாரணமாக (ஸ்வத்திய) ஸ்வஸ்த்திய ஸ்லராஜ் என்ற அமைப்பு ஒடிசா மாநிலத்தில் உள்ள மலைப்பகுதியும் மலை இன மக்களையும் பெரும்பாலும் உடைய சந்திராழநில் உள்ள காலஹண்டி என்ற ஊரில் உள்ளூரில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்துடன் இணைந்து அவர்களுக்கு பயிற்சி அளித்து சமூக நல பணியாளர்கள் என டிப்ளமா வழங்கி உள்ளது. 

இது அங்குள்ள மனிதவளத்தை உபயோகித்து சிறந்த முகவர்களாக உருவாக்கி, அங்குள்ள அனைத்து சமூகத்தினரின் உடல் நலத்தை பேண உபயோகமாக உள்ளது. 

மேலும் அங்குள்ள இளம் மக்களுக்கு இது வேலைவாய்ப்பு தருவதாய் உள்ளது. இதனால் அவர்கள் மருத்துவ துறையில் மேலும் முன்னேறி செவிலியர், மருத்துவம் மற்றும் பிற மருத்துவ பணிகளிலும் மிளிரும் வாய்ப்பு உள்ளது. இந்தநிலை உருவானால் அதில் ஈடுபட்ட எல்லோருக்கும் வெற்றியாய் அமையும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Diabetes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment