பெரும் தொற்று காலத்தின்போது பள்ளிகளுக்கு என்ன தேவை?

ரஜிப் தாஸ்குப்தா,என்.கே.அரோரா; கோவிட்-19 பெருந்தொற்றின்போதும், அதன் பின்னருமான பள்ளி வாழ்க்கை ஒரே மாதிரியாக இருக்கப்போவதில்லை.

இந்தியாவில் கோவிட்-19 தொடர்ந்து பின்வாங்குவதற்கான அறிகுறிகள் தொடங்கியிருக்கும் நிலையில் ஏறக்குறைய 600 நாட்களுக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் திறக்கபட்டுள்ளன. பள்ளிகளில் கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். கல்வி நிலையங்கள் அதீத பரவல் மையங்களாக ஆகிவிடக் கூடாது என்பதுடன், பள்ளிகள் பாதுகாப்பாக திறக்கப்பட வேண்டும் என்று உலகம் முழுவதும் தொடர் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. இருந்தபோதிலும் இரண்டு முக்கிய அம்சங்கள் கவலை தருவதாக இருக்கின்றன.

மாநிலங்களில் உள்ள பல்வேறு கலவி நிறுவனங்கள் கொரோனா தொற்று பரவல் கொண்டிருந்தன. உருமாறிய புதிய வகையான ஓமிக்கிரான் உலகம் முழுவதும் கவலைகளைத் தூண்டியுள்ளது. தேசிய மரபணு கண்காணிப்பு திட்டம் இந்த புதிய வகை கொரோனாவை கண்டறிகிறது. இந்திய சூழல்களில் இந்த புதிய வகைத் தொற்று முக்கிய தொற்று நோயாக உருவெடுக்குமா என்பதை உறுதி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நம்பிக்கைக்கான காரணங்கள் பல இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது. 2021 ஜூன்-ஜூலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தேசிய அளவில் மேற்கொண்ட ஆய்வின் படி, இந்த கொரோனா தொற்றுக்கு இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் தொகையானது ஏறக்குறைய சரிசமமாக பாதிக்கப்படும் என்பதை காட்டியது.

இயற்கையான தொற்று காரணமாக (தொற்று தொடங்கியதில் இருந்து)18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆன்டிபாடிகள் இருக்கும்போது அதே போல தடுப்பூசிகள், குழந்தைகளின் செரோஸ்டாடஸ் இயற்கையான தொற்றுநோயைக் காட்டுகிறது.18 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் குழந்தைகள் இடையேயான நோய்தொற்று பரவல் விகிதம் ஒரே மாதிரியாக இருந்தது. குழந்தைகள் வீடுகளில் இருந்தால் மட்டும் கோவிட்19 தொற்றுக்கு உட்படுவதைத் தடுக்க முடியாது.

முதலாவது அலை மற்றும் இரண்டாவது அலையில் சேகரிக்கப்பட்ட இந்திய புள்ளிவிவரத்தின்படி பரவல் விதிகம் என்பது ஒரே மாதிரியாக இருக்கிறது. குழந்தைகளிடம் நோய் அறிகுறி மிகவும் குறைவாக உள்ளது.

அதீத நோய் தொற்று, மருத்துவனையில் சேர்த்து சிகிச்சை அளித்தல், மரணம் ஏற்படுவதற்கான சாத்தியம் ஆகியவை அரிதாகவே இருக்கிறது. தொற்றுக்கு உள்ளான சிறுவர்களிடம் அறிகுறிகள் தென்படாமல் இருக்கலாம். அதே நேரத்தில் சமூகத்தில் வைரஸ் தொற்றை பரப்பும் சங்கிலியில் அவர்களும் ஒரு பகுதியாக இருக்கின்றனர்.
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா முன்னேற்றம் கண்டிருக்கிறது. இது நாட்டின் தொற்றுநோய் நோயெதிர்ப்பு பாதுகாப்பு சூழலில் வைரஸ் தொற்று பரவல் விகித்ததில் குறைவை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இது குறைவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கும் வகையில் மாற்றியிருக்கிறது.

அதே நேரத்தில் ஆசிரியர்கள் மத்தியில் நோய் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை 90 சதவிகிதத்துக்கும் அதிகமாக அதிகரித்திருக்கிறது. குழந்தைகளுக்கு தடுப்பூசி என்பது உடனடியாக முன்பே தேவைப்படுவதாக இருக்காது.

எனினும் குழந்தைகளின் வீட்டில் உள்ள பெரியவர்கள், பள்ளிகளில் உள்ள பெரியவர்களான ஆசிரியர்கள், இதர ஊழியர்கள் ஏற்கனவே தடுப்பூசி செலுத்தியிருக்காவிட்டால் அவர்கள், முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசியால் பாதுகாக்கப்பட்ட சூழலை குழந்தைகள் பெற வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.
கடந்த சில மாதங்களில் பல்வேறு நாடுகள் குழந்தைகள் தொகையினருக்கு கோவிட்19 தொற்று தடுப்பூசிகள் போடும் திட்டத்தைத் தொடங்கியிருக்கின்றனர். இது போன்ற சூழலில் தொற்றின் தீவிர தன்மைக்கான அபாயம் குறையும். பள்ளிகள் திறப்பது, தங்கள் குழந்தைகளுக்கு தொற்று பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல் அபாயம் குறைவுதான் என்று பெற்றோர்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

குழந்தைகளை வீட்டில் வைத்திருப்பதை விட அவர்கள் பள்ளிக்குத் திரும்புதலில் நன்மைகள் அதிகம்.
தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் இளம் சிறார்கள், தீவிர நோய் தொற்று அபாயத்தின் பிடியில் இல்லை. விரைவிலேயே இந்தியாவில் குழந்தைகளுக்கு செலுத்துவதற்கான நான்கு முதல் ஐந்து உள்நாட்டு தடுப்பூசிகளின் பாதுகாப்பு, திறன்கள் குறித்து மதிப்பீடு செய்யப்பட உள்ளது.

குழந்தைகளுக்கான தடுப்பூசி திட்டம் வரும் மாதங்களில் முன்னுரிமை அடிப்படையில் அமலுக்கு வரலாம் என்று தெரிகிறது. அதே நேரத்தில் குழந்தைகளுக்கான தடுப்பூசிக்காக பெற்றோர் காத்திருக்கத் தேவையில்லை. தங்கள் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதை பெற்றோர் அனுமதிக்க வேண்டும். அவர்களின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு இது முக்கியமானது.
பள்ளிகளில் நோய்பரவல் மற்றும் இதர இடங்களில் இளைஞர்கள் கூடும் இடங்களில் கீழ்கண்ட மூன்று விஷயங்களை கடைபிடிப்பதில் உறுதியாக இருக்க வேண்டும். குறைவான காற்றோட்டம் கொண்ட மூடிய அறைகள், பலருடன் கூடிய கூட்டமான இடங்கள், சமூக இடைவெளியில்லாத நெருக்கமான இடங்கள்(நெருக்கமான இடங்களில் உடற்பயிற்சி செய்தல் அல்லது உரையாடுதல்).

பள்ளிகள் மற்றும் வகுப்பறை வாரியாகவும் அதே போல தொற்று அதிக அபாயம் கொண்ட தனிநபர்களுக்கு விரிவான அறிவுறுத்தல்கள் தயாராக உள்ளன. பள்ளி அளவிலான பின்வரும் பகுதிகளுடன் தொடர்புடைய பொறுப்புகள்: நிர்வாக ரீதியிலானவை(வருகை மற்றும் நுழைவு விதிமுறைகள்),ஒருங்கிணைத்தல் (ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை ஒன்று கலக்காமல் சிறுகுழுக்களாக வைத்தல்), பாதுகாப்பு குமிழிகள் அல்லது காப்ஸ்யூல்கள் கொண்டிருத்தல், பள்ளிகளில் இடைவேளை நேரத்தை சுழற்சி முறையில் கடைபிடித்தல், பள்ளிகளுக்கு மாணவர்கள் வருவதை சுழற்சி அடிப்படையில் மாற்றி அமைத்தல், பள்ளிகளில் பாதுகாப்பு முறை ஏற்படுத்துதல் என்பது, பள்ளி அளவிலான கட்டமைப்பை வலுப்படுத்துவது மற்றும் காற்றோட்டம், தண்ணீர் விநியோகம் மற்றும் கழிவறை போன்ற வசதிகள் போன்றவை தேவைப்படுவதாக இருக்கலாம்.

போதுமான எண்ணிக்கையிலான கைகழுவும் வசதிகள் இருக்க வேண்டியது அவசியம், பள்ளிகளில் உள்ளே செல்வதற்கும், வெளியே வருவதற்கும் தனித்தனி வழிகள் அவசியம். இவை அனைத்திலும், கல்வி நிறுவனங்கள் ஒரு முக்கியமான அம்சத்தை மறந்துவிடக் கூடாது: குழந்தைகளின் சமூகமயமாக்கலுக்கு அவை அவசியம்.
விளையாட்டு மைதானங்களில் இருந்து மாணவர்களை விலக்கி வைக்கக் கூடாது. ஒவ்வொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும். பள்ளி போக்குவரத்து மறுசீரமைப்பு தொடர்பான மற்ற அத்தியாவசிய முன்நிபந்தனைகள்- கோவிட் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு ஏற்றவாறு அமல்படுத்துதல்-நுண்ணூட்ட சத்து மற்றும் நோய் தடுப்பு திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து குழந்தைகளுக்கு தொடர்ச்சியாக பள்ளி அளவிலான உளவியல் சமூக ஆதரவு சேவைகள் வழங்குதல். வகுப்பறை அளவிலான, தனிநபர் இடைவெளி தொடர்பானவை(மாவட்டங்கள் அல்லது சமூகத்துடன் கொண்ட துணை மாவட்டங்கள் அல்லது கொத்தாக பரவு இடங்களில் ஒரு மீட்டர் இடைவெளி ) 12 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதுள்ள குழந்தைகளை ஒருவருக்கு ஒருவர் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு அமரவைத்தல், ஆசிரியர்கள், இதர ஊழியர்கள் இதே மரபுமுறையை பின்பற்ற வேண்டும்.

முகக்கவசம் அணிதல் போன்ற மற்ற தொடர்புடைய அத்தியாவசியங்கள் (இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான முக க்கவசம் அணிவதற்கான தேசிய வழிகாட்டும்முறைகளை பின்பற்ற வேண்டும்), அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல், சுவாச ஆசாரம் மற்றும் மேசைகளின் இடைவெளி அல்லது தேவைப்பட்டால் குழந்தைகளை குழுவாக நிர்வகிக்கலாம்.
முழுவதுமாகவோ அல்லது பகுதி அளவிலோ மூடுதல் அல்லது மீண்டும் திறப்பது குறித்து தீர்மானிக்க உள்ளூர் நிர்வாக அளவில் முடிவு எடுக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்துகிறது.

மாவட்டம் அல்லது உப மாவட்டங்கள் அளவிலான புள்ளி விவரங்களின் வழிகாட்டுதலின்படி முடிவு எடுக்கலாம் வைரஸ் பரவுதல் மற்றும் இந்த நிறுவனங்களை மீண்டும் திறப்பது சமூகத்தில் பரவுவதை எந்த அளவிற்கு பாதிக்கலாம் என்பதை தீர்மானிக்க வேண்டும். மாவட்டங்களில் ஆங்காங்கே அல்லது எங்கும் தொற்று இல்லை எனில் அனைத்து பள்ளிகளையும் திறக்க அறிவுறுத்தலாம்.

கோவிட் 19 தடுப்பு மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும். கொத்தான பரவுதல் உள்ள மாவட்டங்களில் திறந்திருக்கும் பெரும்பாலான பள்ளிகளில், கொத்தான பரவல் அதிகரிக்கும் அனுபவங்கள் கொண்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளை மூடலாம்.

சமூக அளவிலான பரவல் அதிகம் உள்ள பகுதிகளில் பள்ளிகளை பெரும்பாலும் மூடலாம். மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை பெற வேண்டிய தேவை அதிகரிக்கும் இடங்களில் உள்ள பள்ளிகளை மூடலாம். நோயுற்றிருக்கும்போது வீட்டிலேயே இருப்போம் என்ற கொரோனா தொடர்பான கொள்கையை அவசியம் முன்னெடுக்க வேண்டும். முறையாக அதனை பின்பற்ற வேண்டும்.

இந்த செயல்பாடுகளைப் பின்பற்ற பள்ளி நிர்வாகம், சமூக அளவிலான தலைமை, பெற்றோர் குழுக்கள், ஆசிரியர்கள் அமைப்புகள் இடையே அடிக்கடி ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது முக்கியமாகும். கோவிட்-19 பெருந்தொற்றின்போதும், அதன் பின்னருமான பள்ளி வாழ்க்கை ஒரே மாதிரியாக இருக்கப்போவதில்லை.
இந்த கட்டுரை முதலில் டிசம்பர் 8,2021 தேதியிட்ட அச்சு இதழில் ‘Back to classrooms’.என்ற தலைப்பில் வெளியானது. தாஸ்குப்தா, புது தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சமூக மருத்துவம் மற்றும் சமூக சுகாதார மையத்தின் தலைவராக உள்ளார், அரோரா, தி இன்கிளின் டிரஸ்ட் இன்டர்நேஷனல், புது தில்லியின் நிர்வாக இயக்குநராக உள்ளார். கருத்துகள் எழுத்தாளர்களின் தனிப்பட்ட கருத்துகளாகும்.

தமிழில் : பாலசுப்பிரமணி

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Opinion news here. You can also read all the Opinion news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: What schools need to do during pandemic

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com