March 2022 assembly election results : இந்திய அரசியலில் கடந்த பத்து ஆண்டுகளில் நடந்த முக்கியத்துவம் வாய்ந்த மாற்றங்களை ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகள், மேலும் ஒருங்கிணைப்பதாக இருக்கின்றன. இந்திய அரசியலில் அதன் அதிகாரத்தையும் சித்தாந்த மேலாதிக்கத்தையும் உறுதிப்படுத்தும் வகையில் உ.பி.யின் முடிவுகள் பாஜகவுக்கு ஒரு அற்புதமான வெற்றியாகும், இந்த வெற்றி ஒரு தெளிவான, எளிமையான செய்தியை சொல்கிறது: அரசியலானது அதன் முடிவில், நம்பகத்தன்மை கொண்ட ஒரு விளையாட்டாக இருக்கிறது. இதில் பாஜகவுக்கு போட்டி என்பதே இல்லை.
எதிர்க்கட்சிகளிடம் பதில் இல்லாத வகையில் அரசியலின் இயல்பை பாஜக மாற்றியுள்ளது. முதலாவதாக, உருவாக்கப்பட்ட அரசியல் கருத்தாக்கத்தில் இது ஒரு உறுதிப்பாடாக இருக்கிறது. இந்த உணர்வில் குறிப்பாக பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட சாதியினர் மத்தியில், பாஜக ஒரு ஆழமான சமூக அடித்தளத்தைக் கொண்டுள்ளது என்று சொல்லலாம். மணிப்பூரில் வியக்கத்தக்க வகையில் ஒரு குறிப்பிட்டை இலக்கை அடைந்தது பாஜக அதனை நிரூபித்திருக்கிறது.
இந்திய அரசியலில் நீண்ட காலமாக வகைப்படுத்தப்பட்ட அடையாள நிர்ணயவாதத்தை முற்றிலும் பொய்யாக்குகிறது. துண்டு துண்டான அடையாளங்கள் கொண்ட கூட்டணியின் அடிப்படையிலான அரசியல் எந்த தேசியக் கட்சியையும் எதிர்க்கும் திட்டம் இப்போது செத்துப்போய்விட்டது. எந்த அரசியல் கட்சியும் சமூகக் கணக்கீடுகளுக்குப் புறம்பாக இருக்க முடியாது. ஆனால் இந்த தேர்தலில் ஆம் ஆத்மி மற்றும் பிஜேபி தவிர மற்ற அனைத்து கட்சிகளும் இறுதி ஆய்வில் ஒரு வகையான சமூக எண்கணிதத்தை நம்பியிருந்தன.
சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகியவை நீண்ட காலமாக செய்து வந்ததைப்போல - அரசியலை வெறுமனே சமூகமாகச் சுருக்கி - ஏற்கனவே அரசியல் ஆட்டத்தில் வெற்றியை விட்டுக் கொடுத்து விட்டன. மக்கள் வெறுமனே தங்கள் சாதிக்கு வாக்களித்தனர் அல்லது பாஜக உயர் சாதி மேலாதிக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று தொடர்ந்து நினைப்பது, என்பதான ஒரு தலைப்பட்சமான தேர்வு ஒரு சிறந்ததொரு பொருளாக, ஒரு தொடக்கப் புள்ளியை மேற்கொண்டிருப்பதாகும். ஒரு சித்தாந்தத்தின் மந்திர ஆற்றலால் இயக்கப்படும் வாக்காளர்களை அங்கீகரிக்க மறுப்பது மோசமான நிலையாகும். சமூகப் பொறியியல் அல்லது வெறும் விளக்கப் பிரதிநிதித்துவம் அரசியலை அற்பமானதாக ஆக்குகிறது, இது அவர்களின் ஏஜென்சி வாக்காளர்களை கொள்ளையடிப்பது போல தோன்றுகிறது, அவர்கள் வெறுப்புடன் பதிலளிக்கின்றனர்.
இரண்டாவதாக, பழைய, ஊழல், தடுமாற்றம், பழங்கால ஆட்சிகள் தங்களை புதுப்பித்துக் கொள்ள முயற்சிக்கின்றனர் . அங்கு சமூக அதிருப்தி வெளிப்படையாக உள்ளது. அகிலேஷ் யாதவ் தீவிர பிரச்சாரம் செய்தார். ஆனால் நாளின் முடிவில், தனது சொந்த கடந்த காலத்தின் கறையை சமாளிப்பது அவருக்கு கடினமாக இருந்தது. இறுதியில், பழைய ஊழல் மாஃபியா வரிசைக்கு அவர் திரும்பியதால், சமாஜ்வாதியை மீண்டும் அதன் பழைய நிலைக்கு திரும்பும் தோற்றமாகத்தான் பலர் பார்த்தனர்.
இந்தக் கட்சிகளில் பெரும்பாலானவை, குறிப்பாக காங்கிரஸ் கட்சியானது, பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகு போர்பன் முடியாட்சி தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ள முயல்வதைப் போல காங்கிரஸ் கட்சி தன்னைப் புதுப்பித்துக் கொள்ள முயற்சிக்கிறது. பழைய ஆட்சியின் அல்லது கடந்த கால சாமான்களில் இருந்து வரும் மெல்லிய துர்நாற்றமானது, பிரியங்காவாக இருந்தாலும் சரி, மறுசீரமைப்போடு வந்த அகிலேஷ் யாதவாக இருந்தாலும் சரி அதன் வாய்ப்புகளை அழிக்க போதுமானதாக இருக்கும். பஞ்சாபில், சரண்ஜித் சிங் சன்னியைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் காங்கிரஸ் ஒரு புதிய சமூகப் பொறியியலை முயற்சித்தது, ஆனால் அந்தக் கட்சியின் கலாச்சார நிழல் அதை மூழ்கடித்து விட்டது.கொஞ்சம் கூட அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. கலாசாரமாக இருந்தாலும் சரி, ஆட்சி முறையிலும் சரி, மோடி-யோகி கூட்டணி இன்னும் பழைய ஒழுங்கை உயர்த்தும் செயல்பாட்டில் உள்ளது என்ற உணர்வு இன்னும் வலுவாக உள்ளது.
2014ம் ஆண்டு முதல், பாஜக மற்றும் ஆம் ஆத்மி இரண்டு கட்சிகள்தான் சாத்தியமான மாற்றாக கருதப்படுவது தற்செயலானது அல்ல. ஏற்கனவே சரிந்து விட்ட பழைய ஆட்சியின் சோர்வு இல்லாத இடத்திற்கு இந்தியாவைக் கொண்டு சென்றது மட்டுமின்றி இருவருமே புதிய சித்தாந்தத்தைப் பேசினார்கள்; இரண்டுமே அந்த "பழைய ஆட்சி" என்ற குறிச்சொல்லால் கறைபடவில்லை; இருவரும் சமூக எண்கணிதத்திற்கு அப்பாற்பட்ட அரசியலை முன்வைத்தனர். பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியானது, எதிர்க்கட்சி வரிசையில் புதிய சிறகுகளை உருவாக்கியுள்ளது. இவையெல்லாம் அரசியலின் அப்பட்டமான உண்மைகள். இப்போது இந்தியாவின் கேள்வி காங்கிரஸின் மறுசீரமைப்பு அல்லது ராகுல் காந்தியின் எதிர்காலம் அல்ல. இது கிட்டத்தட்ட புதிதாக ஒரு எதிர்க்கட்சியை கண்டுபிடிப்பதாக இருக்கிறது.
மூன்றாவது அரசியல் ரீதியாக சிந்திக்கும் திறன் மட்டுமே. விவசாயிகள் போராட்டத்தை பாஜக கையாள்வது பஞ்சாப்பில் ஆட்சியை மீட்பதை கடினமாக்கும். ஒரு வெடிக்க சாத்தியமான குண்டை செயலிழக்கச் செய்வதன் மூலம், மிகவும் தீர்க்கமான கொள்கை சீர்திருத்தில் தலைகீழாக பல்டி அடிப்பதாக கருதினாலும், ஒருவேளை பாஜக பதிலடி கொடுத்திருக்கலாம்.சாதிக்க முடியாத மற்றும் பலவீனமான நிலையில் இருந்து குறிப்பாக தீர்க்கமான உரிமை மாற்றாக இருக்கும்போது வலிமையான நிலையில் இருந்து கொண்டு தவறை ஒப்புக் கொள்வதை நன்றாகப் பயன்படுத்தினால், மகிழ்ச்சியளிக்கக் கூடியதாக இருக்கும்.
நான்காவது தலைமைத்துவத்தின் முக்கியத்துவம். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், இந்த வெற்றிக்கான வாக்கு பெரும்பாலான மாநிலங்களில் நரேந்திர மோடியின் தலைமையின் மீதான நம்பிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறது. மோடிக்கு வாக்களிப்பதா அல்லது யோகிக்கு வாக்களிப்பதா என்பது மீண்டும் கல்விசார் விவாதமாகியிருக்கிறது.. கட்சியில் பிளவு இல்லை என்ற சூழ்நிலையை இறுதிப் பகுப்பாய்வில் ஒன்றாகச் செயல்படும் திறனை உருவாக்குவதுதான் வெற்றிகரமான தலைவரின் புள்ளியாக இருக்கிறது. பா.ஜ.கவும் அதன் அங்கங்களும் அதே தாளத்தில் அணிவகுத்துள்ளன என்பது வெளிப்படையான உண்மை. ஆனால் இது ஒரு கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு செயல்திறன் மட்டுமல்ல; வெறுமனே மேலே இருந்து வரும் கட்டளைகள் உள்ளுக்குள் கோபமான இணக்கத்தை உருவாக்க முடியும். எப்போதுமே பெரிய பரிசின் மீதே கண்களை வைத்திருக்கும் ஒரு அமைப்பு ரீதியிலான கலாச்சாரத்தை உருவாக்குகிறது,
எதிர்கட்சிகள் இதற்கு நேர்மாறாக, ஜனநாயகத்தின் இருத்தலியல் நெருக்கடி இருப்பதாக, தான் விரும்பும் அனைத்து வழிகளிலும் பெரும் குரலெடுத்து கத்தலாம். ஆனால் சிக்கலான தருணத்தில்,எதிர்க்கட்சிகளின் உள் சண்டைகள் நெருக்கடியில் ஒன்றாக வேலை செய்வதற்கான குறைந்தபட்ச திறனைக் கூட கொண்டிருக்கவில்லை என்பதைத்தான் சொல்கின்றது. ஒன்றாக நிற்பதற்கான ஒரு தளம் அவர்களிடம் இல்லை. தீமையை எதிர்கொள்ளும்போது, உங்களால் ஒன்றுசேர முடியவில்லை என்றால், உங்களின் தீர்வை நான் ஏன் நம்ப வேண்டும் என்பதாக விலகி இருக்கத்தான் தோன்றுகிறது.
இறுதியாக, சித்தாந்தம் பற்றிய கேள்வி உள்ளது. உ.பி.யில் யோகியின் இந்த வெற்றிக்கு பின்னர், அவரது ஆட்சி மற்றும் செயல்முறை இரண்டுக்கும் எவ்வளவு தொடர்பு இருக்கிறது என்பதை விவாதிக்க மற்றொரு நேரம் இருக்கும். இது அனுபவ ரீதியாக ஒரு சிக்கலான விஷயம். இது ஒரு சிறிய பகுதியாக இல்லை, ஏனென்றால் ஒரு ஆட்சிக்கு என்ன கவுரவம் கிடைக்கும் என்பது அதன் முந்தைய நம்பிக்கைகளின் உண்மைகளை கொண்ட விஷயமாகும். நிச்சயமாக யோகியின் புதிய நலன் புரியும் அரசு அல்லது சில வகையான ஊழல் இடைத்தரகர்கள் மீதான நடவடிக்கைகள் பாஜகவின் பிரபலத்திற்கு பங்களிக்கக்கூடும். ஆனால் கோவிட்-19 பேரழிவு, முன்னோடியில்லாத பணவீக்கம், நுகர்வோர் செலவினங்களில் சரிவு மற்றும் உண்மையான வேலை நெருக்கடி ஆகியவற்றின் பின்னடைவுகளை துடைத்தெறிய இவை அனைத்தும் போதுமானவை என்ற கருத்துக்கு கூடுதல் விளக்கம் தேவை. ஒருவேளை கோபமானவர்கள் , மிகவும் பேரழிவுக்கு உட்பட்டவர்கள் இனி அரசியலை தங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழித்தடமாக உணர மாட்டார்கள். உங்கள் எதிர்ப்பு அரசியல் கிளர்ச்சியாக அல்ல, சமூக நோயியலாக வெளிப்படுத்தப்படும்.
ஆனால், இந்தத் தேர்தலுக்குப் பிறகு இந்திய ஜனநாயகம் சிந்திக்க வேண்டிய ஒரு எளிய விஷயத்தை இங்கே காணலாம். விஷமும், வெறுப்பும், பாரபட்சமும், வன்முறையும், அடக்குமுறையும், வஞ்சகமும் கொண்ட அரசியல், வாக்காளர்களுக்கான பேரமாக இருக்காது என்பது சிந்திக்க வேண்டிய விஷயம். இந்த சாலை எப்போதும் பேரழிவில்தான் முடிகிறது. சற்றே குறைவான குழப்பமான பதில் என்னவென்றால், இது எதிர்க்கட்சிகளின் திறமையின்மையின் ஆழத்தை பிரதிபலிக்கிறது. மிகவும் குழப்பமான பதில் என்னவென்றால், அடிப்படை மதிப்புகள் மீதான நமது தார்மீக திசைகாட்டியின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. இதற்கு காலம் தான் பதில் சொல்லமுடியும். ஆனால் அனைத்து நாக்குகளும் அமைதியாக இருக்கும் நிலையில், இப்போதைக்கு இறையாண்மையுள்ள மக்கள் பேசுகின்றனர். எந்த நிலையிலும் பாஜகவை எதிர்க்கும் சக்தி இல்லை;
சந்தேகத்திற்கு இடமில்லாத இந்த அரசியல் தேர்ச்சியில் ஒரு தார்மீக மனசாட்சியின் மினுமினுப்பின் நம்பிக்கையினால் மட்டுமே ஒருவர் வாழ முடியும்.
The writer is consulting editor, The Indian Express
தமிழில்; ரமணி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.