Advertisment

2019 தேர்தலில் பாஜக எங்கெங்கே வென்றது?

2019 பாராளுமன்ற தேர்தலில் ஏறக்குறைய 23 கோடி பேர் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களித்துள்ளனர். 38 சதவீத வாக்குகளை பெற்ற பாரதிய ஜனதா கட்சி மொத்தமுள்ள 542 தொகுதிகளில் 55 சதவீத இடங்களை வென்றது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
2019 தேர்தலில் பாஜக எங்கெங்கே வென்றது?

2019 தேர்தலில் பாஜக எங்கெங்கே வென்றது?

அ. பெருமாள் மணி, எழுத்தாளர்.

Advertisment

2019 பாராளுமன்ற தேர்தலில் ஏறக்குறைய 23 கோடி பேர் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களித்துள்ளனர். 38 சதவீத வாக்குகளை பெற்ற பாரதிய ஜனதா கட்சி மொத்தமுள்ள 542 தொகுதிகளில் 55 சதவீத இடங்களை வென்றது.

பாஜக வெற்றி பெற்ற 303 இடங்களில் 85 சதவீத இடங்களை 13 மாநிலங்களில் இருந்து. பெற்றுள்ளது. குஜராத், ஹரியானா, டெல்லி, உத்தரகாண்ட், ஹிமாச்சல் பிரதேசம் ஆகிய ஐந்து அருகருகே அமைந்த மேற்கு மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி 100 சதவீத இடங்களை வென்று பெரும் சாதனை படைத்தது. ஐந்து மாநிலங்களில் மொத்தமாக உள்ள 52 இடங்களையும் பாஜக வென்றது.

மத்திய பிரதேசத்தில் மொத்தம் 29 தொகுதிகள் இதில் 28 இடங்களை பாஜக வென்றது. இதே போன்று ராஜஸ்தானிலும் ஒரேயொரு தொகுதியில் மட்டுமே வெற்றிவாய்ப்பை இழந்தது பாஜக. மொத்தமுள்ள 25 இடங்களில் 24 பாஜக வசம் சென்றது. தெற்கு மாநிலங்களில் ஒன்றான கர்நாடகாவில் பாஜக பெற்ற இடங்கள் 25. அங்கே மொத்தமுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 28. ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள 14 தொகுதிகளில் 11 தொகுதிகளில் வெற்றி வாகை சூடியது

பாரதிய ஜனதா கட்சி.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஜார்கண்ட், கர்நாடகா ஆகிய  நான்கு மாநிலங்களில் பாரதிய ஜனதாவின் வெற்றி விகிதம் 91 சதவீதம் என்பது முக்கியமானது. மேற்கண்ட 4 மாநிலங்களில் மொத்தம் உள்ள 96 தொகுதிகளில் 88 தொகுதிகள் பாஜக வசம் சென்றது அதற்கு பெரும் பலத்தை சேர்ந்தது.

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசம் 2019 தேர்தலிலும் பாரதிய ஜனதாவிற்கு பெரிய அளவில் கை கொடுத்தது. மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 62 தொகுதிகளில் வாகை சூடியது பாரதிய ஜனதா கட்சி. உத்தரப்பிரதேச மாநிலத்தின் வாரணாசி தொகுதியில் இருந்து இரண்டாவது முறையாக  மக்களவைக்குச் சென்றார் பிரதமர் மோடி.

மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கை அடிப்படையில் மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், பீகார் ஆகிய மூன்று மாநிலங்கள் மிகவும் முக்கியமானவையாகும். பீகார் மாநிலத்தில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 17 இடங்களில் மட்டுமே பாரதிய ஜனதா வசம் உள்ளது. அப்போது கூட்டணியில் இருந்த நிதிஷ் குமார் தற்போது. என்டிஏ கூட்டணியில் இருந்து விலகி இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கிறார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் 48 இடங்கள். உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியுடன் கூட்டணி அமைத்து 2019 பாராளுமன்ற தேர்தலை எதிர்கொண்டது பாஜக. 23 இடங்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு கிடைத்தது. கடந்த நான்கு ஆண்டுகளில் மிகப்பெரிய அரசியல் மாற்றங்களை மகாராஷ்டிரா சந்தித்தது. தற்போது ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா பாஜக கூட்டணியில் உள்ளது. உத்தவ் தாக்கரே எதிர் முகாமில் உள்ளார்.

2019 தேர்தல் முடிவுகள் வந்தபோது மேற்கு வங்காள மாநிலத்தில் பாஜக 18 இடங்கள் பெற்றதை பலரும் ஆச்சரியமாகப் பார்த்தனர். மொத்தமுள்ள 42 தொகுதிகளில் பாஜக 18 ல் வென்றது. மேற்கு வங்கத்தில் எதிர் எதிராக அரசியல் செய்த திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் ஆகியோர் தற்போது ஓரணியில் இணைந்துள்ளனர்.

மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், பீகார். ஆகிய மூன்று மாநிலங்களில் மொத்தமுள்ள 130 தொகுதிகளில் பாஜக 58. இடங்களை தனியாக வென்றுள்ளது. 45 சதவீத வெற்றியாகும். எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த மூன்று மாநிலங்களும் வரவிருக்கிற 2024 தேர்தலில் மிக முக்கிய பங்காற்றும்.

குஜராத், ஹரியானா, உத்தரகாண்ட், ஹிமாச்சல் பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா, ஜார்கண்ட், உத்தர பிரதேசம், பீஹார், மகாராஷ்டிரம், மேற்கு வங்காளம் ஆகிய 13 மாநிலங்களில் மொத்தம் 358 தொகுதிகளில் 260 தொகுதிகள் தற்போது பாஜக வசம் உள்ளது. பாஜக தனியாக வென்ற 303 தொகுதிகளில் இந்த 260 தொகுதிகள் 85% ஆகும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment