Advertisment

பாஜகவுக்கு ஏன் ராகுல் காந்தி தேவை?

அரசியல்வாதி ஒருவர் இரவு விருந்து நிகழ்ச்சிக்கு சென்றது மட்டுமே பெரிய அளவிலான எதிர்வினைக்கான காரணம் அல்ல. அந்த அரசியல்வாதி ராகுல் காந்தியாக இருப்பதால்தான் சர்ச்சையை உருவாக்குகிறது.

author-image
WebDesk
New Update
பாஜகவுக்கு ஏன் ராகுல் காந்தி தேவை?

ஒரு நிமிடம் அவருடைய பெயரைப் பற்றி மறந்துவிடுவோம். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நண்பர் ஒருவரின் திருமணவிழாவின் ஒரு பகுதியாக விருந்து நிகழ்ச்சிக்கு சென்றார். பாஜக - காங்கிரஸை விட 6 மடங்கு மக்களவை எம்.பி.க்களைக் கொண்டுள்ளது. பாஜக பல மாநிலங்களில் ஆட்சி செய்கிறது. பாஜகவின் சமூக ஊடக பரப்புரையாளர்கள் ராகுல் காந்தி விருந்து நிகழ்ச்சிக்கு சென்றதை மிகைப்படுத்தினர். மேலும், அவர் சீனத் தூதருடன் ஒரு சமூக விழாவில் கலந்துகொண்டதன் மூலம் அவர் தேசிய நலனுக்கு எதிராக செயல்படுவதாக பலர் குற்றம் சாட்டினர். இணையத்தில் கூறப்பட்ட இந்த இரண்டாவது குற்றச்சாட்டும் பொய்யானது.

Advertisment

அரசியல்வாதி ஒருவர் இரவு விருந்து நிகழ்ச்சிக்கு சென்றது மட்டுமே பெரிய அளவிலான எதிர்வினைக்கான காரணம் அல்ல. அந்த அரசியல்வாதி ராகுல் காந்தியாக இருப்பதால்தான் சர்ச்சையை உருவாக்குகிறது.

இந்த வீடியோ கிளப்பின் படங்கள் காங்கிரஸுக்கு மோசமான நேரத்தில் வந்தன: கடந்த மாத இறுதியில் காங்கிரஸ் கட்சியின் மறுமலர்ச்சிக்கு உதவ வேண்டாம் என்று பிரசாந்த் கிஷோர் முடிவு செய்ததன் மூலம் கட்சியின் 8 ஆண்டு கால நெருக்கடி மீண்டும் சுட்டிக்காட்டப்பட்டது. சமீப காலங்களில் முக்கிய அரசியல் தருணங்களில் - பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் டிசம்பர் 2021 இல் தொடங்கப்பட்டபோது அல்லது 2020 டெல்லி கலவரத்தின் போது காங்கிரஸ் அமைதி ஊர்வலத்தை மேற்கொண்டபோது - ராகுல் காந்தி அடிக்கடி வெளிநாட்டு பயணங்களில் இருந்ததால் காணவில்லை.

இருப்பினும், அவருடைய வேலை செய்யும் முறை, சாராம்சத்தில், பாஜக அல்லது அரசாங்கத்தின் வேலை அல்ல. வயநாடு தொகுதி வாக்காளர்களைத் தவிர வேறு யாருக்கும் அக்கறை தேவைப்படுகிற பொதுப் பதவி எதையும் ராகுல் காந்தியிடம் இல்லை. அப்படியானால், இந்தியாவின் மிக மேலாதிக்க அரசியல் சக்தியானது, எதிர்க்கட்சியில் தேய்ந்துபோன ஒரு சாதாரண தலைவர் மீது வெறித்தனமாக இருப்பது ஏன்?

இந்துத்துவா வலதுசாரி படைகளுக்கு ராகுல் காந்தி மூர்க்கமான எதிர்ப்பது பலன் அளிக்கிறது. இருந்தாலும்கூட, இந்த நிலையான இலக்கு வெறும் தந்திரமான உத்தி மற்றும் அரசியல் எதிர்ப்புக்கான விஷயம் அல்ல. அவருடைய அனைத்து தவறுகளுக்கும், அந்த தலைவர் பிரதிநிதித்துவப்படுத்துகிறார் - அவரை எவ்வளவு சுருக்கினாலும் - ஆர்.எஸ்.எஸ். - பாஜகவுக்கு குறிப்பிடத்தக்க வகையில், கருத்தியல் மற்றும் அரசியல் சவாலாக இருக்கிறார்.

ராகுல் காந்தியை இழிவுபடுத்துவது மக்களின் அதிருப்தியைத் தூண்டுகிறது. பல அரசியல் தலைவர்கள் - பாஜகவில் இருந்து கணிசமானவர்கள் உட்பட - வாரிசு அரசியலைக் கொண்டிருக்கிறது. அவர்கள் நேரு குடும்பத்தினர் சுதந்திரப் போராட்டக் கட்சியின் மீது ஒரு பிடியைக் கொண்டிருப்பதைக் குறைக்கவில்லை.

பாரதிய ஜனதா கட்சிக்கு, குறிப்பாக நரேந்திர மோடியின் வளர்ச்சிக்கு பிறகு, ராகுல் காந்தி என்ற தனிநபர் வழிபாட்டு முறையை முன்னெடுத்துச் செல்வதற்கு மிகவும் வசதியான சூழலை வழங்குகிறார். பிரதமர் சுயமாக உருவானவர், கடின உழைப்பாளி, வெளிப்படையான, கிட்டத்தட்ட போர்க்குணமிக்க இந்து, என்றைக்குமான ஒரு தேசியவாதி. ராகுல் காந்தி (வலதுசாரிகளின் பார்வையில்) ஒரு தெளிவற்ற அரசியல்வாதி, வாரிசு அரசியல்வாதி, பொறுப்பைத் தவிர்பவர், இனக் கலப்பு பாரம்பரியம் கொண்டவர், போலியான மதச்சார்பின்மையை நிலைநிறுத்துகிறார் என்பதாகும். ராகுல் காந்தியின் புகழ் வீழ்ச்சியடைந்தாலும், மாற்று இல்லாத சூழ்நிலையை வலுப்படுத்த தேசிய அரங்கில் அவரை மாற்றாக முன்வைப்பது பாஜகவுக்கு பயனுள்ளதாக இருக்கும். பாஜக தலைமை மம்தா பானர்ஜியை - தெருப் போராட்டங்களில் இருந்து எழுந்த அரசியல்வாதியுடன் - அல்லது எம்.கே ஸ்டாலின் அல்லது ஜெகன்மோகன் ரெட்டியுடன் ஒப்பிடுமா? ஆளும் சக்திகளால் ராகுல் காந்தியின் எதிர்ப்பு மற்றும் அரசியல் தோல்விகளைப் போலவே அவரது பின்னணியிலும் செய்ய வேண்டியிருக்கிறது.

இந்த பின்னணியில், ராகுல் காந்தி பாஜகவின் புதிய இந்தியாவுக்கு சவால் விடக்கூடிய ஒரு மாற்று யோசனையை கொண்டு வருகிறார்.

சித்தாந்தப் பார்வையில், ஆர்.எஸ்.எஸ்-பாஜகவின் ஆதிக்கம் மேலாதிக்கத்தின் விளிம்பில் இருப்பதாக முதல் பார்வையில் தோன்றலாம். மாநிலங்களவையில் பாஜக-விற்கு சவால் விடும் பிராந்தியக் கட்சிகள் மற்றும் தலைவர்கள் போட்டி நலன்களைக் கொண்டுள்ளனர் கருத்தியல் அளவில் ஒற்றுமையும் இல்லை. காங்கிரஸும் பாஜகவை எதிர்த்துப் போரிடத் தகுதியற்றதாகத் தெரிகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, மூத்த தலைவர்கள் அதிருப்தியில் குதித்துள்ளனர். மேலும், அதன் "மென்மையான இந்துத்துவா" உத்திகள், சிந்தனை வறட்சியை காட்டுகின்றன. இருந்தாலும், காங்கிரஸ் கட்சி இன்னும் இருக்கிறது. காங்கிரஸ் கட்சி சர்வைவலுக்காக எவ்வளவு போராடும் நிலையில் இருந்தாலும் - பாஜகவுக்கு போட்டியாக தேசிய அளவில் இருக்கும் ஒரே கட்சி காங்கிரஸ் கட்சிதான். சுஹாஸ் பால்ஷிகர் கூறியது போல (IE, ஏப்ரல் 30), காங்கிரஸின் இடம் குறைவாக இருப்பதாகத் தோன்றினாலும், காங்கிரஸின் இடம் இன்னும் பொருத்தமானதாக இருக்கிறது. பாஜக அல்லாத கட்சிகளின் தேசியக் கூட்டணியை உறுதி செய்வதற்கான ஒரு சித்தாந்த பசையாக செயல்படக்கூடிய "காங்கிரஸ் இடம் என்பது நடுநிலை வாதமாக உள்ளது.

துரதிர்ஷ்டவசமாக, அந்த இடம் - இந்தியாவின் தாராளவாத, கூட்டாட்சி சிந்தனையாகும் - பல காங்கிரஸ் தலைவர்களுக்கு கவலை இல்லை. ராமர் கோவில் மற்றும் ஜம்மு காஷ்மீரின் அரசியலமைப்பு அந்தஸ்து போன்ற விஷயங்களில் பாஜகவின் கொள்கையை ஆதரிக்க பலர் தயாராக உள்ளனர். தேசிய பெயர் அங்கீகாரமோ அல்லது வெகுஜன அடிப்படையோ போதுமானதாக இல்லை. இந்த விஷயத்தில் ராகுல் காந்தி ஒரு வலுவான சவாலை முன்வைத்துள்ளார்.

ஜோதிராதித்ய சிந்தியாவைப் போலல்லாமல், அவரை வேட்டையாட முடியாது. காங்கிரஸையும் அது ஒரு காலத்தில் பிரதிநிதித்துவப்படுத்திய கொள்கைகளையும் அவரால் கைவிட முடியாது - நேருவின் மதச்சார்பின்மையையோ அல்லது இந்திரா காந்தியின் ‘கரிபி ஹட்டாவோ’வையோ ராகுல் கைவிட முடியாது, ஏனெனில் அவ்வாறு செய்வது ஒரு அரசியல்வாதியாக அவரது தகுதியை மறுப்பதாக இருக்கும். அந்த வகையில், ‘காங்கிரஸ்-முக்த் பாரத்’ காங்கிரஸ் இல்லாத இந்தியா வழியில் நிற்கும் பாஜகவின் குறிப்பிடத்தக்க சில எதிரிகளில் அவரும் ஒருவர். அப்படியானால், அந்த பெயரில் கவனம் செலுத்துவது நல்லது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment