1959 இல் இந்தியா வந்தடைந்த, ரெவ். டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் இவ்வாறாக குறிப்பிடுகிறார்,“மற்ற நாடுகளுக்கு செல்லும் போது நான் ஒரு சுற்றுலாப்பயணியாக மட்டும் உணர்கின்றேன், ஆனால் இந்தியா வரும்போதெல்லாம் ஒரு யாத்ரீகனாக உணர்கிறேன்.” மேலும் அவர் கூறுகையில், “ மாண்ட்கோமெரி, அலபாமா மற்றும் தெற்கு அமெரிக்க முழுவதும் என் மக்கள் பயன்படுத்திய வன்முறையற்ற சமூக மாற்றத்தின் நுட்பங்கள் உருவாக்கப்பட்ட நிலம் தான் இந்தியா. அகிம்சை திறமையாகவும் நீடித்ததாகவும் இருப்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம் - அவ்வாறே அவைகளும் செயல்படுகின்றன! ”
மார்ட்டின் லூதர் கிங் ஜூனியருக்கு இந்தியாவுக்கு வழங்கிய வழிகாட்டியாக இருந்த ஒளி மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி.புதன்கிழமை, அவரது 150 வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம். பப்பு என்று அன்போடு அழைக்கப்படும் காந்தி ஜி, உலகளவில் கோடிக்கணக்கான மக்களுக்கு இன்றும் தைரியம் தந்து வருகிறார்.
காந்தியின் அநீதிய எதிர்ப்பு முறைகள் பல ஆப்பிரிக்க நாடுகளிடமும் நம்பிக்கையின் உணர்வைத் தூண்டின. உதாரணமாக, டாக்டர் கிங் கூறும்போது , "மேற்கு ஆபிரிக்காவின் கானாவில் விஜயம் செய்தபோது, பிரதமர் நக்ருமா காந்தியின் படைப்புகளைப் படித்ததாகவும், வன்முறையற்ற அகிம்சை எதிர்ப்பை தன்நாட்டில் நீட்டிக்க முடியும் என்று உணர்ந்தார்” என்பதைக் குறிப்பிடுகிறார்.
நெல்சன் மண்டேலா காந்தியை "புனித வீரர்" என்று குறிப்பிட்டு," நம்மை ஆதிக்கம் செலுத்துபவர்களிடம் நாம் பேச்சிற்கு அழைப்பதில் தான் நமக்கான வீரம் உள்ளது என்ற அவரது கூற்று சர்வதேச அளவில் காலனித்துவ எதிர்ப்புக்கும், இனவெறிக்கு எதிரான போராட்டத்தையும் ஊக்கப்படுத்தின." என்கிறார்.
மண்டேலாவைப் பொறுத்தவரை, காந்தி இந்திய மற்றும் தென்னாப்பிரிக்கராக இருந்தார். இந்த கூற்றுக்கு காந்தி ஒப்புதலும் அளித்திருந்திருப்பார். மனித சமுதாயத்தில் உள்ளூர்ந்து இருக்கும் மிகப் பெரிய முரண்பாடுகளுக்கு இடையில் ஒரு பாலமாக மாறுவதற்கான தனித்துவமான திறனை காந்தி கொண்டிருந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது .
1925 ஆம் ஆண்டில், காந்தி “யங் இந்தியா” என்ற பத்திரிக்கையில் காந்தி எழுதும் போது “ஒருவர் தேசியவாதியாக இல்லாமல் சர்வதேசவாதியாக இருக்க முடியாது. தேசியவாதம் சாத்தியாமானால் தான் சர்வதேசமும் சாத்தியமாகும். அதாவது, வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் தங்களை ஒழுங்கமைக்கும் போதுதான், மனிதத்துவமும், சர்வேதச மனித இனமும் செயல்பட முடியும். ” என்கிறார்.
எனவே, அவர் இந்திய தேசியவாதத்தை ஒருபோதும் குறுகியதாகவோ அல்லது பிரத்தியேகமாகவோ கருதவில்லை, ஒட்டுமொத்த மனிதகுலத்தின் வெளிப்பாடாகத் தான் தேசியவாதத்தைப் பார்த்தவர் .
மகாத்மா காந்தி சமூகத்தில் உள்ள அனைத்து பிரிவுகளிடையேயும் நம்பிக்கைப் பெற்றவராவார். 1917 இல், குஜராத்தில் அகமதாபாத் ஒரு பெரிய ஜவுளி வேலைநிறுத்தத்தைக் கண்டது. ஆலைத் தொழிலாளர்களுக்கும் உரிமையாளர்களுக்கும் இடையிலான மோதல் திரும்பப் பெற முடியாத அளவுக்கு அதிகரித்தபோது, காந்தி தான் ஒரு சமமான தீர்வுக்கு மத்தியஸ்தம் செய்தார்.
தொழிலாளர்களின் உரிமைகளுக்காக மஜூர் மகாஜன் சங்கத்தை என்ற சங்கத்தை காந்தி உருவாக்கினார். அந்த நாட்களில், "மகாஜன்" என்பது உயரடுக்கினருக்கு மரியாதை செலுத்தும் தலைப்பாக பயன்படுத்தப்பட்டது. “மகாஜன்” என்ற பெயரை “மஜூர்” அல்லது தொழிலாளர்கள் என்று இணைத்து காந்தி சமூக கட்டமைப்பைத் தலைகீழாக மாற்றினார். அந்த மொழியியல் தேர்வால், தொழிலாளர்களின் பெருமையை அதிகரித்தது. எனவே, காந்தியின் சிறிய படிகள் எவ்வளவு பெரிய தாக்கத்தை உருவாக்கியது என்பதை இதன் மூலம் புரிந்துக் கொள்ளலாம்.
காந்தி சாதாரண பொருள்களை வெகுஜன அரசியலுடன் இணைத்தவர். சர்கா, ஒரு சுழல் சக்கரம், காதி, மற்றும் கைத்தறியால் நெய்யப்பட்ட துணி ஒரு தேசத்தின் பொருளாதார தன்னம்பிக்கையையும் மற்றும் அதிகாரமளித்தளையும் பிரதிநிதித்துவப் பட முடியும் என்ற யோசனை மற்றவர்களுக்கு வந்திருக்குமா? என்பதே ஒரு சந்தேகம் தான்.
ஒரு கைப் பிடி உப்பு மூலம் வெகுஜன போராட்டத்தை வேறு யாரால் உருவாக்கியிருக்க முடியும்! காலனித்துவ ஆட்சியின் போது, உப்புக்கு புதிய வரி விதித்த பிரிட்டிஷின் உப்பு வரிச் சட்டங்கள் இந்திய மக்களுக்கு சுமையாக இருந்தன . 1930 ஆம் ஆண்டு தண்டி மார்ச் மூலம் காந்தி உப்புச் சட்டங்களை சவாலாக்கினார் . அரேபிய கடல் கரையில் இருந்து சிறிய உப்பை அவர் கையால் எடுத்தபோது வரலாற்று சிறப்புமிக்க ஒத்துழையாமை இயக்கம் உருவாக வழிவகுத்தது.
உலகில் பல வெகுஜன இயக்கங்கள் நடந்துள்ளன, ஏன்.... இந்தியாவில் கூட பல வகையான சுதந்திரப் போராட்டத்தின் நடந்தேறியுள்ளன, ஆனால் மக்கள் பங்கேற்பு என்று தாரக வார்த்தையின் மூலம் இவைகளில் இருந்து காந்தியப் போராட்டம் வேருபடுகின்றது. காந்தி ஒருபோதும் நிர்வாக பதவியை வகித்ததில்லை. அதிகாரப் பசி அவரிடம் ஒரு நாளும் இருந்ததில்லை.
அரசியல் சுதந்திரத்திற்கும் தனிப்பட்ட அதிகாரமளிப்பிற்கும் இடையிலான ஆழமான தொடர்பில் தான் காந்தி சுதந்திரம் என்கிற வார்த்தையை வகைப்படுத்திகிறார். கண்ணியமும் செழிப்பும் ஒத்திருக்கும் ஒரு உலகமே அவரின் கர்ப்பனை . மேற்கத்திய உலகங்கள் மனிதர்களுக்கான தனி உரிமைகள் பற்றி பேசியபோது, காந்தி தனிமனிதக் கடமைகளை வலியுறுத்தினார். இது குறித்து 'இளம் இந்தியாவில்' காந்தி எழுதுகையில் "மனிதர்களின் தனி உரிமைகளுக்கு ஆதாரமாய் இருப்பது அவர்களின் கடமை. நாம் அனைவரும் நமக்கான கடமைகளை நிறைவேற்றினால், உரிமைகள் தேடுவது வெகு தொலைவில் இருக்காது.” என்கிறார். மேலும் , ஹரிஜன் இதழில் எழுதும் போது ,“ தனது கடமைகளை முறையாகச் செய்கிறவருக்கு உரிமைகள் தானாகவே கிடைக்கும். ” என்று அர்த்தம் தருகிறார்.
ஏழைகளின் சமூக-பொருளாதார நலனை வலியுறுத்தும் அறங்காவலர் ( trusteeship ) கோட்பாட்டை காந்தி நமக்கு வழங்கியுள்ளார். மனிதர்களின் பொறுப்புப் பற்றிய சிந்தாந்தங்களை நாம் சிந்திக்க இந்த கோட்பாடு நம்மை தூண்டுகிறது . பூமியின் வாரிசுகளாகிய நாம் தான் அதன் நல்வாழ்வுக்கு பொறுப்பாளிகள். தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் நல்வாழ்வும் இதில் அடங்கும்.
மனிதநேயத்தை நம்புபவர்களை ஒன்றிணைப்பது முதல் நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவது மற்றும் பொருளாதார தன்னம்பிக்கையை உறுதி செய்வது வரை நமது ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வுகளை தருபவராக காந்தி விளங்குகிறார். எனவே, காந்தி என்ற சிந்தாந்த்தால் தான் நம் தேடலுக்கான சிறந்த ஆசிரியர் இருக்கிறார்.
இந்தியாவில் இருக்கும் நாங்கள் எங்கள் தரப்பு முயற்சிகளை செய்து வருகிறோம். வறுமை ஒழிப்பை இந்தியா மிக வேகமாக கையாண்டு வருகிறது. எங்களது தூய்மை முயற்சிகள் உலகளாவிய கவனத்தை ஈர்த்தன. சர்வதேச சோலார் கூட்டணி போன்ற முயற்சிகள் மூலம் புதுப்பிக்கத்தக்க வளங்களைப் பயன்படுத்துவதில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இது பல நாடுகளை ஒன்றிணைத்து சூரிய சக்தி மூலம் ஒரு நிலையான எதிர்காலத்தை உருவாக்க வழிவகுக்கும் . உலகத்துக்காக, இந்த உலகத்தோடு ஒன்றினைந்து இன்னும் அதிகமாக நாங்கள் செய்ய விரும்புகிறோம் என்றால் மிகையாகாது.
காந்திக்கு அஞ்சலி செலுத்தும் இந்த தருணத்தில் , ஐன்ஸ்டீன் சவால் ஒன்றை நான் கூற விரும்புகிறேன். "வரவிருக்கும் தலைமுறையினர் இரத்தம் மற்றும் சதையால் இதுபோன்ற ஒருவர் இந்த பூமியில் வாழ்ந்தார் என்பதை நம்புவதில்லை "என்று காந்தி பற்றிய ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் புகழ்பெற்ற சொற்களை நாம் அறிந்திருப்போம்.
காந்தியின் சொற்களை எவ்வாறு அடுத்த தலைமுரையினருக்கு எடுத்து செல்வது ? என்ற கேள்வுக்கு பதில் தேட சிந்தனையாளர்களையும், தொழில்முனைவோரையும் , தொழில்நுட்பத் தலைவர்களையும் நான் அழைக்கின்றேன்.
உலகம் சிறக்க, நம்மில் இருக்கும் வெறுப்புகள் நீங்க நாம் தோலோடு தோல் நின்று உழைக்க வேண்டும். காந்தி அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தையான “வைஷ்ணவ ஜன,” என்பதற்கு எவன் ஒருவன் அடுத்தவர்களின் கஷ்டங்களைப் புரிந்து செருக்கோடு இல்லாமல், அந்த கஷ்டங்களைப் போக்க நினைகின்றானோ அதுவே உண்மையான மனிதத்துவம் என்ற பொருள். நமது உழைப்பின் பயனாய் இந்த மனிதத்துவத்தை அடைய வேண்டும்.
எங்களது மதிப்பிற்குரிய பப்பு, உலகம் உங்களை வணங்குகிறது !
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.