Dr. தாராதத்
நேர்மை, உண்மை, கடின உழைப்பு என்பதெல்லாம் குடிமைப்பணியாளர் வாழ்வியல் நடைமுறையாக இருக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் அவரது குறிக்கோள் பொதுமக்களுக்கு சேவை செய்யக்கூடியதாக மட்டுமே இருக்க வேண்டும். நீதி, நேர்மை, உண்மை, தொழிலில் அறம் ஆகியவை குறித்து முன்னாள் அதிகாரிகள் கூறுவது விளையாட்டாக தெரியும்.
நேர்மையே உயரிய கொள்கை என்ற பழைய பழமொழியை சில நாட்களுக்கு முன் ஒரு முன்னாள் அதிகாரி இன்றைய அரசியல்வாதி கோடிட்டு காட்டியதை பத்திரிக்கை செய்திகளில் படிக்க நேர்ந்தது. அதிகாரிகள் எந்த சூழலிலும் நேர்மையாக இருப்பது அவர்களுக்கு நன்மை கொடுக்கும் என்று முடித்திருந்தார். நேர்மை என்பதை பல்வேறு சூழ்நிலைகளில் செய்யக்கூடிய விஷயங்கள் மற்றும் செய்யக்கூடாத விஷயங்கள் என்பதற்குள் அடைத்திருந்தனர். மேடைப்பேச்சு அல்லது நேர்மை குறித்து படிப்பதாலோ ஒரு மனிதன் நேர்மையானவனாக நடக்கமுடியும் என்பதுபோல் இருந்தது அந்த செய்தி.
ஒரு குடிமைப்பணியாளரின் பணி என்பது அவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளை முடிப்பது மட்டும் கிடையாது. நேர்மை, உண்மை, கடின உழைப்பு என்பதெல்லாம் அவரது வாழ்வியல் நடைமுறையாக இருக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் அவரது குறிக்கோள் பொதுமக்களுக்கு சேவை செய்யக்கூடியதாக மட்டுமே இருக்க வேண்டும். அதைவைத்தே ஒரு அதிகாரியின் நேர்மை அளவிடப்படுகிறது. 40 ஆண்டுகளுக்கும் மேலான பொதுவாழ்வில், வாய்மையே வெல்லும் என்ற நோக்கம் கொண்ட குடியரசு இந்தியாவில் முக்கிய பொறுப்புகளை வகித்துபோதும், நேர்மைக்கும் விலையுண்டு என்று எச்சரிக்கப்பட்டபோதும் நாங்கள் நேர்மையை கடைபிடித்திருக்கிறோம். சில நேரங்களில் எங்கள் பொறுப்பில் இருந்து தவறநேருகிறது அல்லது நேர்மையை கடைபிடித்து பகையையும் பிரச்னைகளையும் சம்பாதித்து கொள்கிறோம்.
இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க
ஒரு பரிகாசமான உண்மை என்னவென்றால், நேர்மைக்கு எப்போதும் அதிக விலையுண்டு. நேர்மையான முடிவுகள் மற்றும் உண்மையாக சட்டத்தை செயல்படுத்தும்போது, எழுத்து வடிவில் உள்ள சட்டத்தை மதிக்காத சமூகத்தில், ஆபத்தையும், சிரமத்தையும் சந்திக்க வேண்டிவரும். உண்மையில் சமூகம் பல்வேறு மாயைகளாலும், வக்கிரங்களாலும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் பாகுபாடின்றி, பயமின்றி, ஒரு தரப்பிற்கு ஆதரவாக செயல்படக்கூடாத சட்டங்களும், நிர்வாகமும், நீதித்துறையும் ஒழுக்கத்தை ஒருபோதும் பின்பற்றாது. அது முக்கிய பதவிகளை பிடிப்பதற்கு குறுக்கு வழியை கையாளும். அதற்கு தகுதியின் அடிப்படையில் எந்த போட்டியும் இருக்க வேண்டும் என்ற அவசியம் இருக்காது. ஆனால் சில நேரங்களில் நல்ல விஷயங்களுக்காக ஒளிவுமறைவாக சில தவறுகளை செய்யவேண்டியுள்ளது. சில நேரங்களில் தங்களின் தலைவர்களுக்காக கொள்கையை மீறி செயல்படவேண்டியுள்ளது. அதில் அவர்கள் மீது அதிகாரம் உள்ளவர்களின் மிரட்டலில் இருந்தும் தப்பமுடியாது.
சில நேர்மையான அதிகாரிகளும் அரசியல் காரணமாக பாதிக்கப்படுகிறார்கள். குடிமைப்பணியாளர்களுக்கு இந்தியா கொடுக்கும் அளவிற்கு எந்த நாடும் பணி பாதுகாப்பு அளிக்கவில்லை. குறிப்பாக அகில இந்திய அளவிலான சேவைகளில் இருப்பவர்களை குறிப்பிட்டுச்சொல்லலாம். பணியில் இருந்து விலகுவது, பணியில் சேர்வதைவிட கடினமானதாக இருக்கும். ஒரு மருத்துவர் சர்க்கரை தடவிய மாத்திரைகளை சர்க்கரை நோயாளி விரும்புகிறார் என்பதற்காக அவருக்கு பரிந்துரைக்க மாட்டார். அதேபோல் அரசியல் அதிகார வர்கத்தினரின் முடிவுகளைவிட பொதுமக்கள் நலனை முதன்மையாக கருதி ஒவ்வொரு திட்டத்தையும் தகுதியின் அடிப்படையில் செய்யவேண்டிய பொறுப்பு அதிகாரிகளுக்கே இருக்கிறது. சட்ட விரோதமான உத்தரவுகளுக்கோ அல்லது தகுதியில்லாத திட்டங்களுக்கோ செவி சாய்க்க முடியாது என்பதை தைரியமாக தெரிவிக்க வேண்டும்.
எத்தனை அரசு ஊழியர்கள் சட்ட விதிகளுக்கு ஏற்ப கடமைகளை நிறைவேற்றியதற்காக பாதிக்கப்பட்டுள்ளனர்? இந்த பாதிப்புகள் பணியிட மாற்றம், குறிப்பிட்ட அதிகாரத்தை முடக்குவது போன்ற சிக்கல்களை சந்திக்க நேரிடும் வாய்ப்புகளும் உள்ளது. இவையெல்லாம் அதிகாரிகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள ஆட்சியாளர்கள் பயன்படுத்தும் கருவிகள். என் அனுபவத்தை பொறுத்தவரை, அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டிய நிலை இருந்தாலும், பொதுமக்களுக்கான சேவையை பாதிக்காத அளவு பணி செய்ய வழி இருக்கிறது. குறிப்பிட்ட ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக இருப்பதே ஒரு அதிகாரியின் முடிவெடுக்கும் திறனை பாதிக்கிறது. ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக மட்டுமே செயல்படுபவர்களின் கதை வேறு ஒருவரால் அதேபோல் முடிக்கப்படும் என்பதை மறந்துவிடுகிறார்கள்.
பொதுத்துறையின் மோசமான நிலைக்கு, அதன் தவறான நிர்வாகத்தை மட்டுமே காரணமாக கூறமுடியாது. அங்குள்ள மேலதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தன்னிச்சையான பல அதிகாரங்களும் காரணமாகிறது. ரயில்வே துறையின் சேர்மனோ அல்லது விமான போக்குவரத்து துறையின் செயலாளாரோ ஏன் வாழ்நாள் முழுவதும் ரயில்வே அல்லது விமான துறையின் சலுகைகளை அனுபவிக்கிறார்கள். முன்னாள் துணை பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர், ஓய்வுபெற்ற காவல்துறை அலுவலர்களுக்கு உதவிக்கொண்டிருந்த 400 கான்ஸ்டபிள்களின் சேவையை திரும்பப்பெறுமாறு டெல்லி போலீஸ் கமிஷ்னருக்கு, அறிவுறுத்தியது எனக்கு நினைவில் இருக்கிறது. அரசியல்வாதிகளை மட்டுமே எதெற்கெடுத்தாலும் குறை கூறுவது சுலபம்தான். சில அதிகாரிகள் நீதி, நேர்மை என்று பேசிவிட்டு, அவர்களின் குடும்பத்திற்காக பதவிகளை துஷ்பிரயோகம் செய்கின்றனர். மனசாட்சி உறுத்தினாலும் பல்வேறு நன்மைகளையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பணம்பெற்று அனுபவித்துக்கொள்கின்றனர். எவ்வித வியாபாரமும் இன்றி நேர்மை விலைமதிப்பற்றது. நேர்மையானவர்கள் அவ்வப்போது சில பிரச்னைகளை சந்திக்க நேரிடம். ஆனால் அது நீண்டகாலம் தொடராது.
தமிழில் R.பிரியதர்சினி
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.