/indian-express-tamil/media/media_files/2025/05/13/AOhdHjdhK57QxoTDqvcK.jpg)
/indian-express-tamil/media/media_files/2024/10/19/MQgw60cIEWvzI0uY3RYa.jpg)
இதற்கு சுவாசப்பயிற்சி, முறையான உணவுப்பழக்கம், தியானம் போன்றவற்றை கடைப்பிடிப்பதுடன், சில தீய பழக்கவழக்கத்தையும் அடியோடு நிறுத்த வேண்டியிருக்கிறது.. அதேபோல, நிம்மதியான தூக்கத்துக்கு 3-2-1 பார்முலா பெரிதும் கைகொடுப்பதாக சொல்கிறார்கள். அப்படியென்றால் என்ன?
/indian-express-tamil/media/media_files/2025/02/01/hQEgxPctY4tjjTiTkGnu.jpg)
நமக்கு முறையான மற்றும் சரியான தூக்கம் இருந்தாலே ஆரோக்கியமான வாழ்வை பெற முடியும் என்கிறார்கள். அந்த அளவுக்கு தூக்கம் அனைவருக்குமே அத்தியாவசியமானது. இவைகளுடன் சத்தான உணவு, தொடர்ச்சியான உடற்பயிற்சிகள் சேரும்போது, நிம்மதியான ஆரோக்கியமான வாழ்வை பெற முடியும்.
/indian-express-tamil/media/media_files/otNcOQYhP5nrk7IgWUua.jpg)
3-2-1 ஃபார்முலா என்றால் என்ன?
அதாவது, தூங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன் மது, இறைச்சி அல்லது செரிமானமாகாத உதவை சாப்பிடக்கூடாது.. இவைகளை 3 மணி நேரத்துக்கு முன்னதாகவே முடித்து விட வேண்டும்.. அதேபோல, 2 இரண்டு மணி நேரத்திற்கு முன்பு மனதை அமைதியாக ஒருமுகப்படுத்த துவங்க வேண்டும்.. இதற்கான ஓய்வான நிலையில் மனதையே வைத்துக் கொள்ள வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/s9meCSPHsRqIY4l4RVKR.jpg)
அடுத்ததாக, 1 மணி நேரத்திற்கு முன்பாகவே, டிவி, கம்ப்யூட்டர், செல்போன் என எலக்ட்ரானிக் சாதனங்கள் பயன்படுத்துவதை நிறுத்திவிட வேண்டும். இதுதான் அந்த 3-2-1 பார்முலாவாகும்.
/indian-express-tamil/media/media_files/QqUJdMTvolfEtDVcMvti.jpg)
அதேபோல, தூங்குவதற்கு 10 மணி நேரம் முன்னதாக காபி, டீ, ஜூஸ் குடிப்பதை முடித்து விட வேண்டுமாம்.. காரணம் காபி உள்ளிட்ட பானங்களிலுள்ள காஃபின், தூக்கத்தை கெடுத்துவிடக்கூடியவை.. சீரான தூக்கத்தையும் தரவிடாது.
/indian-express-tamil/media/media_files/V5Nnat0v7EQKfv5xxYy0.jpg)
8 மணி நேரம் தூக்கம் அவசியம் என்றால், முதலில் 3-2-1 பார்முலாவை ஒரு வாரத்திற்கு பின்பற்ற துவங்கிவிட்டாலே, நாளடைவில் அதுவே பழகிவிடும்.. அதற்கு பிறகு, 10-3-2-1 பார்முலாவை முயற்சித்தால் எளிதாக பழக்கப்படுத்தி கொள்ள முடியும் என அறிவுறுத்துகிறார்கள் நிபுணர்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.