/indian-express-tamil/media/media_files/2025/08/30/screenshot-2025-08-30-182117-2025-08-30-18-21-35.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/08/30/istockphoto-639534840-612x612-2025-08-30-18-23-21.jpg)
ராஜஸ்தான் மாநிலத்தின் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள லிலாவாஸ் கிராமத்தைச் சேர்ந்தவர் கவர ராம் கல்பெலியா. இவரது மனைவி ரேகா, வயது 55. கவர ராம் பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/2025/08/30/istockphoto-2151267118-612x612-2025-08-30-18-23-21.jpg)
கவர ராமின் மனைவி ரேகா ஏற்கனவே 16 குழந்தைகளை பெற்றெடுத்த நிலையில் அவர் மீண்டும் கர்ப்பமடைந்துள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2025/08/30/istockphoto-485634983-612x612-2025-08-30-18-23-21.jpg)
இந்நிலையில், ரேகா நேற்று 17வது குழந்தையை பெற்றெடுத்தார். ஏற்கனவெ பிரசவத்தின்போது ரேகாவிற்கு 6 குழந்தைகள் (ஒரு பெண் குழந்தை உள்பட) உயிரிழந்துவிட்டன. எஞ்சிய 11 பிள்ளைகளுடன் ரேகா , கவர ராம் தம்பதி வாழ்ந்து வந்தனர். தற்போது ரேகாவுக்கு 17வது குழந்தை பிறந்துள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/08/30/istockphoto-1146328123-612x612-2025-08-30-18-23-21.jpg)
ரேகா, தனது 4வது குழந்தையாக கூறி மருத்துவமனையில் சேர்ந்தார், ஆனால் பிரசவத்திற்கு பிறகு அது அவரது 17வது குழந்தை என தெரியவந்தது. மருத்துவர்கள், தொடர்ந்த கர்ப்பத்தால் ரேகாவின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று எச்சரிக்கையுடனும், தாயும் சேயும் நலமுடன் உள்ளனர் என்று தெரிவித்தனர். கவர ராம், தனது பிள்ளைகளுக்கும் கல்வி வழங்கவில்லை.
/indian-express-tamil/media/media_files/2025/08/30/istockphoto-1150884079-612x612-2025-08-30-18-23-21.jpg)
அதேவேளை, ரேகாவின் பிள்ளைகளில் 2 மகன்கள், 3 மகன்களுக்கு ஏற்கனவே திருமணமாகி அவர்களுக்கும் குழந்தை உள்ளது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.