/indian-express-tamil/media/media_files/2025/05/23/HGDtt3W5xlwyXFjdBupr.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/05/24/AjmT5aTrwXe7jBoKbXNn.jpg)
தமிழ் சினிமாவில் நடப்பு ஆண்டில் ஏராளமான படங்கள் வெளிவந்த போதிலும், 6 படங்கள் மட்டுமே விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்த வகையில் நடப்பு ஆண்டில் இதுவரை வெளியான படங்களில் சிறந்த 6 படங்களையும் அவை எந்தெந்த ஓடிடி தளங்களில் உள்ளன என்பதையும் பார்க்கலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/03/01/L1HT6oimDKFXKp11wqNO.jpg)
குடும்பஸ்தன்
குடும்பஸ்தன் மணிகண்டன் முன்னணி கேரக்டரில் நடித்த இந்த படத்தில் சாந்தி, மேகனா, சுந்தரராஜன், குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். ஃபேமிலி டிராமா அண்ட் ஜானரில் வெளிவந்த இந்த திரைப்படம் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் வாழ்க்கையை சுவாரசியமாகக் கூறியது. படத்தை இயக்கிய ராஜேஸ்வர் காளிசாமிக்கு இதுதான் முதல் படமாகும். ஜி5 ஓடிடி தளத்தில் இந்த படத்தை பார்க்கலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/03/04/vidaamuyarchi-box-office-collections-day-2-743455.webp)
விடாமுயற்சி
அஜித் முன்னணி கேரக்டரில் நடித்து மகிழ் இயக்கத்தில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட, கடத்தப்படும் மனைவியை காப்பாற்றும் கணவன் கேரக்டரில் அஜித் குமார் பாராட்டும்படியான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். மாஸ் காட்சிகள் அதிகம் இல்லாமல் இயல்பான நடிப்பால் அஜித் குமார் ரசிகர்களை கவர்ந்தார். அனிருத் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் வெற்றி பெற்றது. இந்த படம் Netflix தளத்தில் உள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/04/24/7FW1IlJ2kDPL4hYpiZ0p.jpg)
டிராகன்
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் முன்னணி கேரக்டரில் நடித்த டிராகன் திரைப்படம் Netflix ஓடிடி தளத்தில் உள்ளது. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், காளிதாஸ் ஜெயராம், மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
/indian-express-tamil/media/media_files/2025/05/05/screenshot-2025-05-05-151138-401747.png)
ரெட்ரோ
சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ரெட்ரோ திரைப்படம் நடிகர் சூர்யாவுக்கு கம்பேக்கைக் கொடுத்தது. கங்குவா படத்தின் தோல்வியால் பின்னடைவை சந்தித்திருந்த சூர்யா ரெட்ரோ படத்தின் மூலம் வெற்றிப் பாதைக்கு திரும்பினார். பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம் இந்த படத்தில் நடித்தனர். ரெட்ரோ நெட் ஃப்ளிக்ஸில் உள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/05/05/Yl1QwxFOr2hmCwRiZEkb.png)
டூரிஸ்ட் ஃபேமிலி
ஃபேமிலி டிராமா ஜானரில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி. சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்திருந்தனர். ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி படம் உள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/04/25/PF54fWSuhMcNHh4HifmM.png)
வீரதீர சூரன்
தங்கலான் படத்தை தொடர்ந்து விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் வீரதீர சூரன் இரண்டாம் பாகம். இந்த படத்தை அருண்குமார் இயக்கி இருந்தார். பீரியட் ஆக்ஷன் டிராமா ஜானரில் வெளியான இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. விறுவிறுப்பான கதைக்களத்தை அமைத்து இயக்குனர் அருண்குமார் ரசிகர்களை கவர்ந்தார். இந்த படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, சூரஜ் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இந்த திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.