/indian-express-tamil/media/media_files/2025/08/17/screenshot-2025-08-17-173515-2025-08-17-17-36-35.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/08/17/screenshot-2025-08-17-173519-2025-08-17-17-38-14.png)
தற்போது உள்ள காலகட்டத்தில் பலவிதமான உணவுகள் அறிமுகமாகி வந்தாலும், அந்த காலத்தில் 80ஸ் மற்றும் 90ஸ் களில் விரும்பி சாப்பிடும் சில உணவுகளின் ருசிக்கு ஈடாவதில்லை.
/indian-express-tamil/media/media_files/2025/08/17/screenshot-2025-08-17-173526-2025-08-17-17-38-14.png)
அந்த வகையில், 80ஸ் மற்றும் 90ஸ்கள் ரசித்து சாப்பிட்ட மிளகாய் மிட்டாய் இந்த தலைமுறையினருக்கு அறியப்பட்டாத ஒன்றாக உள்ளது. அதன் செய்முறை குறித்து இப்பதிவில் நாம் காணலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/08/17/screenshot-2025-08-17-173533-2025-08-17-17-38-14.png)
அதாவது, முதலில் 2 கப் மைதா எடுத்துக்கொண்டு அதில் 1/2 சிட்டிகை உப்பு சேர்த்து, விருப்பப்பட்டால் நிறத்திற்காக சிறிதளவு கேசரி பவுடர் தூவி தண்ணீர் விட்டு நன்றாக பிசைந்துகொள்ள வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/2025/08/17/screenshot-2025-08-17-173544-2025-08-17-17-38-14.png)
தேவையான பதத்தில் பிசைந்தபின், அதை மிளகாய் வடிவில் செய்து எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்கவேண்டும். அதன்பின், மற்றொரு வானலியில் 250 மில்லி தண்ணீர் வைத்து, அதில்1 கப் சர்க்கரை சேர்த்து, பாகு தயாரிக்க வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/2025/08/17/screenshot-2025-08-17-173549-2025-08-17-17-38-14.png)
இப்போது பொரித்து வைத்திருந்த மிட்டாய்யை சர்க்கரை பாகில் ஊறவைத்து சாப்பிட்டால் சுவையான மிளகாய் மிட்டாய் தயார்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.