/indian-express-tamil/media/media_files/2025/09/22/aavin-shop-2025-09-22-16-56-34.jpg)
Aavin price reduction GST milk products
/indian-express-tamil/media/media_files/QJJUg7cML2uhxPzKvy12.jpg)
ஜிஎஸ்டி (GST) குறைக்கப்பட்டதை அடுத்து, தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனம் அதன் சில பால் பொருள்களின் விலைகளைக் குறைத்து அறிவித்துள்ளது. எனினும், தயிர், மோர், வெண்ணெய், ஐஸ் கிரீம் போன்ற சில முக்கியப் பொருள்களின் விலை குறைக்கப்படவில்லை.
/indian-express-tamil/media/media_files/2025/09/22/aavin-ghee-2025-09-22-16-57-55.jpg)
புதிய விலை விவரங்கள்
நெய்: 5 லிட்டர் பாட்டில் நெய் விலை ரூ. 3,600-ல் இருந்து ரூ. 3,250 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு முன்பு வழங்கப்பட்டு வந்த ரூ. 50 தள்ளுபடி தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், புதிய விலை ரூ. 3,300 ஆக இருக்கும். நெய் டின்: 15 லிட்டர் நெய் டின்னுக்கு அளிக்கப்பட்டு வந்த ரூ. 175 தள்ளுபடியும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/09/22/1343001-2025-09-22-16-58-10.jpg)
விலை குறைப்பு இல்லாத பொருள்கள்
தயிர், லஸ்ஸி, மோர்: இந்த பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, அவை 5% வரி அடுக்குகளில் இருந்து நீக்கப்பட்டிருந்தாலும், அவற்றின் விலையை ஆவின் நிறுவனம் குறைக்கவில்லை. வெண்ணெய், சீஸ், ஐஸ் கிரீம்: 12% ஜிஎஸ்டியில் இருந்து 5% ஆக வரி குறைக்கப்பட்ட போதிலும், இந்த பொருள்களின் விலையும் குறைக்கப்படவில்லை.
/indian-express-tamil/media/media_files/2024/10/26/9kAfo5NTFQyVpUQjZeW7.jpg)
பிற நிறுவனங்கள் குறைப்பு
ஜிஎஸ்டி வரி குறைப்புக்குப் பிறகு, அமுல், நந்தினி, மதர் டெய்ரி போன்ற பல்வேறு பால் நிறுவனங்கள் தங்கள் பொருள்களின் விலையைக் குறைத்து அறிவிப்புகளை வெளியிட்டன. குறிப்பாக, கர்நாடகாவின் நந்தினி நிறுவனம் தயிர், மோர், வெண்ணெய், ஐஸ் கிரீம் உட்பட பல பொருள்களின் விலையைக் குறைத்துள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/05/27/afqx87URnLBet6Rubc8V.jpg)
நந்தினி நிறுவனத்தைப் போல், ஆவின் நிறுவனமும் விரைவில் வெண்ணெய், ஐஸ் கிரீம், லஸ்ஸி போன்ற மற்ற பால் பொருள்களின் விலையையும் குறைத்து அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.