New Update
/indian-express-tamil/media/media_files/63bnwS3O2c1hOWRPjuzN.jpg)
நடிகர் அஜித் குமார் நடிக்கும் குட் பேட் அக்லி படத்தின் புதிய லுக் சமூக வலைதளங்களில் வைரல்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். அஜித் இப்போது அவரின் 63-வது திரைப்படமான குட் பேட் அக்லி (Good bad ugly) படத்தில் நடித்து வருகிறார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
50 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கும் நிலையில், படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், குட் பேட் அக்லி படத்தில் அஜித்தின் புதிய லுக் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
அதேநேரம், அஜித் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்திலும் நடித்து வருகிறார். அஜித் நடிப்பது மட்டுமின்றி பைக், கார் மீதும் ஆர்வம் கொண்டவர். அடிக்கடி வெளியூர், வெளிநாடுகளுக்கு பைக்கில் பயணம் செய்வார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.