New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/31/unnamed-1-2025-07-31-21-41-50.jpg)
இந்திய விமானப்படையில் பணியாற்றி ஒரே தமிழ் நடிகர் யார் என்பது குறித்து இந்த செய்திகுறிப்பில் பார்க்கலாம். இவர் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் பல விதமாக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
ஆம், பழம்பெரும் நடிகர் டெல்லி தான் அவர். 1976 ஆம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கத்தில் பட்டிண பிரவேசம் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் டெலலி கணேஷ். இவரை ‘டெல்லி கணேஷ்’ என குறிப்பிட்டு அழைத்தவர் இயக்குநர் பாலச்சந்தர்.
மேலும் 1981ஆம் ஆண்டு ‘எங்கம்மா மகாராணி’ என்ற படத்தில் நாயகனாகவும், ‘அபூர்வ சகோதரர்கள்’ என்ற படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார். ‘பசி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்நாடு மாநில திரைப்பட விருது சிறப்பு பரிசு இவருக்கு அளிக்கப்பட்டது.
மேலும் கடந்த 1994ஆம் ஆண்டு தமிழக அரசால் கலைமாமணி விருதும் இவருக்கு கொடுக்கப்பட்டது. திரைப்படங்கள் மட்டுமின்றி, சின்னத்திரையிலும், பல குறும்படங்களிலும் நடித்துள்ளார் டெல்லி கணேஷ்.
இந்நிலையில், கடந்த 1964 முதல் 1974 வரையிலான 10 வருடங்கள் டெல்லி கணேஷ் இந்திய விமானப் படையில் பணியாற்றியுள்ளார். இதையடுத்து சினிமா மீது ஆர்வம் வந்ததால் தனது பணியை விட்டு, சினிமாவில் நடிக்கத்தொடங்கினார்.
மேலும் டெல்லி கணேஷ் சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் தட்சிண பாரத நாடக சபை என்ற டெல்லியிலுள்ள நாடக குழுவில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி இரவு 11 மணியளவில் டெல்லி கணேஷ் தூக்கத்திலேயே மறைந்தார்.
அவரது இறுதிச் சடங்கில், இந்திய விமானப்படை வீரர்கள் அவருக்கு மரியாதை செலுத்தினார்கள். விமானப்படை வீரர்கள் இந்திய விமானப்படையின் கொடியை வைத்து டெல்லி கணேஷுக்கு அஞ்சலி செலுத்தினர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.