சின்னத்திரையில் நுழைந்து வெற்றிகரமாக பயணித்து வரும் ராஜ்கமல், சினிமா ரசிகர்கள் அறிந்த பிரபல குடும்பத்தின் வாரிசு என்பது பலருக்குத் தெரியாது. அவர் வேறு யாருமல்ல, பழம்பெரும் தமிழ் நடிகர் ஜெய்சங்கரின் பேரன்தான். ஜெய்சங்கர், 60 மற்றும் 70-களின் காலகட்டத்தில், துப்பறியும் கதாநாயகனாக பல படங்களில் நடித்து, "ஜேம்ஸ் பாண்ட்" ஜெய்சங்கர் என்று அழைக்கப்பட்டார். மேலும், அவர் தனது நடிப்புத் திறமையின் மூலம் பல விருதுகளையும் பெற்றவர்.