/indian-express-tamil/media/media_files/2025/07/19/screenshot-2025-07-19-153155-2025-07-19-15-32-12.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/07/19/screenshot-2025-07-19-153301-2025-07-19-15-34-14.png)
இவர் கன்னட திரையுலகில் முடிசூட மன்னனாக திகழ்ந்து வந்த ராஜ்குமாரின் மூத்த மகன் ஆவார். ஷிவ ராஜ்குமாருக்கு புனீத் ராஜ்குமார் என்கிற தம்பியும் இருந்தார்.
/indian-express-tamil/media/media_files/2025/07/19/screenshot-2025-07-19-153306-2025-07-19-15-34-14.png)
ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து வீடு திரும்பும் போது மாரடைப்பு ஏற்பட்டதால் தன் 46 வயதிலேயே மரணம் அடைந்தார் புனீத் ராஜ்குமார். அவரின் மறைவு அவரது அண்ணனான ஷிவ ராஜ்குமாரையும் கடுமையாக பாதித்தது.
/indian-express-tamil/media/media_files/2025/07/19/screenshot-2025-07-19-153348-2025-07-19-15-34-14.png)
அதில் இருந்து படிப்படியாக மீண்டு வரும் ஷிவ ராஜ்குமார், அண்மையில் ஒரு அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்சை பெற அமெரிக்காவுக்கு சென்றிருக்கிறார். அவருக்கு முதலில் புற்றுநோய் பாதிப்பு என கூறப்பட்டது. ஆனால் அதை மறுத்துள்ள ஷிவ ராஜ்குமார், அது என்ன நோய் என்பது கண்டுபிடிக்கப்படவில்லை. சிகிச்சைக்கு பின்னரே தெரியவரும் என கூறி உள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2025/07/19/screenshot-2025-07-19-153315-2025-07-19-15-34-14.png)
ஷிவ ராஜ்குமார் நோய் வாய்ப்பட்டுள்ள விஷயம் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அவர் விரைவில் நலம்பெற வேண்டி ரசிகர்கள் பிரார்த்தனையும் செய்து வருகின்றனர். கன்னட திரையுலகில் சூப்பர்ஸ்டாராக இருக்கும் ஷிவ ராஜ்குமார், கடந்த ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் ஒரு மாஸ் கேமியோ ரோலில் நடித்ததன் மூலம் தமிழ்நாட்டு ரசிகர்கள் மனதிலும் நீங்கா இடம்பிடித்தார்.
/indian-express-tamil/media/media_files/2025/07/19/screenshot-2025-07-19-153339-2025-07-19-15-34-14.png)
ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பின்னர் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் நடித்த ஷிவ ராஜ்குமார். அடுத்தடுத்து 6 படங்களில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார். இவரை தளபதி 69 படத்திலும் நடிக்க வைக்க இயக்குனர் வினோத் ஆசைப்பட்டார். ஆனால் கால்ஷீட் பிரச்சனையால் அப்படத்தில் ஷிவ ராஜ்குமாரால் நடிக்க முடியாமல் போனது.
/indian-express-tamil/media/media_files/2025/07/19/screenshot-2025-07-19-153543-2025-07-19-15-35-55.png)
முன்னாள் கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமாரின் மகன் தான் ஷிவ ராஜ்குமார் என்பதால், பிறக்கும் போதே இவர் கோடீஸ்வரனாக பிறந்தார். ராஜ்குமார் இறக்கும் முன் தன் மகன்களான ஷிவ ராஜ்குமார் மற்றும் புனீத் ராஜ்குமார் ஆகியோரின் பெயர்களில் பல கோடி மதிப்பிலான சொத்துக்களை எழுதி வைத்துவிட்டு தான் இறந்தார்.
/indian-express-tamil/media/media_files/2025/07/19/screenshot-2025-07-19-153602-2025-07-19-15-36-14.png)
தந்தை கொடுத்த சொத்துக்கள் போக சினிமாவில் ஹீரோவாக நடித்தும் பல கோடி சம்பாதித்துள்ளார் ஷிவ ராஜ்குமார். இந்த நிலையில், இவர் தான் சம்பாதித்த சொத்துக்களை தவிர்த்து, தன் தந்தை தனக்காக கொடுத்த சொத்துக்களை எல்லாம் அனாதை இல்லத்திற்கு எழுதி வைத்திருக்கிறார். இப்படிப் பட்ட நல்ல உள்ளம் கொண்ட ஷிவ ராஜ்குமாரின் குழந்தைப் பருவ புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.