/indian-express-tamil/media/media_files/2025/04/21/yfrdazXnkOx2DXUEEOJn.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/04/21/dud31kqUpypdEMCPzWqU.png)
தமிழ் சினிமாவில் 'நாடோடிகள்' திரைப்படம் மூலமாக பிரபலம் அடைந்தவர் அபிநயா. கேட்கும், பேசும் திறன் சவால் கொண்டவரான இவர், தனது முதல் படத்திலேயே உணர்ச்சிப்பூர்வமான நடிப்பால் ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.
/indian-express-tamil/media/media_files/2025/04/21/mcWotU1j5eC02ooWFpPd.png)
இதன் தொடர்ச்சியாக, தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, அண்மையில் இவர் மலையாளத்தில் நடித்த 'பனி' என்ற திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
/indian-express-tamil/media/media_files/2025/04/21/O5v5N9d5fMhZVlF8olGR.png)
சமீபத்தில் இவர் பங்கேற்ற நேர்காணல் ஒன்றில், ஏறத்தாழ 15 ஆண்டுகளாக ஒரு நபரை தாம் காதலித்து வருவதாக கூறியிருந்தார். குறிப்பாக, அந்நபரை விரைவில் திருமணம் செய்யப் போவதாகவும் அவர் கூறினார். இதனால் இவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
/indian-express-tamil/media/media_files/2025/04/21/xDCRee9T11ThkCIkr1sA.png)
அதன்படி, கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி தன்னுடைய காதலரான தொழிலதிபர் வகிசனா கார்த்திக் என்பவரை அபிநயா திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டது.
/indian-express-tamil/media/media_files/2025/04/21/X6Q62gABodRTDts9MH39.png)
இந்நிலையில், இவர்களது திருமணத்தில் இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரகனி உள்ளிட்ட திரைத் துறையைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். மேலும், பலரும் அவிநயா - வகிசனா கார்த்திக் தம்பதிக்கு தங்கள் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.