New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/24/yWmCBwJ9xI4NFNd8zIy1.jpg)
ஒரு பிரபல நடிகையின் குழந்தைப் பருவ புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்தக் குயூட் குழந்தை தற்போது யார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பல்வேறு சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. அந்த வகையில் நடிகை அனுபமாவின் புகைப்படங்களும் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.
தமிழில் நடிகர் தனுஷின் 'கொடி' திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி இருந்தாலும், அதற்கு முன்பாகவே மலையாளத்தில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஹிட்டடித்த 'பிரேமம்' திரைப்படம் மூலமாக நன்கு அறியப்பட்டவர் அனுபமா.
அதன்பின்னர், மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களிலும் அனுபமா நடித்துள்ளார். குறிப்பாக, அண்மையில் இவர் நடிப்பில் வெளியான 'டிராகன்' திரைப்படம் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது.
இத்தனை ஆண்டுகளில் மிகச் சில திரைப்படங்களில் மட்டுமே அனுபமா நடித்திருந்தாலும், அவர் நடித்த அனைத்து படங்களிலும் தனது அழுத்தமான நடிப்பால் முத்திரை படைத்துள்ளார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்படும் அனுபமா, அவ்வப்போது போட்டோஷூட்டுகள் நடத்தி அந்தப் புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார். இந்நிலையில், அனுபமாவின் குழந்தைப் பருவ புகைப்படத்தை அவரது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.