/indian-express-tamil/media/media_files/2025/07/02/actress-devayani-actor-nakkhul-childhood-photos-tamil-news-2025-07-02-20-04-44.jpg)
சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வரும் இந்தப் புகைப்படத்தில் இருப்பவர்கள் நடிகை தேவயானி மற்றும் அவரது தம்பி நகுல்.
/indian-express-tamil/media/media_files/2025/07/02/actress-devayani-actor-nakkhul-childhood-photos-tamil-news-2025-07-02-20-27-58.jpg)
சமீப காலமாக சமூக வலைதளங்களில் முன்னணி நடிகர், நடிகைகளின் குழந்தைப் பருவ புகைப்படங்கள் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. அந்த வகையில், தற்போது சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வரும் புகைப்படங்களுள் இந்தப் படமும் ஒன்று. இந்தப் புகைப்படத்தில் இருப்பவர்கள் நடிகை தேவயானி மற்றும் அவரது தம்பி நகுல். தமிழ் சினிமாவில் 90-களில் தவிர்க்க முடியாத நாயகியாக வலம் வந்தவர் தேவயானி. இவர் ஜூன் 22, 1974-ல் மகாராஷ்டிராவில் உள்ள மும்பையில் பிறந்தார்.
/indian-express-tamil/media/media_files/2025/07/02/actress-devayani-actor-nakkhul-childhood-photos-tamil-news-2025-07-02-20-31-50.jpg)
பெங்காலியில் 1993-ல் வெளியான ‘ஷாத் பஞ்சோமி’ என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அடியெடுத்து வைத்த தேவயானி, கோலிவுட்டில் அவரது பயணம் 1995-ல் வெளியான ‘தொட்டாச்சிணுங்கி’ படத்துடன் தொடங்கியது. முதல் இரண்டு தமிழ்ப் படங்களான ‘தொட்டாச்சிணுங்கி’ மற்றும் ‘கல்லூரி வாசல்’ தோல்வியைத் தழுவிய போதிலும், தேவயானி தன் திறமையால் தொடர்ந்து வாய்ப்புகளைப் பெற்றார்.
/indian-express-tamil/media/media_files/2025/07/02/actress-devayani-actor-nakkhul-childhood-photos-tamil-news-2025-07-02-20-32-51.jpg)
1996-ம் ஆண்டு, அஜித்துடன் இணைந்து நடித்த ‘காதல் கோட்டை’ படம் பெரும் வெற்றி பெற்றது. இப்படம் தேவயானியை தமிழ் ரசிகர்களின் மனதில் நிரந்தரமாக பதித்தது. அவர் பூமணி, சூர்யவம்சம், மறுமலர்ச்சி, தொடரும், நீ வருவாய் என, மூவேந்தர், பாட்டாளி, சமஸ்தானம், ஒருவன், தென்காசிப்பட்டணம் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்தார்.
/indian-express-tamil/media/media_files/2025/07/02/actress-devayani-actor-nakkhul-childhood-photos-tamil-news-2025-07-02-20-33-53.jpg)
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் வங்காள மொழிப் படங்களிலும் தேவயானி தனது திறமையை வெளிப்படுத்தினார். பல மொழிகளில் நடித்த அனுபவம், அவரை சிறந்த கலைஞராக உருவாக்கியது. 2001-ம் ஆண்டு, தேவயானி தனது வாழ்க்கைத் துணையாக இயக்குநர் ராஜகுமாரனை தேர்ந்தெடுத்தார். குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி, அவர் தனது காதலை திருமணத்தில் முடித்தார். இந்த தம்பதியருக்கு இனியா மற்றும் பிரியங்கா என இரண்டு அழகிய மகள்கள் உள்ளனர்.
/indian-express-tamil/media/media_files/2025/07/02/actress-devayani-actor-nakkhul-childhood-photos-tamil-news-2025-07-02-20-35-45.jpg)
வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரையிலும் நடிகை தேவயானி தடம் பதித்தார். 'கோலங்கள்’ என்ற தொலைக்காட்சி தொடர் அவரது வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. அவர் முதன்முதலாக தயாரித்து இயக்கிய ‘கைக்குட்டை ராணி’ என்ற குறும்படம், 17-வது ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த குழந்தைகள் குறும்படத்துக்கான விருதை வென்றது. தற்போது நடிகை தேவயானி 3 பி.எச்.கே படத்தில் நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பின் அவர் நடிகர் சரத் குமாருடன் இணைந்து நடித்துள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2025/07/02/actress-devayani-actor-nakkhul-childhood-photos-tamil-news-2025-07-02-20-37-09.jpg)
நடிகை தேவயானியைப் போலவே அவரது தம்பி நகுல் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருகிறார். பாய்ஸ் படத்தில் அறிமுகமான அவர், காதலில் விழுந்தேன், மாசிலாமணி, கந்தகோட்டை, நான் ராஜாவாக போகிறேன், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் தி டார்க் ஹெவன் படத்தில் நடித்து வருகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.