New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/21/actress-prathyusha-2025-06-21-20-46-49.jpg)
11 ஆண்டுகளில் 5 படங்களில் நடித்த இந்த தென்னிந்திய நடிகையை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா? இவர் 22 வயதிலேயே தற்கொலை செய்து கொண்டது, அப்போதைய சூழலில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
சினிமா நட்சத்திரங்களை திரையில் பார்க்கும் போது நமக்கு மிகவும் மகிழ்ச்சியான உணர்வு தோன்றும். ஆனால், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பெரும்பாலான நேரங்களில் அவ்வாறு இருப்பதில்லை. இதற்கு நடிகை பிரத்யுஷாவும் விதிவிலக்கல்ல.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக பிரத்யுஷா விளங்கினார். தெலங்கானா மாநிலம் புவனகிரியைச் சேர்ந்த இவர், தனது தந்தை மிக இளம் வயதிலேயே மறைந்ததால், தாயின் அரவணைப்பில் வளர்ந்தார்.
1988 ஆம் ஆண்டு, நடிகர் மோகன் பாபுவுக்கு ஜோடியாக பிரத்யுஷா அறிமுகமானார். தனது 18 வயதில், முதல் படம் வெளியாகும் முன்னரே இரண்டு படங்களில் அவர் ஒப்பந்தமாகி இருந்தார். அவரது அளவற்ற திறமை, அவருக்கு விரைவாக பல வாய்ப்புகளை அள்ளித் தந்தன.
1999 ஆம் ஆண்டு 'மனுநீதி' திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் பிரத்யுஷா அடியெடுத்து வைத்தார். இந்தப் படம் அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதைத் தொடர்ந்து, 'சூப்பர் குடும்பம்', 'தவசி', 'கடல் பூக்கள்' போன்ற பல படங்களில் நடித்தார்.
எனினும், கடந்த 2002-ஆம் ஆண்டு இவர் தற்கொலை செய்து கொண்டார். காதல் பிரச்சனை தொடர்பாக இவரும், இவரது காதலரும் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்டது. இதில், பிரத்யுஷா உயிரிழந்த நிலையில், சிகிச்சைக்கு பின்னர் அவரது காதலன் உயிர் பிழைத்ததாக தெரிவிக்கப்பட்டது. அப்போதைய காலகட்டத்தில் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.