/indian-express-tamil/media/media_files/2025/06/11/bLHVg4KzxUf0adp2M4yh.jpg)
நடிகை அமலாவின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அவரா இவர் அடையாளமே தெரியலையே என்று கூறி வருகின்றனர்.
/indian-express-tamil/media/media_files/2025/06/11/bLHVg4KzxUf0adp2M4yh.jpg)
சமீப காலமாக சமூக வலைதளங்களில் முன்னணி நடிகைகளின் குழந்தைப் பருவ புகைப்படங்கள் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. அந்த வகையில், தற்போது சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வரும் புகைப்படங்களுள் இந்தப் படமும் ஒன்று.
/indian-express-tamil/media/media_files/2025/06/11/2lWa6PCoTkYJzjGl03PN.jpg)
இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுமி தமிழ் சினிமாவில் 1980 மற்றும் 90-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர். உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, சத்யராஜ், உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். அவர் தான் நடிகை அமலா அக்கினேனி.
/indian-express-tamil/media/media_files/2025/06/11/N6OTt5LMPSpANAmVZSEl.jpg)
தமிழில் டி.ராஜேந்தர் இயக்கத்தில் 1986-ம் ஆண்டு வெளியான மைதிலி என்னை காதலி படத்தில் நடிகை அமலா அறிமுகமானார். இவர் கடைசியாக தமிழில் 1991-ல் வெளியான கற்பூர முல்லை என்ற படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு, 30 வருட இடைவெளிக்குப் பின் கணம் படத்தில் நடித்தார்.
/indian-express-tamil/media/media_files/2025/06/11/XVJT2YCimhKxK2Tyc7gr.jpg)
பரதநாட்டிய கலைஞரான நடிகை அமலா, தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ளார். கிட்டத்தட்ட 54 படங்களில் இவர் நடித்துள்ளார். இவர் புளு கிராஸ் போன்ற நிறுவனத்தில் முக்கிய பங்கு வகித்து வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/2025/06/11/AdUfTMV9QFKD8BPISfmq.jpg)
நடிகை அமலா 1992-ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவை இர்ணடாவது திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு அகில் என்ற ஒரு மகன் உள்ளார். நாகர்ஜூனாவின் முதல் மனைவி லட்சுமி டகுபதிக்கு பிறந்தவர் தான் நாக சைதன்யா அக்கினேனி.
/indian-express-tamil/media/media_files/2025/06/11/Cqcn9ScgF8QjxOFZ8Wml.jpg)
நாக சைதன்யா நடிகை சமந்தாவை திருமணம் செய்து விவாகரத்து செய்தார். இதன்பிறகு, கடந்த ஆண்டு பாலிவுட் நடிகை சோபிதா துலிபாலாவை நாக சைதன்யா திருமண செய்து கொண்டார். நடிகை சோபிதா பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருப்பார். தற்போது அவர் நாகர்ஜூனா - அமலா தம்பதியின் மருமகள் ஆகிவிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.