/indian-express-tamil/media/media_files/2025/09/24/amazon-great-indian-festival-2025-09-24-13-30-31.jpg)
Amazon Great Indian Festival 2025: Top 5 laptops under Rs 50,000
/indian-express-tamil/media/media_files/2025/09/24/amazon-great-indian-festival-2025-1-2025-09-24-13-30-57.jpg)
விழாக்காலம் நெருங்கிவிட்டாலே, புதுமையான எலக்ட்ரானிக் கேஜெட்டுகளை வாங்க சரியான நேரம் என அனைவரும் எதிர்பார்த்திருப்பார்கள். அதற்கேற்றார் போல, அமேசான் தனது 'கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2025' விற்பனையைத் தொடங்கியுள்ளது. இந்த மெகா விற்பனையில், பலவிதமான கேஜெட்டுகளுக்கு அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, லேப்டாப்களைப் புதுப்பிக்கவோ அல்லது முதல் முறையாக வாங்கவோ திட்டமிட்டிருப்பவர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு. தினசரி வேலைகளான இணையத்தில் தேடுவது முதல், அலுவலக வேலைகளுக்கான எக்செல் ஷீட்களை கையாள்வது வரை, அனைத்துத் தேவைகளுக்கும் ஏற்ற சிறந்த லேப்டாப்களை ரூ.50,000-க்குள் பார்க்கலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/09/24/1672804078911-2025-09-24-13-31-13.jpg)
பல்வேறு லேப்டாப் மாடல்கள் சந்தையில் இருந்தாலும், உங்களின் தேவைக்கு எது பொருத்தமானது என்பதைத் தேர்ந்தெடுப்பது அவசியம். கடுமையான கேமிங் முதல் தினசரிப் பயன்பாடு வரை, ஒவ்வொரு தேவைக்கும் ஒரு லேப்டாப் உண்டு. உங்கள் பட்ஜெட்டிற்குள் ஒரு சிறப்பான லேப்டாப்பை வாங்க நினைத்தால், இதோ உங்களுக்கான டாப் 5 லேப்டாப்களின் பட்டியல்:
/indian-express-tamil/media/media_files/2025/09/24/dell-15-amd-ryzen-7-2025-09-24-13-32-16.jpg)
டெல் 15 AMD Ryzen 7:
இந்த லேப்டாப் சக்திவாய்ந்த AMD Ryzen 7-7730U ப்ராசஸரைக் கொண்டுள்ளது. இது 8 கோர்களைக் கொண்டது. 16GB DDR4 RAM மற்றும் 512GB SSD ஸ்டோரேஜ் இதில் உள்ளது. 15.6 இன்ச் Full HD திரை, 120Hz ரெப்ரெஷ் ரேட், மற்றும் ஆன்டி-கிளேர் பூச்சுடன் வருகிறது. மல்டி டாஸ்கிங்கிற்கு இது மிகவும் ஏற்றது. அமேசானில் இதன் விலை ₹46,990. வங்கி சலுகைகளுடன் இன்னும் குறைவான விலையில் கிடைக்க வாய்ப்புள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/09/24/acer-aspire-go-14-2025-09-24-13-32-45.jpg)
ஏசர் ஆஸ்பையர் கோ 14:
கச்சிதமான மற்றும் எடை குறைந்த இந்த லேப்டாப், இன்டெல் கோர் அல்ட்ரா 5 125H ப்ராசஸரை பயன்படுத்துகிறது. 16GB RAM மற்றும் 512GB ஸ்டோரேஜ் கொண்ட இதில், 14 இன்ச் திரை 1920x1200 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டுள்ளது. மாணவர்கள் மற்றும் ஆரம்பநிலை பயனர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும். அமேசானில் இதன் விலை ₹49,990 ஆகும்.
/indian-express-tamil/media/media_files/2025/09/24/hp-15-13th-gen-intel-core-i3-2025-09-24-13-33-17.jpg)
ஹெச்.பி 15, 13th ஜெனரேஷன் இன்டெல் கோர் ஐ3:
பட்ஜெட் விலையில் ஒரு நல்ல லேப்டாப் வேண்டும் என்றால், இது சரியான சாய்ஸ். 13வது ஜெனரேஷன் இன்டெல் கோர் ஐ3 ப்ராசஸர், 8GB RAM மற்றும் 512GB ஸ்டோரேஜ் இதில் உள்ளது. 15.6 இன்ச் Full HD ஆன்டி-கிளேர் திரையுடன் வருகிறது. இதன் விலை ₹33,990 மட்டுமே, வங்கி சலுகைகளுடன் இன்னும் மலிவாக வாங்கலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/09/24/lenova-2025-09-24-13-34-23.jpg)
லெனோவோ V15 AMD Ryzen 7:
AMD Ryzen 7 7730U ப்ராசஸர் கொண்ட இந்த லேப்டாப், 16GB DDR4 RAM மற்றும் 512GB SSD ஸ்டோரேஜுடன் வருகிறது. இதன் 15.6 இன்ச் Full HD திரை, கேமிங் உள்ளிட்ட பணிகளுக்கு சிறந்த அனுபவத்தைத் தருகிறது. இதன் விலை ₹44,480.
/indian-express-tamil/media/media_files/2025/09/24/download-2025-09-24-13-35-09.jpg)
ஆசஸ் விவோபுக் 16:
ஸ்னாப்டிராகன் X ப்ராசஸரில் இயங்கும் இந்த லேப்டாப், 16GB RAM மற்றும் 512GB SSD கொண்டது. இதன் 16 இன்ச் ஐபிஎஸ் திரை 60Hz ரெப்ரெஷ் ரேட் மற்றும் 300 நிட்ஸ் பிரைட்னஸுடன் உள்ளது. இதன் விலை ₹52,990 ஆக இருந்தாலும், வங்கி சலுகைகளுடன் ₹50,000-க்கும் குறைவான விலையில் கிடைக்கக்கூடும்.
/indian-express-tamil/media/media_files/2024/11/07/ilbElyCCcrIWKddapHVS.jpg)
இந்த ஐந்து லேப்டாப்களும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலில் நல்ல சலுகைகளுடன் கிடைக்கின்றன. உங்கள் தேவைகளையும், பட்ஜெட்டையும் பொறுத்து சரியான லேப்டாப்பை தேர்ந்தெடுத்து, இந்த விழாக்காலத்தை இன்னும் சிறப்பாக்குங்கள்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
 Follow Us