தீபாவளி பண்டிகை 31ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் நிலையில் பண்டிகையின் வரலாறு, கொண்டாத்தின் முக்கியத்துவம், கங்கா ஸ்நான நேரம், சிவபெருமானை வழிபடும் நேரம், வீட்டில் செல்வம் பெருகிட லட்சுமி குபேர பூஜை செய்யும் உள்ளிட்ட வழிபாட்டு முறைகளை விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த வருடம் தீபாவளி பூஜையை காலை 4 மணி முதல் காலை 6 மணிக்குள் நிறைவு செய்ய வேண்டும். தீபாவளி நாளில் பொழுது விடியும் முன்பாக பிரம்ம முகூர்த்த நேரத்தில் குளிப்பது மிகவும் நல்லது.
தலையில் நல்லெண்ணெய் வைத்து உடல் முழுக்க எண்ணெய் தேய்த்து குளித்து கங்கா ஸ்நான செய்வதால் தெய்வங்களின் அருள் எளிதில் கிடைக்கும்.
வீட்டின் பூஜை அறையில் படையல் போட்டு தீபாவளிக்கு தயாரித்த பலகாரங்களை வைத்து மண் விளக்குகளால் ஓம் வடிவம் உருவாக்கி அனைத்தையும் ஏற்றவும். 15 விளக்குகள் அல்லது 51 விளக்குகளை வைக்கவும்.
சிவபெருமானின் லிங்கம் இருந்தால் அபிஷேகம் செய்யுங்கள். இந்த நேரத்தில் மின் விளக்குகள் நிறுத்திவிட்டு அன்போடு இறைவனை வேண்டி வெளியே ஒருவரை பட்டாசு வெடிக்கச் சொல்லி தீபாவளி கொண்டாடவும். காலை 6 மணிக்குள் பூஜையை நிறைவு செய்யவும். தொழில் செய்யும் நபர்களுக்கு, நன்நாளிலும் தாமதமாக எழும் சோம்பேறிகளும் மற்றொரு நல்ல நேரத்தில் பூஜை செய்யலாம்.
தீபாவளி பூஜை நேரம் : காலை 8 மணி முதல் காலை 9.30 மணி வரை. வீட்டில் செல்வம் பெருகிட, மகிழ்ச்சி ததும்ப, நல்ல விஷயங்கள் அரங்கேற தீபாவளி நாளில் நேரம் பார்த்து லட்சுமி குபேர பூஜை செய்ய வேண்டும். தீபாவளிக்கு கறி எடுக்கும் பழக்கம் இருந்தால் லட்சுமி பூஜையை மறுநாள் கூட தொடரலாம். மாலை 4.29 மணிக்கு அமாவாசை தொடங்கி நவம்பர் 1ஆம் தேதி வரை அமாவாசை நீடிக்கிறது.
மகாலட்சுமி, குபேரர் படத்தை எடுத்துக் கொள்ளவும். குறைந்தது 9 முதல் 108 ஒரு ரூபாய் நாணயங்கள் வைத்து கொள்ளுங்கள். தாமரை மலர், அவல் கொண்டு செய்த பலகாரம் இருக்கட்டும். பலகை மீது கோலமிட்டு வடக்கு திசை பார்த்தபடி குபேரர் படத்தை வைத்திடுங்கள். குபேர யந்திரம் அருகில் இருக்கட்டும்.
இப்போது வினை தீர்க்கும் விநாயகர், குலதெய்வத்தை முதலில் வழிபடுங்கள். அடுத்ததாக மகாலட்சுமிக்கு மலர்களால் அர்ச்சனை செய்யுங்கள். நாணயங்களை ஒவ்வொன்றாக தாமரை இதழ்களில் எடுத்து மகாலட்சுமிக்கு முன் அடுக்கி மனமுகர்ந்து பிரார்த்தனை செய்து லட்சுமி மந்திரம் படிக்கவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.