/indian-express-tamil/media/media_files/2025/05/19/xmVJ1P69YgdGCHa1t1Lc.jpg)
/indian-express-tamil/media/media_files/cesSIDiE0KHCgKbP28SF.jpg)
றிப்பாக மஞ்சளாக இருக்கும் இனிப்பு பூசணியை விட வெள்ளை பூசணியில் நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் மிக அதிகம். மாவுச்சத்து இதில் கிடையாது. தினமும் வெறும் வயிற்றில் இந்த பூசணி ஜூஸ் குடிப்பதால் உடல் சுத்தமாகும். இன்னும் நிறைய நன்மைகள் இருக்கின்றன. அவற்றை பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்..
/indian-express-tamil/media/media_files/MND4MoMZkkPbAmnJbRsk.jpg)
வெள்ளை பூசணிக்காய் போன்ற முழுக்க முழுக்க நீர்ச்சத்து இருக்கிற காய்கறிகளை அனைவரும் விரும்பி சாப்பிடுவதில்லை. குறிப்பாக சில குழந்தைகள் இதை பக்கத்தில் கூட சேர்ப்பதில்லை. ஆனால் அதன் அற்புதமான நன்மைகள் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. நமது ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும் அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ள பூசணி குளிர்ச்சியான நீர்ச்சத்து பண்புகளை கொண்டுள்ளது.
/indian-express-tamil/media/media_files/omfTZ5oURr96DguczosQ.jpg)
தினமும் காலையில் வெறும் வயிற்றில் பூசணி ஜூஸ் குடிப்பது உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது. இருமல் மற்றும் சளி போன்ற மாறிவரும் காலநிலை நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான மருந்தாகவும் பூசணி பயன்படுத்தப்படுகிறது.
/indian-express-tamil/media/media_files/MbUORYm2MLcirL04pcac.jpg)
பூசணிக்காயில் கலோரிகள் மிக மிகக் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், கூடுதல் எடையை விரைவாகக் குறைக்க இந்த ஜூஸ் உதவுகிறது. இதில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால், நீண்ட நேரத்திற்கு பசியை தூண்டுவதில்லை. அதோடு உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி விரைவாக எடையைக் குறைக்க உதவி செய்கிறது.
/indian-express-tamil/media/media_files/mDDuXs14AsPJJ6I1jsvA.jpg)
அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சினைகளைச் சரிசெய்ய மிகச்சிறந்த தீர்வாக இந்த பூசணிக்காய் ஜூஸ் இருக்கிறது. வயிற்றுப் பகுதியில் உண்டாகும் கெட்ட பாக்டீரியாக்களை அழித்து, பிற நோய்களைத் தாக்கும் நல்ல பாக்டீரியாக்களையும் இந்த பூசணிக்காய் ஜூஸ் ஊக்குவித்து, குடலை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.
/indian-express-tamil/media/media_files/XowUZOrf215EfCg80Mmb.jpg)
இது கேன்சரை குணப்படுத்தும் தன்மை உடையது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இதை தினமும் அரைத்து சாறு எடுத்து கொஞ்சம் மிளகு அல்லது வெற்றிலை சேர்த்து குடித்து வந்தால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் இது நல்லது
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.