அந்தவகையில், நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்த பானங்களில் ஒன்றுதான் பூசணி ஜூஸ். தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த ஜூஸை குடிப்பதால் நிறைய நன்மைகள் உள்ளன. பூசணிக்காயில் அதிகளவு நீர்ச்சத்து உள்ளது. எனவே, இதன் ஜூஸ் நம் உடலில் உள்ள நச்சுகளை அகற்ற உதவுகிறது. மேலும் இது தாகத்தைத் தணிக்கிறது. சாம்பல் பூசணியில் தண்ணீர் அதிகம் உள்ளதால், இது உங்களை நீரிழப்புக்கு ஆளாவதைத் தடுக்கும். இதில் கலோரிகள் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், இதன் ஜூஸை குடித்து வந்தால், விரைவில் உடல் எடையை குறைக்கலாம்.