/indian-express-tamil/media/media_files/2025/05/31/evxli94s599MppHZRLjS.jpg)
/indian-express-tamil/media/media_files/aWOaIsgm7LoIFpr7EFC4.jpg)
10 அணிகள் பங்கேற்ற இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் இந்தத் தொடரில், லீக் சுற்றுப் போட்டிகள் கடந்த செவ்வாய்கிழமையுடன் முடிந்தது. இந்த சுற்று முடிவில் பஞ்சாப் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆஃப்' சுற்றுக்கு முன்னேறின.
/indian-express-tamil/media/media_files/2025/03/07/5ScjaiB4iB0pEqIASGsG.jpg)
இந்நிலையில், நேற்று முன்தினம் வியாழக்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றுப் போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி 4-வது முறையாக பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. தோல்வியடைந்த பஞ்சாப் அணி 2-வது தகுதி சுற்றில் எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெற்ற அணியுடன் மோதும்.
/indian-express-tamil/media/media_files/2025/05/31/YpYWpZ8PpOp15w6GNhsd.jpg)
இந்த நிலையில், பஞ்சாப் மாநிலம் முல்லான்பூரில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணிக்கு தொடங்கி நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் 3-வது இடம் பிடித்த குஜராத் டைட்டன்ஸ் 4-வது இடம் பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற மும்பை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
/indian-express-tamil/media/media_files/2025/05/31/QTB0DBwom8jEuHp3sJr6.jpg)
இதைனைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவரில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 228 ரன்கள் குவித்தது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 81 ரன்கள் எடுத்தார். குஜராத் தரப்பில் பிரசித் கிருஷ்ணா, சாய் கிஷோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
/indian-express-tamil/media/media_files/2025/05/31/SSjFBnbB1ajbNYiQ6niy.jpg)
தொடர்ந்து, 229 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 208 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 20 ரன் வித்தியாசத்தில் மும்பை அசத்தல் வெற்றி பெற்றது. குஜராத் தரப்பில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 80 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான தகுதி சுற்று 2-க்கு முன்னேறியது. தோல்வி கண்ட குஜராத் தொடரில் இருந்து வெளியேறியது.
/indian-express-tamil/media/media_files/2025/05/31/evxli94s599MppHZRLjS.jpg)
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் குஜராத் அணி தோல்வி கண்டதால் அந்த அணியின் ரசிகர்கள் மனமுடைந்தனர். கேப்டன் சுப்மன் கில், பாயியிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா உள்ளிட்டோர் கண்ணீர் வடித்த காட்சிகள் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.