/indian-express-tamil/media/media_files/2024/11/09/wZIGdW6RUpUW15B1uV6K.jpg)
/indian-express-tamil/media/media_files/2024/10/19/HyrJiV6qkY48b167xuyI.jpg)
சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, காலை உணவை மிஸ் செய்யாமல் வழக்கமான அடிப்படையில் எடுத்து கொள்வது நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். வேலை, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்ல வேண்டிய பரபரப்பான காலை நேரத்தில் பலரும் சாப்பிடாமல் காலை உணவைத் தவிர்க்கிறார்கள், இது உடலுக்கு குறிப்பிடத்தக்க தீங்கு விளைவிக்கும் என்பதை பலரும் புரிந்து கொள்வதில்லை.
/indian-express-tamil/media/media_files/wpN17JO5BXIEgdOuczL3.jpg)
நீங்களும் இவர்களில் ஒருவர் என்றால் காலை உணவு ஏன் மிகவும் அவசியம் என்பதை பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள். டெல்லியில் உள்ள கைலாஷ் தீபக் மருத்துவமனையின் மூத்த உணவியல் நிபுணர் ரிச்சா சர்மா பேசுகையில் பொதுவாக நாம் இரவு உணவை சாப்பிட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு தூங்க செல்கிறோம். இதனை தொடர்ந்து சுமார் 7 முதல் 8 மணி நேரங்கள் தொடர்ச்சியாக உணவு எதுவும் சாப்பிடாமல் இருக்கிறோம்.
/indian-express-tamil/media/media_files/SkObkF7erjyKxYmahNEX.jpg)
இவ்வளவு மணி நேரங்கள் எதுவும் சாப்பிடாமல் இருப்பது கிட்டத்தட்ட ஒருவகையான விரதத்தை போன்றது. இந்த விரதத்தை ஆரோக்கியமான காலை உணவு மூலம் முடிக்க வேண்டும். மேலும் காலை நேரத்தில் உணவை உட்கொள்வது அந்த நாளுக்கு போதுமான ஆற்றலை அளித்து வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதால் குறிப்பிட்ட நாளின் மிக முக்கியமான உணவாக காலை உணவு கருதப்படுகிறது.
/indian-express-tamil/media/media_files/8YTarS1yDxNRwGr4i27E.jpg)
தொடர்ச்சியாக தினமும் காலை உணவைத் தவிர்ப்பது ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்பட வழிவகுக்கும், இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். நீங்கள் காலை நேரத்தில் லைட்டான உணவை சாப்பிட விரும்பினாலும், அது ஊட்டச்சத்து நிறைந்ததாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
/indian-express-tamil/media/media_files/2025/04/15/G18qxQfkDTKLlHReBpfL.jpg)
காலை உணவை சாப்பிடாமல் தவிர்ப்பது ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும், குறிப்பாக நீங்கள் காலை உணவையும் சாப்பிடாமல், மதிய உணவையும் தாமதமாக சாப்பிட்டால். எனவே காலை நேரத்தில் ஆரோக்கியமான உணவுடன் நாளை தொடங்குவது நீரிழிவு மற்றும் தொடர்புடைய சிக்கல்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கிறது.
/indian-express-tamil/media/media_files/2024/10/19/MQgw60cIEWvzI0uY3RYa.jpg)
காலை நேரத்தில் உணவை சாப்பிடாமல் இருப்பது உங்கள் எடை இழப்பு முயற்சிக்கு இடையூறாக இருக்கலாம். அதே போல் உங்கள் முயற்சிக்கு மாறாக எடை அதிகரிக்கும் அபாயத்தை காலை உணவை தவிர்க்கும் பழக்கம் அதிகரிக்கும், ஏனெனில் நீங்கள் மதிய நேரம் வழக்கத்திற்கு மாறாக அதிக உணவை சாப்பிட வாய்ப்புள்ளது.
/indian-express-tamil/media/media_files/QDZ0myyWylrT2LQ0EEMF.jpg)
மொத்தத்தில் உங்கள் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை பராமரிக்க சத்தான காலை உணவோடு நாளைத் தொடங்குவது அவசியம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.