/indian-express-tamil/media/media_files/2025/06/20/banita-sandhu-actress-body-shamed-in-her-first-tamil-film-tamil-news-2025-06-20-17-48-54.jpg)
சினிமாவில் உருவ கேலி என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும் சூழலில், ஆதித்ய வர்மா படத்தில் நடித்தபோது தன்னை உருவ கேலி செய்ததாக பனிதா சந்து கூறியிருக்கிறார்.
/indian-express-tamil/media/media_files/2025/06/20/banita-sandhu-actress-body-shamed-in-her-first-tamil-film-tamil-news-2025-06-20-17-58-59.jpg)
இங்கிலாந்தின் லண்டனில் வசிக்கும் இந்திய வம்சாவழி குடும்பத்தைச் சேர்ந்தவர் பனிதா சந்து. சிறு வயதில் இருந்தே மாடலிங் துறையில் தீவிர கவனம் செலுத்தி வந்த இவர், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்துள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2025/06/20/banita-sandhu-actress-body-shamed-in-her-first-tamil-film-tamil-news-2025-06-20-18-00-22.jpg)
டபுல்மிண்ட் தயாரித்த 'ஏக் அஜினபி' என்ற மீயுஸிக் வீடியோவில் நடிகை பனிதா சந்துக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் மிகவும் பிரபலமடைந்த இவர், 2016-ல் ஃபாக்ஸ் விளம்பரத்தில் நடித்தார்.
/indian-express-tamil/media/media_files/2025/06/20/banita-sandhu-actress-body-shamed-in-her-first-tamil-film-tamil-news-2025-06-20-18-02-29.jpg)
நடிகை பனிதா கரியரில் திருப்புமுனையாக, 2017-ல் வருண் தவானின் படமான 'அக்டோபர்' படத்தில் நடித்தார். இப்படத்தில் பனிதா சந்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து, துருவ் விக்ரம் நடித்த ‘ஆதித்ய வர்மா’ படம் மூலம் பனிதா சந்து தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார். இந்தப் படம் பெரிய அளவில் பேசப்படாத நிலையில், ஆதித்ய வர்மா படத்துக்கு பிறகு வேறு எந்த தமிழ் படத்திலும் அவர் நடிக்கவில்லை.
/indian-express-tamil/media/media_files/2025/06/20/banita-sandhu-actress-body-shamed-in-her-first-tamil-film-tamil-news-2025-06-20-18-03-19.jpg)
சினிமாவில் உருவ கேலி என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும் சூழலில், ஆதித்ய வர்மா படத்தில் நடித்தபோது தன்னை உருவ கேலி செய்ததாக பனிதா சந்து கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "நான் ஒரு தென்னிந்திய படத்தில் நடித்தபோது, என தோற்றத்திற்காக உருவ கேலி செய்யப்பட்டேன். நான் ஒரு மரக்கிளை போல இருந்ததால் மக்கள் என்னை அசிங்கமாக அழைத்தது எனக்கு நினைவிருக்கிறது. நான் மிகவும் ஒல்லியாக இருந்தநிலையில், அந்த சக நடிகர் எப்படி என்னைப் பார்த்து ஈர்க்கப்பட்டார் என்று எனக்கு தெரியவில்லை.
/indian-express-tamil/media/media_files/2025/06/20/banita-sandhu-actress-body-shamed-in-her-first-tamil-film-tamil-news-2025-06-20-18-03-48.jpg)
நான் உருவ கேலியை அப்போதுதான் முதல் முறை அனுபவித்தேன். ஆனால் அதே நேரத்தில், இது மிகவும் விசித்திரமாக இருந்தது, இது கிட்டத்தட்ட ஒரு உருவகப்படுத்துதல் போல உணர்ந்தேன், ஏனென்றால் அது ஆன்லைனில் நடக்கிறது. அதை எப்படி விளக்குவது என்று எனக்குத் தெரியவில்லை. அது நான் வளராத ஒரு கலாச்சாரத்திலிருந்து வந்திருக்கிறது. எனவே நான் உருவ கேலி பற்றி அவ்வளவு கோபப்படவில்லை அல்லது விமர்சிக்கவும் இல்லை. நான், ஓ, சரி, இந்தப் பகுதியில் அழகுத் தரம் நான் எப்படி இருக்கிறேன் என்பதிலிருந்து வேறுபட்டது என்று நினைத்தேன்.
/indian-express-tamil/media/media_files/2025/06/20/banita-sandhu-actress-body-shamed-in-her-first-tamil-film-tamil-news-2025-06-20-18-04-14.jpg)
நான் அதை அப்படித்தான் எடுத்துக்கொண்டேன். நான் அதை மனதில் கொள்ளவில்லை. அப்போது, நான் இன்னும் எடை போட வேண்டும் என்று மட்டுமே நினைத்தேன். நான் இயல்பாகவே மிகவும் ஒல்லியாக இருப்பதால், படப்பிடிப்பு தளத்தில் அதிகம் சாப்பிடுகிறேன் என்று, நான் வேலை செய்த எந்த தயாரிப்பாளரிடமும் நீங்கள் கேட்கலாம். அதனால், இதுபோன்ற ஒன்றை நான் முதன்முறையாக அனுபவித்தது போல் இது இல்லை. ஆனால், ஆன்லைனில் எதையும் நீங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள முடியாது என்று நான் நினைக்கிறேன்." என்று பனிதா சந்து கூறியுள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2025/06/20/banita-sandhu-actress-body-shamed-in-her-first-tamil-film-tamil-news-2025-06-20-18-05-37.jpg)
நடிகை பனிதா சந்து, தற்போது அமெரிக்க தொடர்களான பண்டோரா மற்றும் பிரிட்ஜெர்டன் ஆகியவற்றில் நடித்து வருகிறார். அடுத்து நடிகர் தில்ஜித் டோசன்ஜ் நடிக்கும் மர்ம நகைச்சுவைத் திரைப்படமான டிடெக்டிவ் ஷெர்டில் படத்தில் நடிக்கிறார், இது ஜூன் 20 அன்று ஜி5 இல் வெளியாக உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.