/indian-express-tamil/media/media_files/2025/08/23/screenshot-2025-08-23-182909-2025-08-23-18-30-04.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/04/07/bzu9YIL92kd6XgjnkQtQ.jpg)
இது சிறுநீரக ஆரோக்கியம், குடல் நலம் மற்றும் உடல் எடையை கட்டுப்படுத்துவதற்கும் சிறந்தது. பார்லி தனியாகவும், காய்கறிகளுடன் சேர்த்தும் சூப்பராகவும் காஞ்சியாகவும் சமைக்க முடியும். இதை எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.
/indian-express-tamil/media/media_files/2025/01/01/d9jIA67DI9HmIJnn2Fc0.jpg)
தேவையான பொருட்கள்
பார்லி – ½ கப், வெங்காயம் – 1 (நறுக்கியது), தக்காளி – 1 (நறுக்கியது), கேரட் – 1 (சிறு துண்டுகளாக நறுக்கியது), பீன்ஸ் – 5 (நறுக்கவும்), பட்டாணி – 2 மேசைக்கரண்டி (விருப்பப்படி), இஞ்சி பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி, மிளகு – ½ மேசைக்கரண்டி (தர்பரமாக இடித்து), கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – 1 மேசைக்கரண்டி, தாளிக்க – கடுகு, சீரகம், கறிவேப்பிலை.
/indian-express-tamil/media/media_files/2025/08/23/screenshot-2025-08-23-182915-2025-08-23-18-30-32.png)
பார்லியை நன்றாக கழுவி, 4–5 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு சிறிது உப்பு, 2.5 கப் தண்ணீர் சேர்த்து 3 விசில் வரை குக்கரில் வேக வைக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/08/23/screenshot-2025-08-23-182922-2025-08-23-18-30-32.png)
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும். பிறகு இஞ்சி-பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/08/23/screenshot-2025-08-23-182928-2025-08-23-18-30-32.png)
அதன் பின் கேரட், பீன்ஸ், பட்டாணி சேர்த்து சற்று வதக்கி, மூடி வைத்து 5 நிமிடங்கள் வேகவைக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/08/23/screenshot-2025-08-23-182934-2025-08-23-18-30-32.png)
இப்போது வேகவைத்த பார்லியை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
/indian-express-tamil/media/media_files/2025/08/23/screenshot-2025-08-23-182945-2025-08-23-18-30-32.png)
இறுதியில் மிளகு தூள், கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/08/23/screenshot-2025-08-23-182909-2025-08-23-18-30-04.jpg)
சூடாக இருக்கும்போது குடிக்கவும். எளிதான காலை உணவாகவும், இரவு நேர டயட் உணவாகவும் பரிமாறலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.