/indian-express-tamil/media/media_files/2025/04/15/xq5odqexBF36EOJcyh5C.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/06/08/nIQMADPwuUyzK4gzqx0f.jpg)
உங்க பாத்ரூம் அழுக்கு மற்றும் உப்புக்கறையால் மங்கிப்போய் இருக்கிறதா? கடைகளில் விற்கும் கெமிக்கல் கிளீனர் கொண்டு சுத்தம் செய்தும் பலன் இல்லையா? இனி உப்புக்கறை படிந்த தரையை சுத்தம் செய்ய மணிக்கணக்கில் மெனக்கெட வேண்டாம்.
/indian-express-tamil/media/media_files/2025/04/15/xq5odqexBF36EOJcyh5C.jpg)
இந்த எளிய பொடியை தூவி விடுவதன் மூலம் நிமிடங்களில் உங்கள் குளியலறையை மின்ன வைத்து விடலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/03/22/Y1Jsxcl04K7rKngsa57g.jpg)
தேவையான பொருட்கள்
டூத் பேஸ்ட்: நீங்கள் பயன்படுத்தும் எந்தவொரு பற்பசையும். எலுமிச்சை: அரை எலுமிச்சை அல்லது 2 ஸ்பூன் வினிகர். பேக்கிங் சோடா: அரை ஸ்பூன். கோலப்பொடி: அரை கப், நன்கு சலித்தது. சலவை சோடா: மூன்று ஸ்பூன். துணி சோப்பு தூள்: மூன்று ஸ்பூன் (நீங்கள் பயன்படுத்தும் எந்த பிராண்டிலும்).
/indian-express-tamil/media/media_files/2025/06/14/4dB3VGLH6KOPhmj5IePp.jpg)
ஒரு சிறிய தட்டில், சிறிது பற்பசை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் மேல் அரை எலுமிச்சைப் பழத்தின் சாற்றைப் பிழியவும். எலுமிச்சை இல்லை என்றால், இரண்டு ஸ்பூன் வினிகர் சேர்க்கலாம். இத்துடன் அரை ஸ்பூன் சமையல் சோடா சேர்த்து, ஒரு கரண்டியால் நன்கு கலக்கவும். சமையல் சோடா சேர்ப்பதால் நன்கு பொங்கி வரும். பேஸ்ட், எலுமிச்சை சாறு மற்றும் சமையல் சோடா நன்கு கலக்கும் வரை கிளறவும். இந்த கலவையை தனியே எடுத்து வைக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/05/19/qWtamhV3hFBqx8auIBUj.jpg)
மற்றொரு தட்டில், அரை கப் சலித்த கோலப்பொடியை எடுத்துக்கொள்ளவும். கோலப்பொடி கட்டிகள் இல்லாமல், மாவு போல இருக்க வேண்டும். இத்துடன் மூன்று ஸ்பூன் சமையல் சோடா மற்றும் மூன்று ஸ்பூன் துணி சோப்பு தூள் சேர்த்து, இந்த மூன்றையும் நன்கு கலக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/05/27/DgJsxwoWqRRkdo6QnGsK.jpg)
நாம் தயார் செய்த பவுடர் கலவையை, பாத்ரூம் தரையில் உள்ள டைல்ஸ் மீது தூவவும். கோலப்பொடி பயன்படுத்துவதால் பைப் அடைத்துக்கொள்ளும் என்று பயப்பட வேண்டாம், ஏனெனில் நாம் அதை நன்கு சலித்துள்ளோம். பவுடரைத் தூவிய பிறகு, சிறிது தண்ணீர் தெளித்து, ஸ்க்ரப்பர் கொண்டு தேய்க்கவும். சோப்பு தூள் நுரை வர உதவும், சமையல் சோடா கெட்ட வாசனையைப் போக்கி கறைகளை நீக்கும். கோலப்பொடி கறைகளை நீக்க உதவும். நன்கு தேய்த்த பிறகு, தண்ணீர் ஊற்றினால் உங்கள் பாத்ரூம் கண்ணாடி போல பளபளக்கும்!
/indian-express-tamil/media/media_files/2024/12/11/CsztfjxoySNwGxGpIn1i.jpg)
சுவர் டைல்ஸ்களில், குறிப்பாக தண்ணீர் படும் இடங்களில் உப்புக்கரை படிந்திருக்கும். நாம் தயார் செய்த பவுடர் கலவையை ஒரு ஸ்க்ரப்பரில் தொட்டு, கறைகள் உள்ள இடங்களில் தேய்க்கவும். அதிக அழுத்தம் கொடுக்கத் தேவையில்லை. தேய்த்த பிறகு, தண்ணீர் ஊற்றிப் பாருங்கள், கறைகள் நீங்கி டைல்ஸ் சுத்தமாக இருக்கும்.
/indian-express-tamil/media/media_files/2025/05/02/uv9OMgMbDEIiH7UaZiLf.jpg)
குழாய்களில் படிந்திருக்கும் கடினமான உப்புக்கறைகளை நீக்க, நாம் முதலில் தயார் செய்த பேஸ்ட், எலுமிச்சை சாறு, சமையல் சோடா கலவையை ஒரு ஸ்க்ரப்பரில் தொட்டு, குழாய்களில் தேய்க்கவும். தேய்த்தவுடன், தண்ணீர் ஊற்றிப் பாருங்கள். குழாய்கள் புதிது போல பளபளக்கும். கிச்சன் குழாய்களையும் இதே முறையில் சுத்தம் செய்யலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.