/indian-express-tamil/media/media_files/2025/04/26/gdMt9UOxivKOG8ZZlmED.jpg)
Useful Life hacks
/indian-express-tamil/media/media_files/2025/01/08/finKoN8QPPRHzfZv7Cqr.jpg)
நம்ம என்னதான் தினமும் வீடு சுத்தம் பண்ணாலும் சில விஷயங்களை நம்மளால எப்போவும் சரி பண்ணமுடியாது. சாயங்கலாம் ஆனா கொசு வரும், பாத்ரூம்ல தண்ணி போற இடத்துல பூரான், கராப்பான் பூச்சி வரும். வீடு எவ்வளவு துடைச்சாலும் துடைச்ச மாதிரியே இருக்காது. இந்த மாதிரி பிரச்னைக்கு எல்லாம் உடனடி தீர்வு இங்க இருக்கு.
/tamil-ie/media/media_files/uploads/2022/11/mosquitoes-parenting-1200.jpg)
ஹோம்மேட் கொசுவர்த்தி
ஒரு பழைய பீங்கான் கப்-ல கொஞ்சமா வேப்ப இலை, ஒரு துண்டு கற்பூறம், ஒரு கம்யூட்டர் சாம்பிராணி, ஒரு பிரிஞ்சு இலை எடுத்துக்கோங்க. பிரிஞ்சு இலைய லேசா பத்தவச்சு இதை டம்ளர்ல போட்டு வைக்கும் போது இந்த வாசனைக்கு கொசு தொல்லை இருக்காது.
/tamil-ie/media/media_files/uploads/2022/11/toilet.jpg)
பாத்ரூம்ல பூரான், கராப்பான் பூச்சி வராமா இருக்க
பாத்ரூம் ஃபில்டர் இருக்கிற இடத்துல பூரான், கரப்பான் பூச்சி அடிக்கடி வரும். ஃபில்டர் மேல ஒரு சின்ன கற்பூரத்தை போட்டு வச்சா, அந்த வாசனைக்கு பூச்சிகள் எதுவும் வராது. சிங்க், வாஷ் பேஸின்ல, ஹோல்ஸ் இருக்கிற இடத்துல கற்பூரம் போட்டு வச்சுக்கலாம். நீங்க தண்ணீர் ஊத்த ஊத்த அந்த வாசனைக்கு பூரான், கராப்பான் பூச்சி எல்லாம் ஓடியே போயிரும்.
/indian-express-tamil/media/media_files/2025/04/23/o1zGWhsoxj4EiQayk9Hj.jpg)
ஒயிட் கலர் டைல்ஸ் கூட பளிச்சுனு ஆக
வீடு நல்ல சுத்தமா பெருக்கிட்டு, சாதரண தண்ணீர் வச்சு துடைச்சு எடுத்துக்கோங்க. இப்போ ஒரு சின்ன பக்கெட்ல பாதியளவு வெதுவெதுப்பான தண்ணீர் எடுத்துக்கோங்க. இதுல கால் டீஸ்பூன் மஞ்சள் பொடி, ஒரு கைப்பிடி அளவு வேப்பிலை, அரை டீஸ்பூன் பேக்கிங் சோடா, அரை எலுமிச்சை பழம், அரை மூடி அளவு டெட்டால், பச்சை கற்பூரம் சேர்த்துக்கோங்க. இது எல்லாம் சேர்த்து வீடு துடைங்க. ஒயிட் கலர் டைல்ஸ்ல இதை துடைக்கும்போது எல்லா கறையும் நீங்கி நல்ல பளிச்சுன்னு , நாள் முழுக்க வாசனையா இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.