/indian-express-tamil/media/media_files/2025/07/23/screenshot-2025-07-23-104245-2025-07-23-10-43-15.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/07/23/screenshot-2025-07-23-104155-2025-07-23-10-43-37.png)
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் - 1 (நடுத்தர அளவு), தக்காளி - 2, புளி - சிறிய நெல்லிக்காய் அளவு, மிளகு - 1 டீஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பூண்டு - 4-5 பல், கறிவேப்பிலை - சிறிது, எண்ணெய் - 1 டீஸ்பூன், கடுகு - 1/2 டீஸ்பூன், பெருங்காயம் - ஒரு சிட்டிகை, கொத்தமல்லி தழை - சிறிது, உப்பு - தேவையான அளவு.
/indian-express-tamil/media/media_files/2025/07/23/screenshot-2025-07-23-104203-2025-07-23-10-43-37.png)
பீட்ரூட் மற்றும் தக்காளியை நன்றாக கழுவி சிறு துண்டுகளாக நறுக்கவும். நறுக்கிய பீட்ரூட், தக்காளி, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டு ஆகியவற்றை மிக்சியில் போட்டு விழுதாக அரைக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/23/screenshot-2025-07-23-104212-2025-07-23-10-43-37.png)
புளியை சுடு தண்ணீரில் ஊறவைத்து கரைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/23/screenshot-2025-07-23-104219-2025-07-23-10-43-37.png)
அரைத்த விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/23/screenshot-2025-07-23-104226-2025-07-23-10-43-37.png)
புளி கரைசலை ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/23/screenshot-2025-07-23-104234-2025-07-23-10-43-37.png)
நன்றாக கொதி வந்ததும் மல்லித்தழை தூவி இறக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/23/screenshot-2025-07-23-104245-2025-07-23-10-43-15.jpg)
சுவையான பீட்ரூட் ரசம் தயார்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.