/indian-express-tamil/media/media_files/2025/07/26/screenshot-2025-07-26-092008-1-2025-07-26-09-21-46.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/07/26/screenshot-2025-07-26-092014-2025-07-26-09-22-06.png)
தேவையான பொருட்கள்
ஜவ்வரிசி – 2 மேசைக் கரண்டி ரோஸ் சிரப் – 2 மேசைக் கரண்டி பால் – 2 கப் சேமியா – 1/4 கப் சப்ஜா விதைகள் – 1 மேசைக் கரண்டி (ஊறவைத்து) ஐஸ்கிரீம் – 1 ஸ்கூப் (வெணிலா அல்லது பிஸ்தா) சாக்லேட் சிரப் அல்லது டுட்டி ஃப்ரூட்டி – விருப்பப்படி சர்க்கரை – தேவையான அளவு
/indian-express-tamil/media/media_files/2025/07/26/screenshot-2025-07-26-092019-2025-07-26-09-22-06.png)
முதலில் சப்ஜா விதைகள் 1 மேசைக் கரண்டி எடுத்துக்கொண்டு 10 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/26/screenshot-2025-07-26-092027-2025-07-26-09-22-06.png)
அடுத்ததாக சேமியாவை சுடு தண்ணீரில் வேக வைத்து, குளிர்ந்ததும் தண்ணீர் வடிக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/26/screenshot-2025-07-26-092037-2025-07-26-09-22-06.png)
அடுத்ததாக ஜவ்வரிசியை சிறிது நீரில் வேக வைத்து, அது வெந்ததும் நீரைக் வடித்து வைத்துக் கொள்ளவும். பாலில் சர்க்கரை சேர்த்து நன்றாக காய்த்து, அதை குளிரவைக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/26/screenshot-2025-07-26-092051-2025-07-26-09-22-06.png)
ஒரு நீளமான கண்ணாடி கப்பில் முதலில், ரோஸ் சிரப் சேர்க்கவும். பிறகு அதற்குமேல் சேமியா, ஜவ்வரிசி மற்றும் சப்ஜா விதைகளை ஒன்றுக்கொன்று மேலாக அடுக்கவும். அதன் மேல் குளிர்ந்த பாலை ஊற்றவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/26/screenshot-2025-07-26-092101-2025-07-26-09-22-06.png)
ஐஸ்கிரீம் கடைசியில் ஒரு ஸ்கூப் சேர்க்கவும். மேலாக சாக்லேட் சிரப், டுட்டி ஃப்ரூட்டி அல்லது நறுக்கிய முந்திரி சேர்த்தால் ருசி மேலும் அதிகரிக்கும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/26/screenshot-2025-07-26-092107-2025-07-26-09-22-06.png)
அவ்வளவு தான்... உங்கள் சுவையான ஃபலூடா தயார்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.