/indian-express-tamil/media/media_files/2024/12/04/9QM7weRytCjcvmCWkanj.jpg)
/indian-express-tamil/media/media_files/f0dtExfZK78DXFQZMXac.jpg)
ஆனால், சில எளிய வீட்டுப் பயன்பாட்டு பொருட்களைப் பயன்படுத்தி இந்தப் பூச்சிகளை எளிதில் நீக்க முடியும். இந்த 'சரியான' கலவையை செடிகளுக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிகளுக்கு மீது தெளித்தால், அவை விரைந்து மறையும். இதற்காக ஒரு பைசாவும் செலவாகத் தேவையில்லை.
/indian-express-tamil/media/media_files/2025/06/01/QgIYqnsWNSWhiqZ9cfO8.jpg)
சிறிதளவு பாத்திரம் கழுவும் திரவத்தை எடுத்து, தூய நீரில் கலந்து கொள்ளவும். இது சமையலறையில் பாத்திரங்கள் கழுவ பயன்படுத்தப்படும் மென்மையான திரவம் என்பதால், செடிகளுக்கு பெரிதாக தீங்கு ஏற்படுத்தாது.
/indian-express-tamil/media/media_files/kubcyRc4U4HDvLYgnFjj.jpg)
தண்ணீரில் கலந்த திரவத்தை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றவும். இதனை செடிகளின் மீது சிறிது சிறிதாக தெளிக்கவும். ஒரு வாரம் இப்படிச் செய்தால் பூச்சிகள் வராமல் தடுக்கப்படும்.
/indian-express-tamil/media/media_files/NUWx3T8Gli6y0L6ez824.jpg)
சமையல் எண்ணையை பூச்சிகளை விரட்ட பயன்படுத்தலாம். எண்ணெய் இருப்பதால் பூச்சிகள் வராது, அதையும் தாண்டி வந்தால், அவை எண்ணெயில் ஒட்டிக்கொள்ளும்.
/indian-express-tamil/media/media_files/2025/08/04/istockphoto-2200408379-612x612-2025-08-04-17-23-44.jpg)
சிவப்பு மிளகாய் தூளை வாரத்திற்கு 4 முறை தடவினால் செடிகளுக்கு சேதம் விளைவிக்கும் பூச்சிகள் வராமல் தடுக்கப்படும். தண்ணீரில் சிறிது மிளகாய் தூளை நன்கு கலக்கவும். பின்னர் இந்த கரைசலை செடிகளின் மீது தெளிக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/05/02/p7IVQH2RPfkyY8yYukIP.jpg)
வெந்நீரில் வினிகரைக் கலந்து, சிறிது பாத்திரம் கழுவும் லிக்யூட் அல்லது பாத்திரம் கழுவும் சோப்பு சேர்த்து நன்கு கலக்கவும். இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பி, காலை மற்றும் மாலை என ஒரு நாளைக்கு இரண்டு முறை தெளிக்கவும். இது பூச்சிகளை உடனடியாகக் கொல்லும்.
/indian-express-tamil/media/media_files/12VIRS0RXDb6uIpZgi3i.jpg)
6 முதல் 7 பூண்டு பற்களை எடுத்து, அவற்றை ஒரு பேஸ்டாக ஆக்குங்கள். பின்னர், ஒரு கிளாஸ் தண்ணீரில் பாத்திரங்களைக் கழுவும் லிக்யூட் சேர்த்து, இந்தப் பூண்டு பேஸ்டை நன்கு கலக்கவும். பின்னர் செடிகளின் மீது தெளிக்கவும். பூண்டை பேஸ்டாக மாற்ற வேண்டும். இல்லையெனில், நீங்கள் அதை சரியாக தெளிக்க முடியாது. இந்த கலவை பூச்சிகளை விரைவாக விரட்டும்.
/indian-express-tamil/media/media_files/2025/04/09/yhdlTRjjc6BD2BMNgMs5.jpg)
வேப்ப எண்ணெயில் கிருமி நாசினிகள் உள்ளன. அதன் வாசனை பூச்சிகளை விரட்ட உதவுகிறது. சோப்பு நீரில் சிறிது வேப்ப எண்ணெயைக் கலந்து செடிகளின் மீது தெளிக்கவும். ஒரே இரவில் பலன் கிடைக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.