/indian-express-tamil/media/media_files/2025/08/23/istockphoto-1407172002-612x612-1-2025-08-23-19-00-50.jpg)
நம் வீட்டில் ஒரு பண்டிகை என்றால் நாம் அனைவரும் முதலில் யோசிக்கும் ஒரு உணவு என்றால் அது பிரியாணி தான். அதை மிக எளிமையாக, குக்கர் இல்லாமல் சமைக்கக்கூடிய ஒரு சிம்பிள் மட்டன் பிரியாணி ரெசிபி பற்றி பார்க்கலாம்.
இது உங்கள் வீட்டு சமையலறையில் சாதாரண பாத்திரத்தில் நேர்த்தியாக செய்யக்கூடிய ஹோட்டல் ஸ்டைல் மட்டன் பிரியாணி தான். அதை எப்படி செய்யலாம் என்று விரிவாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
மட்டனுக்காக:
மட்டன் – ½ கிலோ,
தயிர் – ½ கப்,
மஞ்சள்தூள் – ½ டீஸ்பூன்,
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்,
இஞ்சி பூண்டு விழுது – 1 ½ மேசைக்கரண்டி,
உப்பு – தேவைக்கு ஏற்ப.
பிரியாணிக்காக:
பாஸ்மதி அரிசி – 2 கப் (30 நிமிடம் ஊற வைத்தது)
வெங்காயம் – 2 (நறுக்கியது)
தக்காளி – 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2 (நீளமாக கிழிக்கவும்)
புதினா – 1 கைப்பிடி
கொத்தமல்லி – 1 கைப்பிடி
இஞ்சி பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி
கிராம்பு – 3
ஏலக்காய் – 2
பட்டை – 1 துண்டு
சீரகம் – ¼ டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு ஏற்ப
எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
நெய் – 1 மேசைக்கரண்டி
தண்ணீர் – 3 ½ கப் (2 கப் அரிசிக்கே)
செய்முறை:
மட்டனுடன் தயிர், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்றாக கிளறி குறைந்தது 30 நிமிடம் ஊறவைக்கவும்.
அடுத்ததாக ஒரு தடித்த அடிப் பாத்திரம் எடுத்து, எண்ணெய் + நெய் சேர்த்து காயவிடவும். பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம் சேர்த்து தாளிக்கவும். வெங்காயம் சேர்த்து நன்கு வெந்து தங்கமணி நிறமாகும் வரை வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும். தக்காளி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும். மெரினேட் செய்த மட்டன் சேர்த்து 10–15 நிமிடம் நல்லா வதக்கவும் (மட்டன் பாதி வெந்திருக்க வேண்டும்).
இப்போது புதினா, கொத்தமல்லி சேர்த்து கிளறவும். நன்கு கழுவிய, ஊற வைத்த பாஸ்மதி அரிசி சேர்த்து மெதுவாக கிளறவும். 3½ கப் கொதிக்கும் தண்ணீர் சேர்க்கவும். தேவையான உப்பை சோந்துபார்த்து சேர்த்து கிளறவும்.
பாத்திரத்தை மூடியால் மூடவும். அதன் மேலே ஒரு குறைந்த தீயில் வைத்து, ஏதாவது கம்பளம்/துணி வைத்து, அதன் மேல் தக்கபடி தட்டில் ஒரு எடை வைத்துக் கொள்ளலாம். அல்லது மூடியை அட்டையால்/கட்டிகை வைத்து சீல் செய்து விடலாம்.
15–20 நிமிடங்கள் மெதுவான தீயில் வேகவிடவும். 20 நிமிடங்கள் கழித்து, சோறு வெந்துவிட்டதா என்று பாருங்கள். வெந்துவிட்டால், மூடியை திறந்து, 5 நிமிடங்கள் அப்படியே விடவும்.
அவ்வளவு தான்... குழையாத, அடி பிடிக்காத பிரியாணி தயார். இதை வெங்காய ரய்தா, முட்டை மற்றும் வெஜிடபிள் சால்னா / கிரேவியுடன் பரிமாறவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.