/indian-express-tamil/media/media_files/2025/07/22/screenshot-2025-07-22-155849-2025-07-22-16-00-07.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/07/22/screenshot-2025-07-22-155854-2025-07-22-16-00-28.png)
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 2 (நடுத்தர அளவு), எண்ணெய் - 2 தேக்கரண்டி, கடுகு - 1/2 தேக்கரண்டி, உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் - 2 (நறுக்கியது), கறிவேப்பிலை - 1 கொத்து, மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி, உப்பு - தேவையான அளவு, கொத்தமல்லி தழை - சிறிதளவு (நறுக்கியது).
/indian-express-tamil/media/media_files/2025/07/22/screenshot-2025-07-22-155901-2025-07-22-16-00-28.png)
உருளைக்கிழங்கை தோல் சீவி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/22/screenshot-2025-07-22-155909-2025-07-22-16-00-28.png)
நறுக்கிய உருளைக்கிழங்கை தண்ணீரில் போட்டு 10 நிமிடம் ஊற வைக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/22/screenshot-2025-07-22-155919-2025-07-22-16-00-28.png)
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/22/screenshot-2025-07-22-155927-2025-07-22-16-00-28.png)
ஊற வைத்த உருளைக்கிழங்கை தண்ணீரில் இருந்து எடுத்து வாணலியில் போட்டு கிளறவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/22/screenshot-2025-07-22-155935-2025-07-22-16-00-28.png)
மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறி, குறைந்த தீயில் வேக விடவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/22/screenshot-2025-07-22-155942-2025-07-22-16-00-28.png)
உருளைக்கிழங்கு நன்றாக வெந்ததும், கொத்தமல்லி தழை தூவி, சூடாக பரிமாறவும். இதை தயிர் சாதத்துடன் சேர்த்து வைத்து சாப்பிட்டால்... சூப்பராக இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.