/indian-express-tamil/media/media_files/2025/08/31/screenshot-2025-08-31-171636-2025-08-31-17-17-49.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/08/31/screenshot-2025-08-31-171642-2025-08-31-17-19-15.png)
தேவையான பொருட்கள்
தக்காளி - 3/4 கிலோ, வெங்காயம் - 1/4 கிலோ, பச்சை மிளகாய் - 4, மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன், மல்லித்தூள் - 2 ஸ்பூன், மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன், சின்ன வெங்காயம் - 100 கிராம், இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு - 5 பல், மிளகு- 1/2 ஸ்பூன், சீரகம் - 1/2 ஸ்பூன், சோம்பு - 1, பட்டை ஏலக்காய் - 2, கிராம்பு- 4. கசகசா - 1/2 ஸ்பூன். தேங்காய் - அரை மூடி. பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன். கறிவேப்பிலை, கொத்தமல்லி. எண்ணெய் - 100 மி.லி. உப்பு - தேவையான அளவு.
/indian-express-tamil/media/media_files/2025/08/31/screenshot-2025-08-31-171648-2025-08-31-17-19-15.png)
அடுப்பில் ஒரு கடாயை வைத்து சூடானதும், அதில் சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/08/31/screenshot-2025-08-31-171654-2025-08-31-17-19-15.png)
பிறகு அதனுடன், இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம், சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு, கசகசா சேர்த்து வதக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/08/31/screenshot-2025-08-31-171700-2025-08-31-17-19-15.png)
அடுப்பை அனைத்து விட்டு தேங்காய் துருவல் மற்றும் பொட்டுக்கடலை சேர்த்து கலந்து விடவும். இதனை நன்கு ஆறவிட்டு மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்
/indian-express-tamil/media/media_files/2025/08/31/screenshot-2025-08-31-171705-2025-08-31-17-19-15.png)
இதனிடையே, ஒரு கடாயில் தண்ணீர் சேர்த்து, அது கொதித்து வந்தவுடன் தக்காளியை ஒரு இடத்தில் கீற்று போல வெட்டி சேர்க்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/08/31/screenshot-2025-08-31-171714-2025-08-31-17-19-15.png)
இவை நன்கு வெந்தவுடன் தக்காளியின் தோலை உரித்துக் கொள்ளவும். அதனை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர், ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/08/31/screenshot-2025-08-31-171722-2025-08-31-17-19-15.png)
பிறகு மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து வதக்கவும். மசாலாவுக்கு தேவையான தண்ணீர் சேர்த்து வதக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/08/31/screenshot-2025-08-31-171727-2025-08-31-17-19-15.png)
பிறகு, ஏற்கனவே வெட்டி வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்கிய பின்னர், மிக்சியில் அரைத்து வைத்துள்ள கலவையை சேர்க்கவும். இப்போது சுவையான தக்காளி குருமா பரிமாற தயார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.