/indian-express-tamil/media/media_files/2025/05/01/8J5khqMqBNFETDK2tGwg.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/05/03/S59oHJc5bPSV3YOPo5QF.jpg)
உடல் எடையை குறைக்க சரியான உணவு திட்டம் மற்றும் உடற்பயிற்சி மிகவும் முக்கியம். அந்த வகையில், மூன்று மாதங்களில் எவ்வாறு 25 கிலோ வரை உடல் எடையை குறைக்கலாம் என்று மருத்துவர் பிள்ளை தனது யூடியூப் சேனலில் குறிப்பிட்டுள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2024/11/26/BYUk8tALW4H2fGR9GEFg.jpg)
காலை (வெறும் வயிற்றில்)
வெதுவெதுப்பான நீரில் சியா விதைகள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்க வேண்டும். இல்லையென்றால், சர்க்கரை இல்லாத கிரீன் டீ குடிக்கலாம்.
/indian-express-tamil/media/media_files/2024/12/19/3jKD10sFDHdJ23Oo0j1p.jpg)
காலை உணவு
இரண்டு வேகவைத்த முட்டை வெள்ளைக்கருவுடன் பிரவுன் பிரெட் டோஸ்ட், பால் மற்றும் பழங்களுடன் ஓட்ஸ் (சர்க்கரை சேர்க்க வேண்டாம்) சாப்பிடலாம். இது தவிர மல்டி-கிரெய்ன் ரொட்டியுடன் சாலட் சாப்பிடலாம்.
/indian-express-tamil/media/media_files/zfjCQ25uHrUifRCcw8rs.jpg)
காலை 11:30 மணி
பழ சாலட் சாப்பிடுவது நல்லது. குறிப்பாக ஆப்பிள் மற்றும் கொய்யாப் பழங்களை சாப்பிடலாம் என்று மருத்துவர் பிள்ளை அறிவுறுத்துகிறார்.
/indian-express-tamil/media/media_files/B4fciQpVR997zBTl80Ye.jpg)
மதிய உணவு (பிற்பகல் 1:00 மணி முதல் 2:00 மணி வரை):
ஒரு சிறிய கிண்ணத்தில் பிரவுன் அரிசி (வெள்ளை அரிசி தவிர்க்கவும்), மல்டி-கிரெய்ன் ரொட்டி மற்றும் காய்கறி குருமா ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். நிறைய காய்கறிகளை உட்கொள்வதில் கவனம் செலுத்தவும்.
/indian-express-tamil/media/media_files/2025/01/19/kkPWnZXOrvLUZZx4bV1U.jpg)
இரண்டு சப்பாத்திகள் மற்றும் வறுத்த சிக்கன் அல்லது மீன் சாப்பிடலாம். மதிய உணவுடன் வெள்ளரிக்காய் அல்லது பழ சாலட் சாப்பிடலாம்.
/indian-express-tamil/media/media_files/TnV1zm95s1AbgDM9YPaR.jpg)
மாலை (மாலை 5:00-5:30 மணி)
சர்க்கரை இல்லாத பிளாக் காபி அல்லது கிரீன் டீயுடன் பருப்பு வகைகள் அல்லது விதைகள் சாப்பிடலாம்.
/indian-express-tamil/media/media_files/m2C9VV6viZB3xOYDJcQO.jpg)
இரவு உணவு (இரவு 7:00 மணி முதல் 8:00 மணி வரை)
காய்கறிகளுடன் பனீர் மற்றும் சூப் எடுத்துக் கொள்ளலாம். அசைவ சூப் (சிக்கன் அல்லது மட்டன்) சாப்பிட்டால், இறைச்சியைத் தவிர்க்க வேண்டும். இது தவிர ஒன்று அல்லது இரண்டு ரொட்டியுடன் கொண்டைக்கடலை சாப்பிடலாம்.
/indian-express-tamil/media/media_files/2jXLqfFbG3G9cZ3P6aoS.jpg)
தூங்கும் முன் (பசித்தால்)
நான்கு அல்லது ஐந்து பாதாம், மூலிகை டீ, தயிர், மோர் (சளி/இருமல் பிரச்சனைகள் இல்லை என்றால்) அல்லது ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்த வெதுவெதுப்பான பால் குடிக்கலாம்.
/indian-express-tamil/media/media_files/G6kS6Vn3e2n2YbCrkXgf.jpg)
உடற்பயிற்சி
மேலும், தினமும் குறைந்தது 30 நிமிடங்களாவது யோகா, ஜாக்கிங் அல்லது பிற உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். இவற்றுடன் தினமும் மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இவற்றை பின்பற்றி உடல் எடையை குறைக்கலாம் என்று மருத்துவர் பிள்ளை அறிவுறுத்துகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.