முடி வளர்ச்சி சுழற்சியின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு நாளும் 50-100 முடி இழப்பது இயல்பானது. ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், குறிப்பாக பெண்களில், கர்ப்பம், மாதவிடாய், பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) போன்ற நேரங்களில் முடி உதிர்வை ஏற்படுத்தும்.
2/7
இரும்புச்சத்து, வைட்டமின் டி, பி வைட்டமின்கள் போன்ற ஊட்டச்சத்து குறைபாடுகளும் முடி உதிர்வுக்கு வழிவகுக்கும். தைராய்டு கோளாறு, நீரிழிவு, ஆட்டோ இம்யூனிட்டி நோய்கள் போன்ற சில மருத்துவ நிலைமைகளும் முடி உதிர்வை தூண்டலாம்.
3/7
கீமோதெரபி, சில மருந்துகள் போன்ற சிகிச்சைகள் முடி உதிர்வை ஏற்படுத்தும். மன அழுத்தம், உடல் சோர்வு, மோசமான உணவுப் பழக்கவழக்கங்கள் போன்றவை முடி உதிர்வை தூண்டலாம்.
Advertisment
4/7
இப்போது இதற்கான ஒரு சிம்பிள் தீர்வை இந்த பதிவில் காணலாம்.
5/7
இதற்க்கு ஒரு 4 ஸ்பூன் வெந்தயம் எடுத்து தண்ணீர் சேர்த்து ஒரு பாத்திரத்தில் ஊற வைக்க வேண்டும்.
6/7
அடுத்த நாள் காலையில் அதை எடுத்து பார்த்தல் நன்கு ஊறி இருக்கும். அதனுடன் நான்கு பூண்டை சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.
Advertisment
Advertisements
7/7
இப்போது அந்த கலவையுடன் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து உங்கள் தலைமுடிக்கு ஒரு மாஸ்க்காக பயன்படுத்தினால் முடி உதிர்வுக்கு மெது மெதுவாக குறைந்துவிடும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news