/indian-express-tamil/media/media_files/2025/05/12/7jiOSfMmufKex62jX6wO.jpg)
/indian-express-tamil/media/media_files/B3HtC6EPXWGutZX5tnln.jpg)
ரத்த அளவை ஆரோக்கியமான அளவில் பராமரிப்பது நம் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் முக்கியமானது. போதுமான அளவு ரத்தம் இருந்தால் மட்டுமே நமது உடலில் ஆக்ஸிஜன் பரவல், ஊட்டச்சத்து வினியோகம் மற்றும் கழிவுகளை அகற்றுவது முறையாக இருக்கும்.
/indian-express-tamil/media/media_files/1WJZZ3IOESHxfAM2ifBr.jpg)
ஆனால் மரபியல், வாழ்க்கை முறை மற்றும் அடிப்படை சுகாதார நிலைமைகள் போன்ற ரத்த அளவை பாதிக்கும் பல்வேறு காரணிகள் இருக்கின்றன. இருப்பினும் சில உணவுகளை நாம் உட்கொள்வது மூலமாக ஆரோக்கியமான ரத்த அளவை முறையாகப் பராமரிக்க முடியும். சரி வாருங்கள் இந்தப் பதிவில் அத்தகைய உணவுகளைப் பற்றி பார்க்கலாம்.
/tamil-ie/media/media_files/uploads/2022/05/black-raisins-pexels.jpg)
கருப்பு திராட்சை ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும். கருப்பு திராட்சையில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது, இது ஹீமோகுளோபின் உற்பத்திக்கு அவசியமான ஒரு ஊட்டச்சத்து ஆகும். சீரான உணவோடு கருப்பு திராட்சையை சாப்பிடுவதால் ஆரோக்கியமான ஹீமோகுளோபின் அளவை பராமரிக்கலாம்.
/indian-express-tamil/media/media_files/kJUZf5A616AhNcBxnpup.jpg)
மாதுளை (pomegranate) சாப்பிடுவது ஹீமோகுளோபின் அளவை (hemoglobin level) அதிகரிக்க உதவும். மாதுளம் பழத்தில் இரும்புச்சத்து (iron) அதிகமாக இருப்பதால், இது இரத்த சிவப்பணுக்கள் (red blood cells) உற்பத்தியை ஊக்குவிக்கிறது. ஹீமோகுளோபின் என்பது இரத்த சிவப்பணுக்களில் உள்ள ஒரு புரதம், இது ஆக்ஸிஜனை உடலின் அனைத்து பாகங்களுக்கும் கொண்டு செல்கிறது.
/indian-express-tamil/media/media_files/2025/05/12/screenshot-2025-05-12-103934-529939.png)
கீரைகளை பச்சை இலைக் காய்கறி என அழைப்பார்கள். இதில் உடலுக்குத் தேவையான இரும்பு, வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி ஆகியவை உள்ளது. குறிப்பாக இரும்புச்சத்து, சிவப்பு ரத்த அணுக்களின் முக்கிய அங்கமாகும். இது உடல் முழுவதும் ஆக்சிஜனைக் கொண்டு செல்லும் ஹீமோகுளோபின் உற்பத்திக்கு உதவுகிறது. எனவே கீரைகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதால் ஆரோக்கியமான முறையில் ரத்த அளவை அதிகரிக்கலாம்.
/indian-express-tamil/media/media_files/2nMRkTEOhpdgKtsDAtjo.jpg)
பீட்ரூட் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும் ஒரு நல்ல உணவு ஆகும். பீட்ரூட்டில் இரும்புச்சத்து, மக்னீசியம், தாமிரம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின்கள் பி1, பி2, பி6, பி12 மற்றும் சி ஆகியவை நிறைந்துள்ளன. இந்த சத்துக்கள் இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்து, ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகின்றன.
/indian-express-tamil/media/media_files/2025/03/18/dlRKH7Druj9HhFMEtOs7.jpg)
அசைவ உணவை சாப்பிடுவோர் ஆட்டு ஈரல் மற்றும் ஆட்டு ரத்தத்தை அதிக அளவு எடுத்துக் கொள்ளலாம். இதில் அதிகப்படியான இரும்புச்சத்து மற்றும் புரதம் இருக்கிறது.
/indian-express-tamil/media/media_files/tPHz7W9e3btOahva8B7Y.jpg)
கத்தரி, கேரட், பீட்ரூட், சுரைக்காய் என்று அனைத்து காய்கறிகளையும் சேர்த்து காய்கறி சூப் செய்து குடிக்கலாம்.
/indian-express-tamil/media/media_files/2024/12/09/wyCzSEH6jObuhaAW0PWT.jpg)
தேனுடனும் அத்திப்பழத்துடனும் ஹீமோகுளோபினை அதிகரிக்கலாம். அத்திப்பழத்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது, இது ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும். தேன், அத்திப்பழத்தில் உள்ள இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/01/31/TLDS1Y5LalWJSTnYDB1a.jpg)
திரிபலா, நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்று மூலிகைகளின் கலவை. ஹீமோகுளோபின் குறைவாக உள்ளவர்கள் திரிபலா சூரணத்தை சாப்பிட்டு வர, ரத்த விருத்தி கிடைக்கும். ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். திரிபலா ரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கி, ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
/indian-express-tamil/media/media_files/nhvAvn8LZD7qAfr0daBD.jpg)
இந்த உணவுகளை தினமும் நம் சாப்பாட்டில் சேர்த்து வந்தால் ஹீமோகிளோபின் ரத்தத்தில் அதிகரித்து அனீமியா நோய் குணமாகும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.